கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 24, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

இரவில் தட்டப்பட்ட கதவு

 

 இரவு 9:10 இரண்டு பேர் வெகுநேரமாக எதையோ விவாதிப்பதை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கவனித்தார். அது எந்த நேரமும் கைகலப்பாக மாறும்போல இருந்தது. அரை மணி நேரமாகியும் மாறவில்லை. அங்கு இருந்து அவர்கள் கிளம்புவதாகவும் தெரியவில்லை. கான்ஸ்டபிளை அழைத்து, ”அவனுங்கள இங்க கூட்டிட்டு வா” என்றார். காவலர் சென்று அழைத்ததும் அவர்கள், அங்கு இருந்தே ஷீப்பின் மீது சாய்ந்து நிற்கும் இன்ஸ்பெக்டரைப் பார்த்தனர். காவலருக்கு இரண்டு பக்கங்களும் பாடிகார்டுபோல அந்த இருவரும் நடந்துவந்தனர். ‘நிகழ்ந்தது; நிகழப்போவது எல்லாமே நிகழ்ந்துகொண்டிருப்பவை


வாரிசு

 

 தலைவரின் மூத்த மகனுக்கு அன்று பிறந்த நாள். தலைவர் அன்றுதான் ஐம்பது வயது கடந்த மகனை தனது அடுத்த வாரிசாக அறிவிக்க உள்ளார். சின்னையன் காலையிலிருந்தே பரபரப்பாக காணப் பட்டார். சின்னயன்தான் தலைவருக்கு எல்லாமும். பேசி தீர்க்கும் கலாச்காரத்தை மாற்றி தீர்த்துப் பேசும் கலாச்சாரத்தைத் தலைவர் தொடங்கிய காலத்திலிருந்து சின்னையந்தான் அவருடைய இடது கை வலது கை. பெரிய கூலிப் படை ஒன்றை உருவாக்கி தன் பிடியில் வைத்திருக்கிறார். அவர் மேல் இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட


ஆகாயக் குஞ்சுகள்

 

 மெல்லிய ஈரமான தாய்லாந்து பாங்கொக் விமான நிலையமானது மாதுளம் பழ முத்துகள் போல அழகாக இருந்தது. குளிரூட்டிகளின் ஈரக் காற்று நாக்கில் இனித்தது. செந்தாமரை மொட்டுகள் சிரித்தது போல தாய்லாந்து மங்கைகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தர்கள். ஆனால் சிந்துவுக்கு வேர்த்துக் கொட்டாத குறை. இது எதையும் ரசிக்கும் பக்குவத்தில் அவன் இல்லை இதை எல்லாம் ரசிக்க உண்மையான விசாவுடன் அவன் இன்னமொரு முறை வந்து போக வேண்டும் . “”நீ அது தானே.. இண்டைக்கு இரவு


தந்தை சொல்மிக்க

 

 நீங்கள் திருடி இருக்கிறீர்களா? திருட்டுக்கு உடந்தையாகவாவது உழைத்து இருக்கிறீர்களா? இல்லை திருட்டை ஒழிக்க பாடுபடுபவரா? உங்களிடம் தான் இந்த கதையை சொல்லியாக வேண்டும். நான் ஒரு திருடன் இப்போது அல்ல.மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.வெள்ளை வேட்டி சட்டை அணிந்துக் கொள்ளவில்லை.பதவி பிரமாணம் எல்லாம் எடுக்கவில்லை.நானாக பணியில் நேரடியாக இறங்கிவிட்டேன்.ஆபத்தான தொழில் செய்து தாராளமாக சம்பாதித்தேன்.திருடன் என்ற பெயரை.அதற்கு முன் திருடியதே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.எப்போதாவது என்று இருந்த பழக்கம் வாடிக்கையானது அப்போதில் இருந்து தான். அப்போது


உப்புக்காத்தும் நீலபுறாவும்

 

 வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு தனக்கு வட்டமிட தெரியும்னே அப்பதான் அதுக்கே விளங்குச்சு. கடலம்மா மேனில இருந்து அதுகேத்த தெம்பான உசரதுல நிதானமா சுத்துது, கூட்ட விட்டு இரை தேடி போன பிஞ்சு இன்னைக்கு  சுறாக்கு  இறையாகுதேனு அழுக கூட தெரியமா தான் சுத்துது, அந்த கடல்புறா. போன பிஞ்ச நினைச்சு இழுவாம போய் மத்த பிஞ்ச பாருனு கரையோர புன்னை


