Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 20, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

கூல வாணிகன்

 

 பூஞ்சையான தேகம் அவனுக்கு. ராஜ்வீர் என்ற குலப்பெயர் கூடவே ஒட்டிக் கொண்டாலும் சேட்டு என்றுதான் அவன் பெட்டிக்கடைக்கு வரும் அனைவராலும் அழைக்கப்பட்டான். குஜராத் மற்றும் ராஜஸ்தானிலிருந்து பஞ்சம் பிழைக்க இந்த ஊருக்கு வந்து வேரூன்றி விருட்சமான பல வடகத்திகாரர்கள் மத்தியில் நரேஷ்ராஜ்வீர் மட்டும் இன்னமும் பஞ்சத்தில் அடிபட்டவனைப் போலவே இருக்கிறான். செவ்வாய்ப்பேட்டையின் விளிம்பிலுள்ள ஒரு பெரியவணிக வளாகத்தின் வடகிழக்கு மூலையில் பத்துக்கு ஏழடி என்ற விஸ்தீரணத்தில் அவன் பெட்டிக்கடை. எண்ணெய், கிரீஸ் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு


தோல்வியில் பிறக்கிறது வெற்றி!!

 

 வெற்றிவேல் சவுதி அரேபியா செல்வதற்காக விமான நிலையத்தில் காத்து கொண்டிருந்தான். அவனை வழி அனுப்ப வந்திருந்த அவன் அத்தை பையன் வினோத் சூட்கேஸை வைத்து விட்டு பக்கத்து நாற்காலியில் அமர்ந்தான். “ மாப்ள திரும்பவும் சவுதி அரேபியா.. உன்ன சம்பளம் குடுக்காம அனுப்பிவெச்ச நாடு.. இப்ப உனக்கு காசு குடுத்து கிளாஸ் எடுக்க கூப்பிடுது… உன்ன நெனச்ச பெருமையா இருக்கு டா “ அவன் பேசியதை கேட்ட வெற்றியின் முகத்தில் ஒரு சிறு புன்முறுவல். ஆமாம் சம்பளம்


கடவுள் சொன்ன ரகசியம்…

 

  கண்ணமாவின் பரிவு கலந்த வார்த்தைகள் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தாலும் அவள் கூறிய எதையுமே நான் இதுவரை செய்ததில்லை என்ற உறுத்தலும் இல்லாம இல்லை… அம்மா..! சொல்றதைக் கேட்டு நல்லா படிச்சிருந்தா.. இன்னிக்கு இப்படி அல்லாட வேண்டியிருக்குமா..? அம்மாவோட கண்ணீர் புரிய வைக்காததை நேர நேரத்திற்கு வருகிற பசி புரிய வைச்சிடுச்சி..! எந்த வேலைக்கும் போகமுடியல மூட்டை தூக்கிறது, கூலி வேலைன்னு போனா..! சரியான சாப்பாடு இ்ல்லாததால செய்ய முடியமாட்டேங்குது. இரண்டு மூட்டைக்கு மேல தூக்க முடியலன்னா…


இரகசியம்

 

 குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன் அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து நல்ல மகிழ்ச்சியாகம் ஆடம்பர வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணதில் இருந்தான். கல்லூரியில் நன்றாக எல்லோரிடமும் பழகும் குணம் கொண்டவன் இவனது குணத்திற்காவே அபி என்ற சக மாணவி குமாரை காதலித்தால். குமாரும் அபி மீது காதலை வைத்திருத்தான் ஆனால் அவளிடம் சொல்லாமல் மறைத்தான். அபியின் ஒருதலை காதலாக இருந்த நேரத்தில் கல்லூரியின் இறுதி


கோவை மலைக்குயில்

 

 ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கூற்று வழக்கத்தில் உண்டு. அதுபோலத்தான் இந்த உலகில் வாழும் எந்த ஒரு உயிரினமும் இயற்கையோடு இணைந்த தன் சூழலை சுற்றுப்புறத்தை எண்ணி வியக்காமல் இருப்பதற்கு எந்த ஒரு விஷயமும் தடையாக இருப்பதில்லை. அவ்வாறாக பார்ப்போரை வியக்க வைக்கும் சூழலுள்ள ஒரு இடம்தான் அந்த கோவை மலை. இந்தியத் துணை கண்டத்தின் மேற்கு திசையில் வடக்கிருந்து தெற்கு நோக்கி தொடர்ச்சியாக வரும் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடியில் தொட்டும்