கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 22, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

நூடுல்ஸ் கேட்ட அணில்!

 

 அம்மா கொண்டுவந்த பழங்களைப் பார்த்ததும், குட்டி அணிலின் முகம் சுருங்கியது. “எப்பப் பார்த்தாலும் இதே பழங்களும் பருப்புகளும்தானா? வேற எதுவும் சாப்பிடக் கொடுக்க மாட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டது. “பழங்களும் பருப்புகளும்தானே நம் உணவுகள். இவற்றைச் சாப்பிடாமல் வேறு என்ன வேணும் உனக்கு?” என்று புன்னகையோடு கேட்டது அம்மா அணில். “அம்மா, இந்தக் காட்டுக்குச் சுற்றுலா வரும் மனிதக் குழந்தைகள் சாப்பிடுவதுபோல இட்லி, தோசை, நூடுல்ஸ் என்று எனக்கும் செய்து கொடுக்கக் கூடாதா? “என்னது? இட்லி, தோசை,


நஞ்சு போன பிஞ்சு

 

 மரத்திலிருந்த இலைகள் சருகுசருகாய் காய்ந்து விழுந்துகொண்டிருந்தன. பலநாள் உழைத்த களைப்பால் நாய்கள் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு எலப்பு வாங்கின. வாகனங்கள் ” டர் டர்” என்ற சத்தத்துடன் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தன. இரைச்சலுக்கு மத்தியில் பதினெட்டாம் நம்பர் பேருந்து அண்ணாநகர் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது. அதில் நாற்பது வயதுடைய முத்தழகி பதினொரு வயது வினோதினியுடன் கீழே இறங்கினாள். ” இங்கேரு புள்ள, பக்கத்துலதான் நம்ண ராசாராசாத்தி டாக்டரு இருக்காக. ஒன்னும் கவலப்படாத. எல்லாம் சரியாய்டும்.” ”


வீரன் மகள்

 

 பள்ளிக்கூடத்திலிருந்து வேலை முழ்்து திரும்பிய நளினா காபி கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்ததில் தாய் பங்கஜத்துக்கு மனம் தாளவில்லை; பதைத்துப் போனாள். “என்னம்மா நளினா, தலை வலிக்குதா? தைலம் வேணாத் தடவி விடட்டுமா?” என்று அருகில் சென்றாள். நளினாவின் நெற்றியில் கனிவுடன் கை வைத்துப் பார்த்தாள். “வலியெல்லாம் இல்லம்மா… கொஞ்சம் மனசு சரியில்லை அதான்!” “படுத்திட்டிரு. இதோ வரேன்!” என்று திரும்பி அடுக்களைக்குப் போன நளினாவின் தாய். சூடாகக் காபி போட்டு எடுத்து


காதலெனப்படுவது யாதெனின்…

 

 ஜானகியைப் பார்ப்பேனென்று நான் நினைக்கவேயில்லை. அலங்கரிக்கப்பட்ட யானை,கோவில் மரத்திலிருந்து பிடுங்கிய தென்னை மட்டையின் கீற்றுக்களை துதிக்கையால் வளைத்து இழுத்து உடைத்து உண்பதை அவள் காலருகில் இருந்த குழந்தை மிரட்சியுடனும் ஆர்வத்துடனும் கவனித்துக் கொண்டிருந்தது. மாப்பிள்ளை அழைப்புக்கான கார்,ஜெனரேட்டர் பொருத்தப்பட காத்திருந்தது.பட்டுப் புடவைகளில்,மின்னும் நகைகளில், தூக்கலான மேக் அப்களில் நிறைய பெண்கள். அரட்டையடித்தபடி,சிகரெட் பிடித்தபடி ஆண்கள்,வழி கேட்கிற வண்டிகளின் ஹார்ன் சப்தங்கள், அத்தனை பரபரபப்பில்,ஜானகி,ஜானகி ராகவன், நான் பார்ப்பதை அறியாமல்,அருகிலிருந்த பெண்ணிடம் ஏதோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.கொண்டிருந்தாள் என்று


திரௌபதை

 

 அந்தக் குடிசையில் உள்ளே நுழைந்தபோது விளக்கின் ஒளி எங்கும் நிறைந்திருந்தது. சுவற்றில் கண்ணாடி போட்ட அட்டையினுள்ளே புகைப்படமாக கோவிந்தனும் அவனது மனைவி வெண்மதியும் திருமணக்கோலத்தில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் கோவிந்தன் வெண்மதியுடன் அழகான ஒரு ஆண்குழந்தையும் புன்னகை ததும்ப வீற்றிருந்தனர். அனேகமாக அப்புகைப்படம் குழந்தையின் முதலாம் பிறந்தநாளன்று எடுத்திருக்கிறார்கள். அடுத்தப் புகைப்படம் கோவிந்தன் வெண்மதி மகன் முத்து மகள் ஜானகியுடன் குடும்பப் புகைப்படமாக அந்தச் சுவற்றினை அலங்கரித்திருந்தார்கள். அடுத்ததொரு புகைப்படம் புதியதாக அங்கே