Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 27, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

எந்த விரல் முக்கியம்?

 

 ஒரு நாள், கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் எந்த விரல் முக்கியமானது என்ற பிரச்சனை உண்டாயிற்று. கட்டை விரல், “நான் தான் முக்கியம், என் உதவி எல்லோருக்கும் தேவை” என்று பெருமையுடன் கூறியது. அடுத்த விரல், “என்னைக் கொண்டே எல்லோரும் சுட்டிக் காட்டுவதால், எனக்கு ஆள்கட்டி விரல் என்று பெருமை உண்டு” என்று கூறியது. நடுவிரலுக்கு மிகவும் கோபம், “எல்லோரையும் விட நானே உயரமானவன்” என்று இறுமாப்புடன் கூறியது. நான்காவது விரல் அமைதியாக, “உங்களில் எவருக்கும் இல்லாத


கன்னித்தாய்

 

 முதலமைச்சரின் “விருது வழங்கும் விழா” வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த பரிசை பெறப்போவது கவிதா என்ற அறிவிப்பு வெளியானதும் கரகோஷம் விண்ணைப் பிளக்க, சக்கர நாற்காலி உருளும் சத்தம் மென்மையாக… முதலமைச்சரை வணங்கி பரிசை பெற்றுக் கொள்கிறாள். அவள் முகத்தில்தான் எத்தனை பெருமிதம்! இப்படி ஒரு மகளைப் பெற்றதற்கு இவளுடைய அம்மா என்ன தவம் செய்தாரோ…? ஒவ்வொரு பெண்ணும் கவிதாவைப் பார்த்து நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! “சாதனைப் பெண்மணி” இவர் சாகித்யம் பெற்றவர்! என்று


அழகான ராட்சஸி

 

 காலை நேரம். இனிமையான காதல் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டே சென்றது பேருந்து. ஏதோ ஒரு நிறுத்தத்தில் அந்தப்பெண் ஏறினாள். அதுவரை காதல் பாடல்களை கேட்டுக்கொண்டே கனவில் மிதந்துகொண்டிருந்த ரஞ்சித்துக்கு அவள் தேவதையாய் தெரிந்தாள். அவனுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது. சாதாரணமாக ஒரு பெண்ணை ரசிப்பதை விட, காதல் பாடல்கள் பிண்ணணியில் ரசிக்கும் போது அவளே நம் காதலி போன்றதொரு பிம்பம் ஏற்படுமல்லவா அப்படித்தான் ரஞ்சித்தும் நினைத்துக்கொண்டான். மை தீட்டியதால் கண்கள் பார்ப்பதற்கு அழகாய் இருந்தது. மெல்லிய


பெண்

 

 தனித்ததாக சற்று உள்ளே தள்ளி காணியின் மத்தியில் இருந்த ஒரு வீடு. அன்னியப்பட்டுப்போனது போலிருந்த அந்த வீட்டிலே சிந்தனையுடன் வராந்தாவில் இருந்த கட்டிலில் குந்தியிருந்து வெளியே பார்த்துக்கொண்டு சுலோச்சனா இருந்தாள். அவள் ஒரளவு அழகிதான். இருந்தாலும் என்ன பிரயோசனம்? மனிதப் பிரச்சனைகளில் பெண் எப்படியானவள் என்பது அடிபட்டுப்போய் விடுகிறது. முன்றில். மாமரம். அதில் விளையாடு ற கவலையற்ற இரு அணில்கள். ஆணும் பெண்ணுமாக டுயட் பாடினாலும். அவற்றின் வாழ்க்கையில் அவ்வளவு அணியாய இழைகள் இராதுபோல பட்டது. அவளுக்கு


ட்யூஷன் வாத்தியார்

 

 பாளையங்கோட்டை, திருநெல்வேலி. காலை பத்து மணிக்கே வெயில் உக்கிரமாக தகித்தது. மாணிக்கம் தன்னுடைய பலசரக்கு கடையின் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான். வேலைசெய்யும் மூன்று கடைப் பையன்களும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயதானவர் கடைக்கு வந்து, “ஒருகிலோ துவரம்பருப்பு கொடுங்க” என்றார். மாணிக்கம் அவரை உற்றுப் பார்த்தான். அட நம்ம சரவணன் வாத்தியார்….ட்யூஷன் வாத்தியார். பார்ப்பதற்கு மிகவும் ஏழ்மையில் இருந்த மாதிரி தோன்றியது. மாணிக்கம் இன்று ஐந்து பெரிய மளிகைக் கடைகளுக்கு சொந்தக்காரனாக இருப்பதற்கு ஒருவிதத்தில் சரவணன்