Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 10, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

குளம்பொலி

 

 “என்ன சப்தம்?” ………………….. “யாரங்கே?” நிசப்தம்……. அந்த யாமத்தின் மத்திமப்பொழுதில் இலேசான குளம்பொலிகள் கேட்டன. உற்றுக் கேட்ட நந்திவர்மன், அக்குளம்பொலிகளின் ஓசையைக் கணித்து, குடிலைவிட்டு வெளியேறித் தன் புரவியைத் தேடினான். “உதயா…..!’ நந்திவர்மனின் குரல் வசியத்தில் ஈர்க்கப்பட்ட உதயன் அமைதியாக அவனருகே சென்று சென்னியைத் தாழ்த்தி, தனது பிடரி மயிரை நந்திவர்மன் கோதிவிட வழிவகுத்தது. பலநாள் காத்திருப்பு ஆயிற்றே! அச்சிலநிமிடக் கிறக்கத்தின் பிடியில் இருக்கையில்… “காலம் கனிந்ததோ?” அவ்விருளிலும், உதயனின் வால் காற்றில் மிதந்து ‘ஆமாம்’ எனச்


பௌர்ணமி நிலவில்

 

  “பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா….”, ‘எப்எம்’ லிருந்து ஒலித்த பழைய பாடல் வரிகள் காற்றில் மிதந்து வர, வங்கக்கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வருண். சுருண்டு சுருண்டு, உருண்டு உருண்டு வந்த வண்ணம் இருந்தன அலைகள். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் இருந்தது. எவ்வளவு பார்த்தாலும் சலிப்பதில்லை கடல். கட்டாந்தரை போலில்லாமல், மெத்துமெத்தென்றிருக்கும் கடற்கரைமணலில், லேசாக வளைந்தும், நெளிந்தும் நடக்கும் மனிதர்கள். இறுக்கங்கள் சற்றுதளர்ந்த மன நிலையில், மெல்லிய சந்தோசம் பூசிய முகங்கள்.


உணர்வே கடவுள்

 

 ஒருவர் மலைகளை பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் மலையை முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை பார்த்துக் கொண்டே சென்றார் அப்பொழது எதிர்ப் பாராதவிதமாக அவர் கால்கள் நழுவின மலை மேலிருந்து தவறி கீழே விழத் தொடங்கினான். இதை மலைக்கு கீழே இருந்த மூன்று நபர்கள் பார்த்துவிட்டார்கள். இந்த மூவரும் வெவ்வேறு மதத்தினர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளமாட்டார்கள். தங்கள் மதக் கடவுளே உண்மையானவர் மற்ற மதத்தினரின் கடவுள் எல்லாம் போலிகள் என்று மூவரும்


காற்றிலே காவியமாய்

 

 அந்த அரங்கத்தில் பள்ளி முதல்வரின் உரை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்ததால் ஆசிரியர்கள் கூடிப் பேச ஆரம்பித்தனர். காவ்யா திறமைசாலி. ஒரு முறை நான் அவளின் வகுப்பில் இப்போது கடவுள் உங்கள் முன் நின்றால் அவரிடம் என்ன கேட்பீர்களோ அதை ஐந்து வரிகளில் எழுதி கொடுங்களென்றேன். அனைத்து மாணவர்களும் விதவிதமான ஆசைகளை எழுதினர். காவ்யா மட்டும் எனக்குக் கார் வேண்டும். காரில் என் அப்பாவை அருகே அமர்த்திச் செல்ல ஆசை என எழுதியிருந்தாள். இது அவளின்


நீதியின் நிழலில்

 

 “என்னப்பா…வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே…”பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து. இன்னும் சிலநாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.அதன் பொருட்டு வாக்குகேட்டு வரும் வேட்பாளரை வரவேற்க நாட்டாமையின் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள் அனைவரும். “ஐயா..வேற்பாளர் வந்துகிட்டிருக்காருங்க..தெரு முனையில் ஏழெட்டு காருங்க வந்துகிட்டிருக்குங்கய்யா..!”நாட்டாமையிடம் பவ்யமாக கிசுகிசுத்தார் பண்ணையாள். “சரி..சரி..வர்றவங்களுக்கு இனிப்பு,இளநீர் எல்லாம் ரெடி பண்ணி எடுத்து வை..”என்றபடியே சவுரிமுத்துவின் இளையமகனை அழைத்து அவன்காதில் ஏதோ கிசுகிசுத்து அனுப்பினார் நாட்டாமை. புள்ளிமான் போல