“சுமி” ஒரு தொட்டாச்சிணுங்கி

 

 அன்று திங்கட்கிழமை காலை ஏழு மணி. நான் வேலை செய்யும் வங்கியில் மோகனுக்கு மனேஜர் பதவி உயர்வு கிடைத்து இரு மாதங்களாகி விட்டன. நேரத்துக்கு ஆபிசுக்கு போக வேண்டும் , அப்போது தான் தனக்கு ரிபோர்ட் செய்யும் இருபது பேருக்கு தான் ஒரு வழிகாட்டியாக இருக்கமுடியும் . ஆபீசுக்குப் புறப்பட்டு, அவசரம் அவசரமாக காலை உணவையும் காப்பியையும் சாப்பிட்டு விட்டு கார் சாவியுடனும், கையில் குறும் பெட்டியுடனும் வீட்டில் உள்ள கராஜுக்கு தன் மாமனார் வாங்கிக் கொடுத்த


விலகுமோ வன்மம்?

 

 தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு எவ்வளவு காலமாகிவிட்டது!’ அவளது எண்ணப் போக்குக்கு ஒரு திடீர் நிறுத்தம் அம்மாவின் குரலிலிருந்து: “கெட்டதிலேயே ஆகக் கெட்டது எது தெரியுமா?” வந்ததிலிருந்து இதே பாடம்தான்! `சே! இந்த அம்மா ஏன்தான் இப்படிப் பண்றாங்களோ! நல்ல ருசியா ஆக்கிப்போட்டுட்டு, அதை அனுபவிச்சு சாப்பிட முடியாம!’ என்ற மனத்துள் சலித்துக்கொள்ளத்தான் அவளால் முடிந்தது. ரமா எதுவும் சொல்ல வேண்டும்


உயிரெழுத்து

 

 குடிசை வீட்டு பெண் ஆனாலும் ராணியாக தன்னை பாவித்துக் கொண்டாள், வினோதினி… அப்பா ரத்தினம் குப்பை அள்ளும் தொழிலாளி அம்மா மெஸ்திரி வேலைக்கு செல்வாள்… செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உண்மையாகவே இருவர்கள் தங்களது வேலையில் நேர்மையாக இருந்தார்கள். இவர்களுக்கு வினோதினி என்ற மகள் எதிலும் விசித்திராமாகவே செய்வாள். அப்பாவின் சொல் பேச்சை கேக்கும், செல்லக் குட்டி அடம் பிடிக்கும் குணத்தில் அம்மா செல்லம் என்று ஆசையோடு மகிழ்ச்சியோடும் குடும்ப வாழ்க்கையை நகர்த்தினார்கள். வினோதினிக்கு ஐந்து வயதானதும்


வீணாகலாமா வீணை…..!

 

 லதாஸ்ரீக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது கொடுத்ததும் அரங்கமே உற்சாகமாய்க் கை தட்டியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த சந்தோஷ் மட்டும் முகத்தில் எந்தவித சந்தோச சலனமில்லாமல் ஒப்புக்குக் கை தட்டினான். ”லதாஸ்ரீ இந்த வருடம் இந்த நாட்டின் சிறந்த நடிக்கைகான விருதைப் பெற்றதைப் போல் வரும் வருடங்களிலும் பெற்று அவர் கலை சேவை நீடூழி வாழ்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.!” இப்படி இரண்டே நிமிடங்கள் நறுக்கென்று பேசி அமைச்சர் ஒதுங்கினார். அடுத்து இயக்குநர் சந்திரசேகரன் பேச எழுந்தார். சந்தோஷ் இருக்கையை


அம்மாவும் மாமியாரும்

 

 எனக்கு தற்போது வயது பத்தொன்பது. ஊர் திம்மராஜபுரம். படிப்பு எனக்கு எட்டிக்காயாக கசந்தது என்பதால் பத்தாம் வகுப்பில் இரண்டு தடவைகள் பெயிலானேன். அதன் பிறகு தற்போது என் அப்பாவுக்கு உதவியாக வெல்ல மண்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆங்….இந்தக் கதை என்னைப்பற்றியல்ல. என் அம்மாவையும், பாட்டியையும் பற்றியது என்பதால் அவர்கள் விஷயத்துக்கு வருகிறேன். என் அம்மாவுக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே, என் பாட்டியுடன், அதாவது அம்மாவின் மாமியாருடன் தினமும் தகராறும் சண்டையும்தானாம். இதை அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவாள்.