கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2019

60 கதைகள் கிடைத்துள்ளன.

மின்மினி தேசத்து சொந்தக்காரன்

 

 சாம்பல் பூத்த தீவைப் போல தான் இருந்தது அந்த ஊர். பனி விலக்கிக் கொண்டுதான் நகர வேண்டும் போல…. ஆதியின் சப்தம் நிறைந்திருந்த வழியெங்கும் யாருமே இல்லை. காணும் மரங்கள் எல்லாம் இலைகளற்று மொட்டையாய் நின்றன. காற்றுக்கு மூச்சு பேச்சு இல்லை என்றுதான் தோன்றியது. அடைத்து வைத்த சதுரமோ வட்டமோ நீளமோ ஆங்காங்கே வீடுகளாகி நிற்பது போன்ற காட்சி தனித்த கவலையை உருவாக்கியது. அனல் வீசும் அற்புதத்தில் வீதியின் ஒரு முனை வாலாட்டிக் கொண்டு பார்ப்பது போல


அம்முவும் கேதார்நாத் தரிசனமும்

 

 மூன்றுஆண்டுகளாகப் பிரியப்பட்டு, பிரயத்தனப்பட்டு, இப்போதுதான் நிறைவேறப்போகிறது, மங்களம்மாளின் கேதார்நாத், பத்ரிநாத் தீர்த்தயாத்திரை விருப்பம். மங்களம்மாளுக்கு அறுபது வயதாகிறது. அவர்களுக்கு திருநெல்வேலி பூர்விகம். இரண்டு வருடங்களுக்கு முன் கணவர் கூட்டுறவுவங்கி உத்யோகத்திலிருந்து ஓய்வுபெற்ற மறுநாளே மாரடைப்பில் இறந்துபோனார். மூன்று மகன்கள். முதல்வன் மாசிலாமணிக்கு 40 வயதாகிறது. சற்று மந்தபுத்தி உடையவன். பள்ளிப்படிப்பை முடிக்காமல், யாரோடும் பழகாமல், அம்மாவைச் சுற்றியே, அவள் பாதுகாப்பிலேயே இந்த வயதிலும் இருப்பவன். எந்த வைத்தியமும் அவனைக் குணப்படுத்தவில்லை. தன் தேவைகளைத் தானே பார்த்துக்கொள்ளும் அளவில்


குழந்தை

 

 அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 கோயம்பேடு பஸ் ஸ்டேண்டுக்கு வந்து திண்டிவனம் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு திண்டிவனம் வந்து சேர்ந்தாள் ராணீ.பஸ்ஸை விட்டு கீழெ இறங்கி ராணீ தன் தலையை புடவைத் தலைப்பால் தன் முகத்தை பாதி மறைத்து கொண்டாள்.மெல்ல தன் வீட்டை நோக்கி நடந்தாள் ராணீ.தன் பையில் அவள் வைத்து இருந்த தாலியை எடுத்து தன் கழுத்தில் கட்டிக் கொண்டாள்.பிறகு மெல்ல தன் வீட்டு வாசலுக்கு வந்து “அம்மா,அம்மா” என்று மெல்ல


கனவு காணுங்கள்

 

 எப்போதுமில்லாத சந்தோசத்துடன் திரு பள்ளிக்கூடம் விட்டு வந்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்ததை தொட்டு தொட்டு பார்த்து குதூகலித்தான்.நடையை வேகமாக போட்டான். தாத்தா சுந்தரத்தை பார்த்து முதல் வேலையாக இதைச் சொல்ல வேண்டும். யாருக்கும் கிடைக்காதது தனக்கு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். திரும்பவும் கையில் வைத்திருந்த கொய்யா கன்றைத் தொட்டு பார்த்தான். பாவூரின் பள்ளிக்கூடத்தில் யாரோ அரசியல் கட்சியின் பொதுச்செயலாளருக்கு பிறந்த நாளாம். எப்படா கெடைக்கும்னு காத்திருந்து பெற்றது. ஆனால் அவர்களோ இந்தியா ஒளிர்கிறது நாமனைவரும் வளர்ச்சியை நோக்கி


சில நொடியில்…

 

 கதிரவன் தன்பயணத்தை இனிதே தொடங்கி வெண் கதிர்களால் அப்பகுதியை வெப்பப் படுத்திக் கொண்டிருந்தான். காலை மணி 10. சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு பேட்டைகளில் அழகாக வடிவமைக்கப்பட்ட நீச்சல் குளம் இருப்பது அவற்றின் சிறப்புகளில் ஒன்று. தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தின் அருகில் மஞ்சுளா சாய்வு நாற்காலியில் ஒய்யாரமாய் படுத்திருந்தாள். காதில் ஒலிப்பானை மாட்டியபடி இனம்புரியாத இசை ஒன்றைத் தனது கைபேசியிலிருந்து ரசித்துப் புன்னகைத்தாள். அவளது உடல் சாய்வு நாற்காலியை முழுதும் ஆக்கிரமித்து இருந்தது.