கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 15, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

காற்றில் படபடத்த ஒரு காசோலை!

 

 பஞ்சாயத்துத் தலைவர் முனியாண்டி அனல் பறக்கும் விழிகளுடன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவரைச் சுற்றி அமர்ந்திருந்த ஏழெட்டு மனிதர்கள், தலைவரின் கோபத்தை எப்படித் தணிப்பது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். “ஏங்க சுப்பையா, அந்தக் கெழவன் என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கான்? நாம யாருன்னு இன்னும் அவனுக்கு சரியாப் புரியலை போல!” என்று உறுமினார் தலைவர். “தல, நீங்க ஒண்ணும் கோபப் படாதீங்க. ஊர்ல ரொம்பப் பயலுவ தெனாவட்டாத்தான் திரியறானுவ. அதுல இந்தக் கெழவரும் ஒண்ணு. நம்மையெல்லாம் விரோதிச்சுகிட்டு ஒரு


அம்மாவின் அசத்தல்

 

 படலை திறக்கும் சத்தங்கேட்டுத் தன் வீட்டுக் கதவை திறந்து வாசலைப் பார்த்தாள் பாக்கியம். வருவது அவள் கணவன் சிவகுரு என்று கண்டதும். “என்னங்க நேரத்தோட வந்திட்டீங்க . மழையும் விட்டபாடில்லை என்ன” “வேறென்ன பின்ன, முந்தநாள் பிடிச்ச மழை, கொஞ்சமும் ஈவு இல்லாம பேஞ்சுகொண்டுதான் இருக்கு. ஆத்துல கரப்பு குத்தவும் முடியல்ல. தண்ணி கழுத்தளவுக்கு போகுது. இண்டைக்கு கறிப்பாட்டுக்கும் ஒண்டும் அம்புடயில்ல. அதுதான் வந்திட்டன்” அலுத்துக்கொண்டான் சிவகுரு. “சரி,சரி பரவாயில்ல நீங்க வந்ததும் நல்லதாப் போயிற்று. இண்டைக்கு


கொக்கும் மீனும்

 

 ஒரு மடைவாயில் கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது, அந்த மடையில் வந்து கொண்டிருந்த ஒரு கொழுத்த மீன் அந்தக் கொக்கைப் பார்த்தது. பார்த்தவுடன் அது பயந்து அப்படியே நின்று விட்டது. அந்த மீனின் தாய், அதனிடம் கூறிய சொற்கள் அதற்க்கு நினைவுக்கு வந்தன. “கொக்குகள் நிற்கும் இடத்தைக் கண்டால் அங்கே போகாதே, அவை மீன்களைப் பிடித்துத் தின்றுவிடும்” என்று அது கூறியிருந்தது. எனவேதான் அந்தக் கொழுத்த மீன் கொக்கைக் கண்டவுடன் பயந்து நின்று விட்டது. ஆனால், அதைக்காட்டிலும்


சாமத்தியமான சோதிடன்

 

 ஒரு சிற்றூரில் ஆனந்தன் என்பவன், தன் மனைவியோடும், இரண்டு குழந்தைகளோடும் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் கைவசம் இருந்த பணமும், நகையும் செலவழிந்தது; வேலை எதுவும் கிடைக்கவில்லை, சில நாட்கள் பட்டினி கிடக்கவும் நேரிட்டது. மனைவி, மக்களோடு ஊர் ஊராக அலைந்தான் ஆனந்தன். அடுத்த ஊரில் இருக்கும் செல்வந்தன் ஆண்டான் செட்டி வீட்டுக்கு வேலை பார்க்க ஒரு பெண் தேவை என்பதை கேள்விப்பட்டான் ஆனந்தன். தன் மனைவியையும் குழந்தைகளையும் ஆண்டான் செட்டி வீட்டில் வேலை செய்யும்படி ஏற்பாடு செய்தான்.


பெரியம்மை வாகனம்

 

 நான் இன்று ஒரு கழுதையைப் பார்த்தேன். ‘அடச்சீ… கழுதை! இதெல்லாம் ஒரு விஷயமா?’ என உங்களுக்குத் தோன்றலாம். ஏதோ ஒரு கிராமத்தில், அன்றாடம் கழுதை அல்லது கழுதைகளைப் பார்ப்பவராகக்கூட நீங்கள் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், ஒரு மாலை வேளையில், பரபரப்பான போக்குவரத்துக்கு இடையில் ஒரு கழுதையை எதிர்கொண்டால், உங்களுக்கு எப்படி இருக்கும்? அந்த லேசான துணுக்குறச்செய்யும் உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது. ‘அட… கழுதை!’ எனப் புறந்தள்ளிவிட்டு, உங்களைப்போல என் ஓட்டை மொபெட்டை, அதைத் தாண்டி


