Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2018

50 கதைகள் கிடைத்துள்ளன.

வல் விருந்து

 

 கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் தேய்த்துக் குளியல். தவசிப் பிள்ளை, வாராது வந்த கனகமாமணி என்று கும்பமுனியைப் போற்றுவது காரணமாக இருக்கலாம். தாங்க ஆளுண்டு என்றால் தளர்ச்சியும் உண்டுதானே!


மையத்து வீடு

 

 ஜனாஸாவைத் தூக்குங்க நேரமாச்சி பள்ளிக்குப் போக்குல்ல அஸருக்கு பாங்கு சொல்லவும் சரியா இருக்கும்” என்று ஜனாஸா வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார் மோதினார். இல்யாஸ் காக்கா என்றால் ஓட்டமாவடியில் தெரியாதவர்களே இல்லை. அந்தளவுக்கு மக்களிடையே அறிமுகமானவர் தான் இல்யாஸ் காக்கா. மரணவீடு, திருமணவீடு, வருத்தக்காரர் வீடு என்று எங்கு வேண்டுமானாலும் காக்காவைக் காணலாம். அதனால் இல்யாஸ் காக்கா ஊரில் எல்லோருக்கும் பரிச்சயமானவர். ஊரில் பெரியவர் முதல் சிறியவர் வரை இல்யாஸ் காக்கா என்றே அழைப்பர். காய்ச்சல் வந்து ஒரு கிழமையா


ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…

 

 செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து வாசிக்கத் தொடங்கினார். இவர்களையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்த ராவின் உடல், மின்சாரம் பாய்ந்ததுபோல ஒரு கணம் குலுக்கிப்போட்டது. கண்களை மூடினார். எட்டு வயதில் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிய கோயிலில் இருந்து திரும்பி வரும்போது, மேடையில் ஒருவர் நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார். அவர் வாழ்க்கையில் கேட்ட முதல் பாடல் அது. தனது அறுபது வயதில் எத்தனை முறை இந்தப்


தண்டனை

 

 ட்ரம்ஸ் அடிப்பின் அதிர்வில் செவிப்பறை கிழிந்தது. வீட்டுக்கு முன் வீதி நடுவில் செத்தை, குப்பைகளை எரித்து, சுற்றி வட்டமாக நின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இளைஞர்கள். கட்டுப்படி பாண்டு செட் என்று கோணல் மாணலாக நீல பெயிண்டில், வட்ட வடிவமான எல்லாப் பறை வாத்தியங்களிலும் எழுதியிருந்தது. இரண்டு கைகளிலும் குச்சி வைத்து, ரிதத்துடன் அடித்து, வெளுத்துக் கொண்டிருந்தார்கள். எழுந்து, அந்தப் பறை இசைக்கு, சுயம் மறந்து ஆடலாம் எனக் கால்களும், கைகளும், உடம்பும் பரபரத்தன. கூடவே, மனசும்.


விவாகரத்து

 

 எப்போது விடியும் விடியுமென்று காத்துக்கிடந்த நதினிக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. தூங்குவதற்கும் அவள் மனம் சம்மதிக்கவில்லை. சற்று கண்ணசரலாம் என்று இமையை எப்படியாவது கஸ்டப்பட்டு மூடினாலும் அவைகள் சிறகை விரித்துப் பறக்கும் பறவைபோல் திறந்துகொள்கின்றன. அந்த சிறிய அறைக்குள் நடந்து பார்த்தாள். மீண்டும் பெட்டின்மீது வந்து அமர்ந்து பார்த்தாள். சற்றுநேரம் கழித்து ஜென்னல் கதவைத் திறந்துகொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள். இதற்கிடையில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டாள். இவள் பதட்டத்தைப் புரிந்துகொள்ளாத அந்தக் கடிகாரம் இயல்பாகத்


வெள்ளைக்கத்ரி

 

 வெள் விழியை சுற்றிய கரு வெளியைப் போல் இரவின் அழகு இதமாய் ஜொலித்தது. கோபுரகலசத்தின் உச்சி முனையில் வெள்ளிப் பந்தை உருட்டி வைத்தார் போல் பெளர்ணமி நிலா நழுவி விழாமல் நடு நாயமாய் நின்றதை நான் மட்டும் ரசித்தேனா? இல்லை என்னை போல் எந்த சுமையையும் ஏற்றி கொள்ளாமல் முதுகையும், மூளையையும் வெற்றிடமாய் வைத்துக் கொள்ளும் பலரும் ரசித்திருப்பார்களா என்று என்னால் தெளிவாய் சொல்ல முடியவில்லை. வேலை பளு இல்லை என்று நான் பெருமையடித்து கொண்டாலும் எனக்கு


நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !

 

 (வரும் + வரவழைக்கப் படும்) நோய்(கள்) அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ! கஞ்சியை டம்ளரில் ஆற்றிக் கொண்டு வந்த கவிதா, ஹாலில் கட்டிலில் படுத்திருந்த தன் தாயிடம் கொடுத்து, குடிக்கச் சொன்னாள். வலது கையில் மாவுக்கட்டு போடப்பட்டு இருந்ததால், இடது கையில் டம்ளரை லாவகமாகப் பற்றியபடி பருகும் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தவள், சமயலறையிலிருந்த வந்த குக்கர் விசில் சத்தம் கேட்டு உள்ளே போனாள். அவளின் கரங்கள் காய்களை நறுக்க ஆரம்பிக்க, சிந்தனை முழுவதும் கட்டிலில் படுத்திருக்கும்


கஸ்தூரி

 

 வருடம் 1960 : செங்கல்பட்டிற்கு அருகே ஒரு கிராமம். என் சொந்த ஊர். அங்கு இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீடு எல்லைக் காளியம்மன் கோவில் தெருவில். அதற்கு அப்புறம் நெடுஞ்சாலை தான். எனது பக்கத்து வீட்டில் கஸ்தூரி குடி இருந்தாள். அவளுக்கு என்னை விட இரண்டு வயது அதிகம். நான் படிக்கும் அதே மிஷன் பள்ளியில் அவளும் நான்காவது வகுப்பு. இரண்டு பேரின் குடும்பமே நடுத்தர வர்க்கம் தான். நல்ல நட்பின் உதாரணம் நாங்கள்.!


நன்றாய் இருக்கும்போது உறவுகள் தெரிவதில்லை

 

 அப்பா இந்த படத்தை பாரேன்? அகிலா கொஞ்சம் பேசாம போறியா, எனக்கு இங்க தலைக்கு மேல வேலையிருக்கு. மகள் முகம் சுருங்கி போப்பா நீ எப்பவுமே இப்படித்தான் ! சொல்லிக்கொண்டே நின்று கொண்டிருந்தாள் ஏங்க கொஞ்சம் அந்த குழந்தைகிட்ட பேசுனாத்தான் என்ன? பாருங்க அவ முகம் எப்படி மாறிப்போச்சுன்னு,சொல்லிக்கொண்டே வந்த என் மனைவியிடம், நீ பேசாம இரு எனக்கு இப்ப இந்த கணக்கை முடிச்சாகணும், நாளைக்கு காலையில மேனேஜர் டேபிளில இருக்கணும்னு சொல்லியிருக்காரு.அதனால வீட்டுக்கு எடுத்துட்டு வந்து


சுழற்சி

 

 அப்போது நான் பாளையங்கோட்டை தூயசவேரியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மேத்ஸ் பாடம் நடந்து கொண்டிருந்தபோது என்னுடைய வகுப்புத் தோழனும், சிறந்த நண்பனுமாகிய ரத்தினவேலுவின் சித்தப்பா பதட்டத்துடன் வகுப்பறைக்கு வந்து, அவனுடைய அப்பா மாரடைப்பில் இறந்துவிட்டதாகச் சொல்லி அவனை கையோடு அழைத்துச் சென்றார். அதற்குப் பிறகு ரத்தினவேல் பள்ளிக்கூடம் வரவில்லை. படிப்பு போதும் என்று அவனுடைய வீட்டார் அவனை நிறுத்தி விட்டார்கள். அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் குடும்பத் தலைவர் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தின் மூத்த