கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 7, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

உதட்டோடு முத்தமிட்டவன்

 

 யாரிடமாவது பேசி, மனசிலுள்ளதை பகிர்ந்து கொண்டால் தேவலையே என்று பரிதவித்தாள் ரேணுகா. ஒருத்தரும் கிடைக்கவில்லை. எல்லாரிடமும் ‘இதை’ப் பேசிவிட முடியாது. தன்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். வீட்டில் பத்த வைப்பார்கள். புகையுமா குப்பென பற்றி எரியுமா என்றும் அனுமானிக்க முடியாது. அந்த வெப்பம் தன்னைச் சுடும்போது ஒருவேளை தானும் ‘அவளை’ப் போல எதுனாச்சும் செய்ய வேண்டி வரலாம். சட்டென ஒரு கீற்று ரேணுகா மனசில். இதே போலத் தான் அவளுக்கும் நடந்திருக்குமோ… அந்த புழுக்கம் தான் அவளை


சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்…

 

 லீலாவின் கணவன் திருந்தி விட்டான்.. மதிக்கு நிம்மதியாக இருந்தது.. திருந்தி விட்டேன், திருந்தி விட்டேன் என்று சாக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தவன் இப்போது உண்மையிலேயே திருந்தி விட்டான்.. லீலா கூட இப்போது கணவனைப் பார்க்கும் போது வெட்கப்படுகிறாள். லீலா வெட்கப்படும் போது மதிக்கும் மிதமிஞ்சிய வெட்கம் வந்து விடும்.. அவள் முகத்தைத் திருப்பிக்கொள்வாள்.. சில வேளைகளில் ராஜம்மாவின் போக்கு மதிக்கு மிகவும் ஆத்திரத்தைக் கொடுக்கும்.. இப்படியா ஒரு பெண் மருமகளை வைத்துக் கொடுமைப் படுத்துவாள்.. ம்.. அவள் மாமிக்காறி


இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்

 

 “மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்”, எழுப்பினான் சேகர், புரண்டு படுத்த கவிதாஞ்சனுக்கு இவற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை, “நல்ல கனவைக் கலைச்சுட்டியே…, போடா…”, மறுபடியும் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான் கவி. கல்லூரி வளாகம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. சில மாணவர்கள் முதலாண்டு மாணவர்களை, வெற்றுத் தரையில் கொடியேற்றச் சொல்லியும், இரயில் ஓட்டச் சொல்லியும், புற்தரையில் நீச்சல் அடிக்கச் சொல்லியும் ராகிங் என்ற பெயரில்


சமர்ப்பனம்

 

 “ஐயா,இது போலீஸ் ஸ்டேஷனுங்களா…எம்மவனை காப்பாத்துங்கய்யா…’வெட்டியா ஊரை சுத்திசுத்திவர்றீயே..படிப்புக்கேத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைக்குற வேலைக்கு போயேன்’னு சத்தம் போட்டேன்..அதுக்காக கோவிச்சிகிட்டு 200அடி உயர செல்போன் டவர்ல ஏறி கீழே விழுந்து சாகப்போறேன்னு அடம் பண்றான்…உடனே கிளம்பி வாங்கய்யா”பதட்டத்தில் அதற்கு மேல் வார்த்தை வராமல் நாக்கு குழற இணைப்பை துண்டித்தாள் சாரதா. அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஸ்பாட்டில் இருந்தது போலீஸ்.தீயணைப்பு வீரர்கள் டவரைச்சுற்றி வலைவிரித்து வாகாக நின்றார்கள். குதிப்பதிலேயே குறியாய் நின்றவனிடம் …கூம்புக்குழாய் வழியே குசலம் விசாரித்துக்கொணடிருந்தார் இன்ஸ்பெக்டர்.அவனோ


சின்னதாத்தா

 

 சின்ன தாத்தாவைப் பற்றிய என் நினைவுகள், சிறு வயதிலிருந்தே அழகான படிமங்களாக சேர்ந்திருந்தது. நான் என் அண்ணா, பக்கத்து வீடுகளிலிருந்த எங்கள் நண்பர்கள் என அனைவரும் அவரை ஒரு அழகான கதை சொல்லியாகவே அறிந்திருந்தோம். விசாலமான முற்றத்தை கொண்ட மர வேலைப்பாடுகள் நிறைந்த காரை வீடு எங்களுடையது. வீட்டின் தரைகளை பெரும்பாலும் சிமெண்டால் பூசி சில இடங்கள் மாட்டு சாணம் கலந்த களிமண் பயன்படுத்தி மெழுகப்பட்டிருகும். காற்றோட்டமான திறந்த வெளி வராண்டாவில் தூங்குவது தான் எங்கள் வழக்கம்