கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2018

80 கதைகள் கிடைத்துள்ளன.

அனுபூதி

 

 “ஏனுங்கோ. கருவேப்பிலை வாங்கி வாங்களேன்” சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் சீதை. “என்னது ? நான் இன்னா செய்துட்டிருக்கேன், எத்தனை தடவை சொல்றது, தியானம் பண்ணும்போது இடைஞ்சல் செய்யாதே-ன்னு கேட்கவே மாட்டியா ! நீயே போய் வாங்கிக்கோ” என்று சொல்லிவிட்டு கண்களை மூடி தனியறையில் தியானத்தைத் தொடர்ந்தான் இராமன். “இவக, எதுக்குத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டாங்களோ?, கட்டுன பொஞ்சாதிக்கு ஒரு கருவேப்பிலைக் கூடவா வாங்கி தர முடியாது, நான் என்ன ? நகைநட்டா வாங்கி தாங்க-ன்னு கேட்டேன்” முனகியபடியே கடைக்கு


திருடன்

 

 திரும்பத் திரும்ப அதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அந்தக் காவல் துறை அதிகாரியும் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியையேதான் கேட்டுக்கொண்டிருந்தார். விசாரணைக்கு இடையில் அவளுக்கு ஒரு தேநீர் கிடைத்தது. அதை வாங்கிக் குடித்துவிட்டு தனது முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு தலைமுடியை அவிழ்த்து உதறி மீண்டும் கோடாலிக் கொண்டை போட்டுக் கொண்டாள். உள்ளே போன அதிகாரி மீண்டும் அவளிடம் வந்தார். “உண்மையைச் சொல்லுமா…ஒரு லட்சமா வெச்சிருந்த” “ஆமாஞ் சாமி. ஒருலச்ச ரூபா சாமி. குருவி சேக்கரமாதிரி சேத்து வச்சிருந்த பணம்.


ஒரு தாய் மக்கள்!

 

 அண்டை வீட்டுக்காரன் அடியோடு அழிந்தாலும் பாதகமில்லை. தனக்குப் பாதகம்,பாதிப்பு கூடாது. இருப்பதைக்கூட பகிர்ந்து கொடுத்துதவக்கூடாது என்கிற சகமனித பாசநேசம் கொஞ்சமும் இல்லாமல் கர்நாடகம் காவிரியை அடைத்து தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்காமல் அழிச்சாட்டியம் செய்தாலும் அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் பூமித்தாய் வயிற்றிலிருந்து வாரி வழங்கும் நீரில் நெல், கரும்பு, வாழை, கேழ்வரகு, சோளம், கத்திரி, வெண்டை, மிளகாய் என…..அனைத்துவகை பயிரினங்களையும் வளர்த்து விளைவித்து எக்காலத்தும் எந்நேரமும் பச்சைப் பசேலென்று இருக்கும் இடம்தான் அ+டுதுறைக்கு அடுத்து இருக்கும் அனுப்பப்பட்டி கிராமம்.


தாகம்

 

 நிலக்கடலைக் காட்டில் ஐந்தாறு பெண்கள் நிலக்கடலைச் செடியைக் கொத்துக் கொத்தாகப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். நல்ல முற்றின கொட்டைகள். “இந்தப் பூமிக்கு நிலக்கடலை நல்லா வெளையும்… இந்த வச எச்சாவே வெளைச்சல் கண்டிருக்கு” என்று வரப்பில் மீசையை முறுக்கியபடி நின்று சொன்னார் ராமசாமி மிராசு. ஒர் பெண் திரும்பிப் பார்த்து அவர் அருகில் யாருமில்லாமைக்காகச் சிரித்தாள்.” “சடையன் சம்சாரம் வள்ளிப் புள்ளையாலே அது? அதென்ன சிரிப்பாணி? மிரட்டினார் மிராசு.” “எசமான் தன்னந் தனியாப் பேசறீங்களேன்னு சிரிச்சேனுங்கோ…” “உம்.. உம்..


மாமரங்கள்

 

 கெளதம புத்தருக்கு சிறிய வயதில் போதி மரத்தினடியில் ஞானோதயம் ஏற்பட்ட மாதிரி, என்னுடைய சிறிய வயதில் எனக்கு பெண்களைப்பற்றிய சுவாரஸ்யமான ஆர்வம் ஒரு மாமரக்கிளையில் அமர்ந்திருந்தபோது ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல. அப்போது எனக்குப் பதினைந்து வயது. நெல்லை திம்மராஜபுரம் அக்கிரஹரத்தில் வீடு. பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அக்கிரஹாரத்தின் வலது இடது புறங்களில் வரிசையாக நூறு, நூறு வீடுகள். அதில் இடதுபுற வீடுகளின் பின்னால் கொல்லைப் புறத்தில் நீண்ட வாய்க்கால். அது தாமிரபரணியின் கிளை. கோடை காலங்களைத் தவிர,