கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2017

70 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு உண்மைக் காதலும் உதவாக்கரை தோசமும்…

 

 அலுவலகம் வந்து இறங்கிய அரை நேரத்தில் மேசை மேல் இருந்த கைபேசி ஒலிக்க….. ‘வைஷ்ணவி’ என்கிறப் பெயரைப் பார்த்து, ‘இம்சை!’ என்று மனசுக்குள் அழுது, வலியுடன் அணைத்து நகர்த்தி வேலையைத் தொடர கணணியில் முகம் பதித்தான்; சிவாஷ். வைஷ்ணவி! பத்து நாட்களுக்கு முன்வரை இவன் உருகி உருகி காதலித்த நான்காண்டு காதலி. வாடா போடா என்று நட்பாக ஆரம்பித்து காதலாக முடிந்த உறவு. தற்போதைய இவன் அழுகை, வலி, விலகளுக்குக் காரணம்…… அன்றைக்கு இவன் அம்மா அபிராமி….காலத்தின்


ஒரே ஒரு அழைப்பு.!

 

 இரு வாரங்களாக ஊரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடியற்காலையில் குளிர் நடுக்கியது. குளிரில் நடுங்கியபடியே தினசரி தான் மேற்கொள்ளும் பத்திரிக்கை விநியோகப் பணிக்காக முரளி தன் இருசக்கர வாகனத்தில் தன் ஊருக்கு அருகில் உள்ள டவுனுக்கு புறப்பட்டான். முரளி, வெளியுலம் பற்றி தெரிந்த ஒரு விவரமான கூலித்தொழிலாளி. தன் வேலையின் ஒரு பகுதியாக தினசரி காலையில் இருபதுபேருக்கு தமிழ் நாளிதழ்களை விநியோகம் செய்வது அவனது வழக்கமான பணியாகும். டவுனுக்கு சென்று பத்திரிக்கை ஏஜென்டிடம் கேட்டபோது தான்


மனசு, அது ரொம்பப் பெரிசு!

 

 கடற்கரைக்குச் செல்லும் சாலையில் நீள நெடுக நடந்து கொண்டிருந்தார் நடராஜன். காலை வீசிப் போட்டு நடக்கும் இந்த நடைப்பயிற்சி தான் எவ்வளவு சுகமாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். கூடவே மனதிற்கும் அல்லவா பயிற்சி? ‘சள சள’வென்று பேசிக்கொண்டே ஒரு குழுவாக ‘வாக்கிங்’ செல்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் அவருக்கு. தனிமையில் வாய் மௌனம் சாதிக்கும்போது மனதின் கதவு திறந்து விடுகிறதே? மனதோடு பேசிக்கொண்டே நடப்பது எவ்வளவு ருசிகரமான அனுபவம்? நிழல் கவிந்த சாலை! ஒரு இருபது


வலி

 

 பாலா தான் முதலில் அவளை நேசித்தான். அவளின் சம்மதம் அறிய ஆவலாய் இருந்தான். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய முரளிக்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. தனது கறுப்பு நிறத்தை எண்ணி கழிவிரக்கம் கொண்டான் பாலா. தோற்றமே பெண்களை முதலில் கவர்ந்திழுக்க உதவுகிறது என பத்திரிகைகளில் படித்துள்ளான். தன் உயரத்தை தானே அறியாதது எண்ணி கவலை அடைந்தான். ‘ஒன்றைப் பெற ஏதாவதொன்றை இழந்து தான் ஆகவேண்டும்’ என்று அப்பா அடிக்கடி சொல்வார். எதிர் வீட்டுத் தாத்தா ‘வளர்க்க நினைக்கிறவன் கையில புறா


துணை

 

 சியாமளாவுக்கு வயது ஐம்பத்தி எட்டு. மூன்று மாதங்களுக்கு முன்புதான் எல்.ஐ.ஸி மயிலாப்பூர் கிளையிலிருந்து சோனல் மானேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றாள். அவளுக்கு இருபத்தி ