கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 7, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

வல் விருந்து

 

 கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் தேய்த்துக் குளியல். தவசிப் பிள்ளை, வாராது வந்த கனகமாமணி என்று கும்பமுனியைப் போற்றுவது காரணமாக இருக்கலாம். தாங்க ஆளுண்டு என்றால் தளர்ச்சியும் உண்டுதானே!


மையத்து வீடு

 

 ஜனாஸாவைத் தூக்குங்க நேரமாச்சி பள்ளிக்குப் போக்குல்ல அஸருக்கு பாங்கு சொல்லவும் சரியா இருக்கும்” என்று ஜனாஸா வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார் மோதினார். இல்யாஸ் காக்கா என்றால் ஓட்டமாவடியில் தெரியாதவர்களே இல்லை. அந்தளவுக்கு மக்களிடையே அறிமுகமானவர் தான் இல்யாஸ் காக்கா. மரணவீடு, திருமணவீடு, வருத்தக்காரர் வீடு என்று எங்கு வேண்டுமானாலும் காக்காவைக் காணலாம். அதனால் இல்யாஸ் காக்கா ஊரில் எல்லோருக்கும் பரிச்சயமானவர். ஊரில் பெரியவர் முதல் சிறியவர் வரை இல்யாஸ் காக்கா என்றே அழைப்பர். காய்ச்சல் வந்து ஒரு கிழமையா


ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…

 

 செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து வாசிக்கத் தொடங்கினார். இவர்களையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்த ராவின் உடல், மின்சாரம் பாய்ந்ததுபோல ஒரு கணம் குலுக்கிப்போட்டது. கண்களை மூடினார். எட்டு வயதில் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிய கோயிலில் இருந்து திரும்பி வரும்போது, மேடையில் ஒருவர் நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார். அவர் வாழ்க்கையில் கேட்ட முதல் பாடல் அது. தனது அறுபது வயதில் எத்தனை முறை இந்தப்


தண்டனை

 

 ட்ரம்ஸ் அடிப்பின் அதிர்வில் செவிப்பறை கிழிந்தது. வீட்டுக்கு முன் வீதி நடுவில் செத்தை, குப்பைகளை எரித்து, சுற்றி வட்டமாக நின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இளைஞர்கள். கட்டுப்படி பாண்டு செட் என்று கோணல் மாணலாக நீல பெயிண்டில், வட்ட வடிவமான எல்லாப் பறை வாத்தியங்களிலும் எழுதியிருந்தது. இரண்டு கைகளிலும் குச்சி வைத்து, ரிதத்துடன் அடித்து, வெளுத்துக் கொண்டிருந்தார்கள். எழுந்து, அந்தப் பறை இசைக்கு, சுயம் மறந்து ஆடலாம் எனக் கால்களும், கைகளும், உடம்பும் பரபரத்தன. கூடவே, மனசும்.


விவாகரத்து

 

 எப்போது விடியும் விடியுமென்று காத்துக்கிடந்த நதினிக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. தூங்குவதற்கும் அவள் மனம் சம்மதிக்கவில்லை. சற்று கண்ணசரலாம் என்று இமையை எப்படியாவது கஸ்டப்பட்டு மூடினாலும் அவைகள் சிறகை விரித்துப் பறக்கும் பறவைபோல் திறந்துகொள்கின்றன. அந்த சிறிய அறைக்குள் நடந்து பார்த்தாள். மீண்டும் பெட்டின்மீது வந்து அமர்ந்து பார்த்தாள். சற்றுநேரம் கழித்து ஜென்னல் கதவைத் திறந்துகொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள். இதற்கிடையில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டாள். இவள் பதட்டத்தைப் புரிந்துகொள்ளாத அந்தக் கடிகாரம் இயல்பாகத்