கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2017

70 கதைகள் கிடைத்துள்ளன.

டெங்கு மன்னன் 64-ம் கொசு இராஜ்யம்

 

 முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும். நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல் வரவும். பிட் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது. கூட்டம் நடத்தும் அரங்கில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த து. தலைமை விருந்தினராக “டெங்கு மன்ன ன்64-ஆம் கொசு” கம்பீரமாக மூக்கை முன்னால் துருத்தி கொண்டு அமர்ந்திருக்கிறார். “உறிம், ஆலோசனைகளை அள்ளி வழங்குக” என்று ஆணை பிறப்பிக்கிறார். “இதுதான் நமக்கு சரியான காலம், மழைக்காலத்தில்தான் நம்மினத்தைப் பெருக்கி கொள்ள முடியும், சந்தர்ப்பத்தை வீணாக்கி


ஊழ்வினை உறுத்தும்

 

 துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில் அவன் அப்படி செய்திருக்ககூடாது தான் இருந்தாலும் யார் செய்த புண்ணியமோ ஏன் முற்பிறவியில் அவன் செய்த புண்ணியமாக கூட இருக்கலாம் ஒருவேளை தெறித்த தோட்ட கூட அவன் காதருகே “டேய் நவுருடா” என்றதோ யார் கண்டார்கள்! காலில் சுருங்கெற்று கடிக்க, குனிந்தவன் அன்று எதிரில் நிற்பவனை பரலோகம் அனுப்பி வைத்தான். வைத்தவன் குறி தப்பியது, இது அடிக்கடி பரம்பொருளுக்கே நடக்கும்போது


ஆட்டுக்கார ஆறுமுகம்

 

 காண்போர் யாவரையும் கவரக்கூடிய கண்கள், சிலிர்த்து நிற்கும் புருவங்கள், வசீகரப்படுத்தும் சின்ன உதடுகள், சேலைக் கட்டாமல் தாவணி போட்ட சின்ன இடை கொண்ட பத்மாவதி கஞ்சிக் கூடையை தலையில் சுமந்து கொண்டு வயலுக்கு சென்று கொண்டு இருந்தாள். “இங்கேரு நானும் வர்றேன் நில்லு “” என்றான் அரை டவுசர் போட்ட ஆறுமுகம். “என்ன ஆறுமுகம் பரீட்சைக்கு படிக்காம வயலுக்குச் வர்ற…” “அட நீ வேற ..! நல்லா படிக்கிற நீயே போகும்போது மக்குப்பய நா…. என்ன ”


இன்னா செய்தாரை……..!

 

 ‘விசயம் அங்கே போய் மோதாவிட்டால் முடிவிற்கு வந்து முடியாது!’ என்பது தெளிவாகத் தெரிந்தது ஞானாம்பாளுக்கு. ஊரில் பெரும் புள்ளி, முக்கிய மனிதர், பஞ்சாயத்து, எந்த கொம்னாலும் அசைக்க முடியாத ஆள் தலையிட்டால் யார்தான் மிரளாமல் இருப்பார்கள்.! கட்டுப்படாமல் போவார்கள் ?! எல்லாம்….இவர்களுக்குப் பின்னால் சரியான ஆள் கிடையாது. புருசனும் நோஞ்சான், சொத்தை, பயந்தாங்கொள்ளி ! என்கிற நினைப்பில் ஆக்கிரமிப்பு செய்து சொத்தை அபகரித்துக் கொள்ளலாம் நினைப்பு! இல்லை என்றால் கேட்பாரற்றுக் கிடக்கும் நாலு ஏக்கர் நஞ்சை நிலத்தை


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

 

 அது 1932ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி நாள். திருநெல்வேலிக்கு அருகில், திம்மராஜபுரம் என்கிற கிராம அக்கிரஹாரத்தில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கிருஷ்ணவேணி என்று பெயரிட்டனர். அந்தக் குழந்தை சிறுவயது முதலே பக்தியுடன் நிறைய ஸ்தோத்திரங்களையும், பக்திப்பாடல்களையும் கற்றுக்கொண்டாள். பதினைந்து வயதுமுதல், குழந்தைக்கு கோவில்களின்மீது தீராத ஒரு லயிப்பும் ஆர்வமும் ஏற்பட்டது. தன்னால் எவ்வளவு கோவில்களுக்குச் செல்ல முடியுமோ அத்தனை கோவில்களுக்கும் சென்று, அங்கு இருக்கும் கடவுள்களின் தாத்பர்யம், கோவிலின் தல புராணம் ஆகியவற்றை