கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 3, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவுப் பறவை

 

 மதுரைக்குப் பயணம் என்று சொன்னதுமே, அவன் மனமும் உடலும் தன்னிச்சையாக கல்லூரிக் காலத்திற்குத் திரும்பி உற்சாகத்தை வாரி இறைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டது. தான் படித்த கல்லூரியில் கருத்தரங்கு ஒன்றிற்கு தலைமை தாங்குவதற்காக ஒரு நாள் பயண அட்டவனை. காலையில் விமானத்தில் மதுரை சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, அன்று இரவே சென்னை திரும்புவதாக ஏற்பாடு. இது போல எத்தனையோ பயணங்கள், எத்தனையோ நகரங்களுக்குச் சென்றாகி விட்டது, இருந்தும் மதுரை என்றவுடன் ஒரு வாரமாகவே அந்த ஊர்


நனவில் நுழைந்த கனவு

 

 நினைவுத்திரள் உருப்பெறுவதற்கு முன்னான குழந்தைப்பருவத்தின் உறக்கங்களில் கனவுகள் கண்டேனா என்பதை சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நினைவு தெரிந்த பின்னால் உறக்கத்தில் கனவுகள் வராத இரவுகளே இல்லையென்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். பெரும்பாலும் துர்க்கனவுகள். சுப கனவுகளை எண்ணினால் ஒரு கை விரல்களே போதுமானது. ஒரு கனவை அது கனவென்று அறிந்துகொள்ள நனவு என்ற வேறுபாட்டையும் பிறகு அந்த நனவு திரண்டு திரண்டு உருப்பெறும் நினைவையும் அறியவேண்டியிருக்கிறது. நனவைப் பாதரசமென்றும் நினைவைப் பசையென்றும் சொல்வேன். ஆனால் கனவைப்பற்றி என்ன


கேசவனின் கவலை

 

 இன்று வெள்ளிக்கிழமை. லே-அவுட்டில் வசிக்கும் பெண்கள் நான்குபேர் ஐந்துபேராக சேர்ந்து கொண்டு பக்கத்திலிருக்கும் கோயிலுக்குப் போகும் நாள். பாலம்மாளின் காதில் காலையில் விழுந்த செய்தி மாலைக்குள் எல்லோரையும் எட்டிவிட்டதில் ஆச்சரியமில்லை. “கேசவன் கல்யாணம் செய்துக்கப் போறானாமே?” “அந்தப் பெண்ணுக்கு புருஷன் தவறிட்டானாம். அஞ்சு வயசுல ஒரு பெண்குழந்தையும் இருக்காம்.” இவர்கள் பார்க்கும் ஸீரியலில் ஒன்று அடுத்த கட்டத்துக்கு நகர்வதான சுவாரஸ்யமோ தான் இப்படி குதர்க்கமாக நினைப்பது அனாவசியம் என்றும் பாலம்மாளுக்குத் தோன்றியது. இவர்கள் எல்லோருக்கும் கேசவன் மீது


புதிதாய் பிறப்போம்

 

 “குமாரி ராதா” அவர்கள் நம்முடைய நிறுவனத்துக்கு கிடைத்த பெரும் சொத்து, அவா¢ன் அறிவுக்கூர்மையும் திறமையும் நம் நிறுவனத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல, மேடையில் பேசிக்கொண்டே போனார் கம்பெனியின் உரிமையாளர் சண்முகம்.அருகில் உட்கார்ந்திருந்த ராதாவுக்கு சங்கடமாக இருந்தது. இருக்கையில் இருந்தவாறே நெளிந்தாள். எழுந்து ப்ளீஸ் கொஞ்சம் நிறுத்துங்கள் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது, ஆனால் நாகா¢கம் கருதி பல்லை இறுக்க கடித்து சூழ்நிலையை சமாளிக்க முயற்சிசெய்தாள்.அவரையும் குறை சொல்ல முடியாது, அரசு வேலையில் இருந்த


செல்வாக்கு

 

 “நட, ஸ்டேஷனுக்கு! பெருமாள்சாமி முதலியாருக்கு அவமானமும் வேதனையும் தின்றன. “காலையில் யாருடைய முகத்தில் முழிச்சேன்?” யோசித்துப் பார்த்தார். “இன்னாய்யா நா சொல்றேன், நின்னுகிட்டே இருக்கே? பொடரியில நாலு உட்டு இழுத்துட்டுப் போகணுமா?” போலீஸ்காரர் உறுமினார். அந்த உறுமலில் முதலியார் அதிர்ந்து போனார். உள்ளூருக்கு அவர் ராஜா. புதிய ஊரில், வந்த இடத்தில்…? “நா அசலூருங்க ஸார். என்னை உட்டுடுங்க. தெரியாத்தனமா..” அழாத குறையாகக் கெஞ்சினார். அவர் கெஞ்சக் கெஞ்சப் போலீஸ்காரர் மிஞ்சினார். “என்னய்யா தெரியாது? வாயில் விரலை


குட்டி யானையின் கேள்விகள்!