தீர்ப்பு

 

 வேலன் தனது நிலத்தில் உழவு செய்ய வேண்டும். கடந்த இரண்டு வருடங்கள் கடன் தொல்லையால் நிலத்தை தரிசாகவே விட்டுவிட்டோம், இந்த தடவையாவது நாம் பயிர் சாகுபடி செய்துவிட வேண்டுமேன்று நினைத்தான்… ஊரில் வட்டிக்கு வாங்குவதை விட அரசு வங்கியில் கடன் வாங்கி பயிர் வைக்கலாம் என்று வங்கியின் படியை நாடினான் வேலன். வேலனுக்கு இரண்டு பிள்ளைகள்,மகனுக்கு படிப்பு வரவில்லை என்பதால் அவனது போக்கிலேயே விட்டான். இரண்டாவது மகள் பண்ணியிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டுயிருக்கிறாள். மனைவி குடும்பத்தையும் மற்றும்


ஐந்து ரூபாய் நாணயம்

 

 எலே ராசு இந்தாடா காசு, ஸ்கூலு விட்டு வரும்போது மறக்காம அஞ்சு ரூபாய்க்கு வெல்லம் வாங்கிட்டு வந்துடு. சொன்ன மாரியம்மாளிடம்மூக்கில் வழியும் சளியை இடது கையால் துடைத்துக்கொண்டு அம்மோவ்! ஸ்கூலு முடியறதுக்கு நாலு மணி ஆயிடும், சொன்னவனின் தலையை வருடிய மாரியம்மா பராவில்ல ராசா, நான் தோட்டத்துல இருந்து சாயங்காலம்தான் வருவேன்,அப்ப இருந்தா போதும்.சரி என்று வாங்கியவன் அந்த ஐந்து ருபாயின் வடிவத்தை சிறிது நேரம் இரசித்து பார்த்து தன் சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். பாத்து ராசா


வீடு

 

 இந்த வீடு உண்மையில் செல்லடியில் உடையவில்லை.ஆனால்,யாழ்நகரில் ,புதிதாய்க் கட்டிய வீடொன்றில் செல் விழுந்ததில் முற்றாக உடைந்திருந்ததைப் போய்ப் பார்த்திருந்தேன்.அந்த நேரம் அங்கிருந்த குடும்பம் கடவுள் புண்ணியத்தில் அவர்கள் வெட்டியிருந்த பதுங்கு குழியில் இருந்ததால்…உயிர் தப்பி இருந்தார்கள்.. ,அந்த வீட்டை இந்த வீட்டுடன் இணைத்திருக்கிறேன். தமிழ்க்கிராமங்களில் பொதுவாக வாடகைவீடு பெறுவது சிரமான காரியம். அருமையாகப் படித்தவர்கள், கொழும்புக்கு வேலை கிடைத்துப் போற போது, சிலவேளை தம் குடும்பத்தையும் கூட்டிச் சென்றால், அவர்கள் இருந்த வீடு காலியாகும். நடுத்தர வருவாய்யைக்


ஒரு கோலமயிலின் குடியிருப்பு

 

 ஒரு இலட்சிய நாயகியின் உண்மைச் சம்பவம் சுமார் 40 ஆண்டுகள் கழிந்து விட்டன! எனது இளமைப் பருவம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். வாழ்க்கையின் கொடூர சோதனைகளை அலட்சியமாக சந்தித்து, கண்ணுக்குப் புலப்படாத நாமே கிழித்துக்கொண்ட வருமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்தும், சற்றும் சலிக்காமல், கவலையின்றி கழிந்த அந்தக் காலம், இப்பொழுது நினைக்கையில் பகீர் என்கிறது முதுமை எய்திக்கொண்டிருக்கும் என் உள்ளம். மிகச் சுருக்கமாக சொல்வதென்றால், காலம் செய்த கோலத்தில் வேலையிழந்த அருமைத் தந்தையார், அனைத்து சுக துக்கங்களையும்


என் மனைவி

 

 எனக்கும் பிரேமாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. பிரேமா எல்ஐஸி யில் வேலை செய்கிறாள். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அவள் மிகுந்த பதட்டத்துடன் காணப்படுகிறாள். ஏன் என்று கேட்டால் சரியாக பதில்சொல்ல மறுக்கிறாள். அவள் என்னிடமிருந்து எதையோ மறைக்கிறாள். இரவுச் சேர்க்கைகளில் அந்தரங்க ஈடுபாடு இல்லாமல் அவளுடைய மனம் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது…சில சமயங்களில் என்னுடைய அணுகுதலை முற்றிலுமாக தவிர்த்தாள். எதோ ஒன்று அவள் மனதை அரித்தெடுக்கிறது என்பது புரிந்தாலும், நான்