கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2017

70 கதைகள் கிடைத்துள்ளன.

தடைகள்

 

 மருமகப்பிள்ளைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தை சாவித்திரி தான் தபால்காரனிடமிருந்து வாங்கினாள்.அதிலிருந்த..விஜயாவின் கையெழுத்தை அவளால் மறக்க முடியுமா?சிறுபிராயம் தொட்டு ..A/L வரையிலும் ஒன்றாய் படித்ததில்..நட்பின் நெருக்கம் ஆழ்போல் வளர்ந்திருந்தது.சின்னச் சின்ன சந்தோசங்கள்..எத்தனை..எத்தனை!மற்றவர்களுடன் விளையாடுற போதும் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணித் தான் நிற்பார்கள்.உயிர்ச் சினேகிதிகள் என விமர்சிக்கிற அளவிற்கு திரிந்தவர்கள். படிப்பு உலகம் வேற,கல்யாண உலகம் வேற..என்பது போல பிறகு, என்னென்னவோ..எல்லாம் நடந்து,பிரிந்து..இப்ப,கண் காணாத தூரமாக கனடாவில் இருக்கிறாள்.நரை தட்டிப்போயிருந்தாலும்..விஜயா அவளுக்கு உயிர்ச் சினேகிதி தான். சமுதாயப் பார்வை


வெளி

 

 அது ஒரு தொடக்கப்பள்ளி.வாரத்தில் மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன் தான் காரணம். பிரேயர் முடிந்தவுடன் கனஜோராக குதூகலத்துடன் கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஓடும் குழந்தைகளளை தலைமை ஆசிரியை கண்டித்தும் கேட்பதில்லை.குட் மார்னிங் என்று ஆசிரியர் இளங்கோவனை வரவேற்பதில் சிறிது கெஞ்சலும் இருக்கும்,இன்று வகுப்புக்கு எங்களை அழையுங்கள் என்ற வேண்டுகோளும் அதில் அடங்கி இருக்கும். அந்தப் பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சொந்தமானது.பெண் துறவிகள் மேற்பார்வையில் இயங்கி வருவது.அங்கு


சில இடங்களில் கூச்சல்கள் கூட சுகமே

 

 எங்கள் காலனியில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகள், அல்லது பங்களாக்கள் கொண்டது. பெரும்பாலும் என்னைப்போல ஓய்வு பெற்றவர்கள்தான் அதிகமாக இருப்பர். எங்கள் தெருவின் ஒரு பகுதியை தவிர, மற்ற பகுதிகள் அமைதியாகத்தான் இருக்கும் எங்கள் காலனியில் படித்தவர்கள் அதிகம். பெரிய பெரிய உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் அதிகம். அடுத்து என்ன? வழக்கம்போல உள் அரசியல் தான். காலனி அசோசியேசன் பதவிக்கு போட்டி,பொறாமைகள் உண்டு, ஒருவருக்கொருவர் புறம் பேசுவதும் உண்டு. இது எல்லா காலனிகளிலும் உண்டு என்றாலும்


காவல் நிலையம்…!

 

 “ஐயா ! ஒரு ஐநூறு வேணும் ! ” பண்ணையார் நாச்சியப்பனுக்குப் பக்கத்தில் வந்து பணிவாய் நின்று தலையைச் சொரிந்தான் பரமசிவம். வயசு நாற்பது. சாய்மான நாற்காலியில் சவகாசமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டிருந்தவர் “ஏன்டா ?” – ரொம்ப உரிமையாய்க் கேட்டார். தன் தகுதிக்குக் கீழ் உள்ளவர்களையெல்லாம் நாச்சியப்பன் இப்படித்தான் “டா” போட்டு பேசுவது வழக்கம். இது கிராமத்துப் பழக்கம். “போலீஸ் ஸ்டேசனுக்கு ஐயா !” “எதுக்கு?” “நேத்திக்கு என் பசுமாடு பக்கத்து வீட்டுக்காரன் வயல்ல மேய்ஞ்சிடுச்சு.


புரிதலுடன் பிரிவோம்

 

 தன்கூட வேலைசெய்யும் சுதாகரின் பண்பும், அமைதியும் பவானிக்கு மிகவும் பிடித்திருந்தது. எதையும் குறித்த நேரத்தில் முடித்துவிடும் அவனின் வேகமும், விவேகமும் அவளுக்கு அவன்மேல் ஒரு ஆரம்பக் காதலை உண்டாக்கியிருந்தது. இருவரும் சென்னை ஏ.ஜி ஆபீஸில் வேலை செய்கிறார்கள். ஒரே பிரிவில் வேலை பார்ப்பதால் அடிக்கடி பழகும் சந்தர்ப்பம் எளிதாக அமைந்தது. சுதாகர் சென்னை ஐ.சி.எப்பில், கல்யாணம் ஆன தன் அக்கா வீட்டில் குடியிருக்கிறான். ஏழ்மையான லோயர் மிடில் க்ளாஸ் குடும்பம். அக்கா, அவளின் கணவர், இரண்டு குழந்தைகளுடன்