 

 “அம்மா! அம்மா! என்னம்மா நீ, பல்லு தேய்க்காம சாப்பிடச் சொல்ற, பல்லு தேய்க்காம சாப்பிட்டா கிருமி உருவாகாதா?’’ எனக் கேட்டது குட்டியானை கூகு. என்னடா இது! என்னைக்கும் இல்லாத திருநாளா, இன்னைக்கு நம்ம குழந்தை இப்படி கேட்குதேன்னு ஆச்சரியப்பட்ட அம்மா யானை, “கூகு! நீ கேட்கிற இந்தக் கேள்வி நம்மைப் போன்ற விலங்குகளுக்குச் சரிப்பட்டு வராதே. இந்தக் கேள்வியே புதுசா இருக்கே. இது மனிதர்களுக்குப் பொருந்துகிற கேள்வியாச்சே’’ என்றது. “இல்லம்மா… கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னைக் குழி


உள்ளத்தில் விழுந்த சவுக்கடி !

 

 “ ஏ…வெள்ளையம்மா! ஒன்னோட புருஷன் ஆலமரத்து பிள்ளையார் கோவில் பக்கத்திலே நெனைவு இல்லாமல் குடித்துப்போட்டு விழுந்து கிடக்கான். நீ வெரசாப் போய்ப் பார் !“ என்று வெள்ளையம்மாள் வசிக்கும் குடிசையில் வந்து குரல் கொடுத்தாள், எதிர்வீட்டில் குடியிருந்து வரும் பொன்னம்மாள். ‘ இந்த பாவி மனுஷனுக்கு என்னத்த சொன்னாலும் கேட்க மாட்டங்கறானே ,குடும்ப நெலமை தெரியாமல் இப்படி குடிக்கிறானே ! ‘ என தனக்குத்தானே வெள்ளையம்மாள் புலம்பிக்கொண்டு “ ஏலே சின்னராசு வட்டிலே பழைய கஞ்சி ஊத்தி


சுஜீத்தா

 

 இரவு மணி பதினொன்று. சாலையின் ஓரத்தில் ஒரு பெண் தனியாக நிற்கிறாள். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இந்த பெண்ணை பார்த்ததும் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் வந்தார். இந்த நேரத்தில் இங்கே ஏன் தனியாக நிற்கிறாய் என்றான். அப்பெண் அதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை அமைதியாக இருந்தாள். இரவு நேரத்தில் நீங்கள் தனியாக இங்கே நிற்பது பாதுகாப்பனதல்ல என்பதை உணர்ந்து தான் எங்கே நீ நிற்கின்றீர்களா? என்றான். அதற்கும் அவளின் செவிகள் கேட்பதாகயில்லை. அவன் சற்று


மாதவி மரணம்….!

 

 பெஞ்சில் மாலை போட்டு இருந்த மாதவி உடலைச் சுற்றி உற்றார், உறவினர், ஊர் கூட்டம். தலைமாட்டில் தாய் ஆண்டாள் தலைவிரிகோலமாய் அமர்ந்து, ”அம்மா…! அம்மா…! என் மவளே !” என்று கதறினாள். ”மவளே! தாயீ,…” மாதவன் தன் மனைவிக்கருகில் நின்று மனசுக்குள் கதறி வாயில் துணி வைத்து விம்மி கண்ணீர் விட்டார். கண்ணனும் கதிரேசனும் கைகட்டி, முகத்தில் சோகம் அப்பி அந்த கூட்டத்தில் சுவரோரம் ஒதுங்கி எல்லாவற்றையும் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு அசையாமல் நின்றார்கள். ”பாவி


சூரப்புலி

 

 திங்கட்கிழமை. காலை ஐந்து மணி. மயிலாப்பூர், சென்னை. ஜனனி தன் தூக்கத்திலிருந்து எழுந்தாள். பால் பாக்கெட்டை உடைத்து பாலைக் காய்ச்சி, சுவாமிக்கு நைவேத்தியம் செய்தாள். புதிதாக பில்டரில் இறக்கிய ஸ்ட்ராங் டிகாஷனையும் சுகர் ப்ரீயையும் கலந்து ஆவிபறக்க, மணக்க மணக்க காபியை மாமனார் எதிரே இருக்கும் டீபாயின் மேல் வைத்தாள். ஆவி பறக்கும் அந்தக் காபியை ரசித்துக் குடித்தபடியே அன்றைய செய்தித் தாளில் மூழ்கிவிட்டார் எழுபத்தைந்து வயது மாமனார் சடகோபன். பிறகு பெட்ரூம் சென்று தூங்கிக் கொண்டிருந்த