கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2018

40 கதைகள் கிடைத்துள்ளன.

விவாகரத்து?

 

 “வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு. அப்பா ஊருக்கு வரச்சொல்றாரு ” என்றான் நடராஜன். எதுக்கு என்று கேட்டான் குமார். எல்லாம் என் பொண்டாட்டி பண்ற வேலைதான்.அவளுக்கு விவாகரத்து வேணுமாம்” பதில் சொன்ன நடராஜன் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது. கேட்டா நீ கொடுக்கணுமா. “அவங்க கேட்கட்டும் நீ முடியாதுன்னு சொல்லிடு” என்றான் குமார். “இல்ல, அப்பா கோர்டில விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ண வரச்சொல்றாரு” என்றான் நடராஜன். நீ வரமுடியாதுன்னு உங்க அப்பா கிட்ட தெளிவா சொல்லிடு. இப்போதைக்கு ஆறப்


ஓவியம் உறங்குகின்றது

 

 “இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக் காலத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன” என்ற முதலாம் பக்கத்தில் உள்ள மூன்றாம் பந்தியை வசித்து கொண்டிருக்கும் போது அவனின் தந்தையின் இருமல் சத்தம் கேட்டு புத்தகத்தை மூடி தலையணைக்கு கீழே ஒழித்துவிட்டான் நீயானாகி. அவனின் பெயர் போன்று அவனும் வித்தியாசமானவன் ஓவியம் வரைதலில் அசாத்திய திறமை படைத்தவன். ஆனால் என்னவோ அவனின் ஓவியங்களை யாரும் ஏறடுத்தும் பார்ப்பதில்லை பார்த்தாலும் பொறாமை வழியும் நாவுகள் கடும் சொற்களை கக்கும்.


பிருந்தா ஹாஸ்டல்

 

 கலாவின் காதுக்குள் வந்து அவள் கணவன் ஏதோ சொல்லியதும் அவள் சீ என்று எரிந்து விழுந்தாள். அவள் முகத்தை பார்த்ததும் பாலுவுக்கு அருவருப்பாக போய்விட்டது. என்ன கேட்டுவிட்டோம் என்று இப்படி கத்தினாள். ‘’ராத்திரி முழுக்க பாலா பாலான்னு கொஞ்சுறா, காலைல வெலகி வெலகி ஓடுறா. என்ன ஆச்சு இவளுக்கு. இன்னைக்கி ராத்திரி வாடி ஒனக்கு இருக்கு தீபாவளி’’ என்று மனதிற்குள் கறுவிக்கொண்டே சாப்பிடாமல் ஆபிசுக்குப் போய்விட்டார். கலா பிருந்தாவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். டிவியை


இளைஞர்களின் மனசு

 

 பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் அன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. வண்டி திக்கி திணறி செலவ்து போல் தோன்றியது.நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தோம். மணி நண்பகல் மூன்று மணி அளவில் இருக்கும். மதியத்தூக்கம் கண்ணைச்சுழற்றியது. பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் கம்பியை பிடித்து தூங்கி தூங்கி என் மீது விழுந்து என்னையும் தடுமாற செய்து கொண்டிருந்தார்.சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களை பார்த்தேன்.அவர்கள் பாடு என்னை விட மோசமாக இருந்தது. ஒருவர் மீது ஒருவர் விழுந்து தூக்கத்திலேயே


வீட்டுப் பசி

 

 நம் எல்லோருக்குமே சில விஷயங்களில் நம்மையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதே ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் பைத்தியக்காரப் பசியாக மாறிவிடும். எந்தப் பசியும் தவறல்ல, அது அடுத்தவர்களைப் பாதிக்காத வரையில்… சிலருக்கு பக்திப் பசி; பலருக்கு பணப் பசி; பாலியல் பசி; குடிப் பசி; ரேஸ் பசி; சீட்டாட்டப் பசி; பதவிப் பசி என்று பல பசிகள். சில சந்தர்ப்பங்களில் இந்தப் பசியே நம்மைப் புசித்தும் விடும். என்னுடன் படித்த மாடசாமிக்கு சிறிய வயதிலேயே அகோர வீட்டுப்