கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2017

70 கதைகள் கிடைத்துள்ளன.

வாடகை சைக்கிளும் எஸ்.டி.டி பூத்தும் இன்ன பிறவும்…

 

 மாமா ஒருவரை சமீபத்தில் சொந்த ஊர் திருமணம் ஒன்றில் சந்தித்தேன். பல ஆண்டுகள் ஊர்ப்பக்கம் வராமல் இருந்து இடைவெளிவிட்டு வந்திருக்கிறார். அவர் முகம் மிரண்டுபோய் இருந்தது. ஊரில் அவர் மிரளும்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருந்தது கல்யாண மண்டபத்தில். பெண்கள், வீட்டில் இருந்த அத்தனை நகைகளையும் பூட்டி, வேகாத வெயிலில் பட்டுப்புடவை கட்டி, வியர்வையில் முகப் பவுடர் பூச்சு திரித்திரியாக இருந்ததும், அவரது பழைய நண்பர்களான ஆண்கள் பல்வேறு சைஸ் தொந்திகளில் செயின்கள் ஊஞ்சலாட, அவரை


வலி

 

 நான் ஒரு பத்திரிகையாளன். அவ்வளவாய் புத்திகூர்மை இல்லாத ஒரு மனிதன். அதனாலேயே என் அலுவலகத்தில் என்னை சில விசயங்களை எந்த கேள்வியும் கேட்காமல் ஒப்படைத்தார்கள். அவை பல சமயம் முக்கியமான பணிகளாகவும் இருக்கும். அடிக்கடி பத்திரிகை அறிக்கைகளின் மேல் நீங்கள் பார்க்கக் கூடிய கதிர்வேலன், மோகன்பாபு, சிவகுமார் போன்ற பல பெயர்களில் ஒன்று. நான் எழுதிய எதையும் படித்து இவன் யார் என்று வினவ மாட்டீர்கள், என்ன விசயம் என்று மட்டுமே தற்காலிக ஆர்வத்துடன் இமை தூக்குவீர்கள்.


எதிர்பாராதது

 

 “”அம்மா, நீ கொஞ்சம் வாயை மூடிண்டு சும்மா இருக்கியா” என்றான் சங்கரன். அவன் குரலில் கோபம் இல்லாவிட்டாலும், கெஞ்சல் இருந்தது தெரிந்தது. அம்மாவிடம் அவன் இதுவரை கோபித்துக் கொண்டதில்லை. “”மாலதி இப்பத்தான் நம்ம வீட்டுக்கு முதல் தடவை வந்திருக்கா. அவ என்ன நினைச்சுப்பா என்னைப் பத்தியும், உன்னைப் பத்தியும்?” “”என்னைப் பத்தி என்ன வேணா நினைச்சுண்டு போகட்டும். எனக்கு ஒண்ணும் கவலை இல்லே” என்றாள் சரசுவதி. பிள்ளையிடம் தான் ஒன்றும் அடங்கி ஒடுங்கி இருப்பவள் அல்ல என்பதை,


உள்ளத்தனனயது…

 

 “bhaavagraahii janaardanah’ Bhagavan Janaardana, sees only the Bhaava of the bhaktas. The Manobhaava of the bhakta towards Him. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுய நீர பிற _________ திருவள்ளுவர் Bhakthi kim karoth yaho vana charo bhaktha vatam sahyathe Sivanandalahari ____________SRIMATH Sankaracharya bhagavat padal நம் கதைக்கு துரைராஜ் நிச்சயமாக கதாநாயகன் கிடையாது, ஆனால் அவர் இல்லாமல் கதையே கிடையாது. இவ்வளவு தூரம் சொல்லப்படும்


கொண்டாடப்படாத காதல்

 

 (நான் காதலிக்கவில்லை என்ற சொல்பவர்கள் உண்டு ஆனால் காதலின் ஸ்பரிசம் அறியாதவர்கள் மனிதர்களாய் இருக்க முடியாது.இது மறைந்து போன ஒரு காதலின் காலடி சுவடுகளை தேடும் ஒரு கதையாக இருக்கக்கூடும்) “கௌஷிக்.,கௌஷிக் கொஞ்சம் நில்லுடா…” என்று கத்திக்கொண்டே அவன் பின்னல் ஓடினான் பிரகாஷ்.நண்பன் ஓடிவருவதை கண்ட கௌஷிக்கின் கால்கள் ஒரு நிமிடம் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. “என்னடா,என்ன ஆச்சு?” முகத்தில் அவசர தீ சுடர்விட்டெரிய அவன் உதடுகள் வினவியது. “ரயில் ஏற அவசரத்துல சாப்பாட்டை மறந்துட்டேயே.இடைவெளியில்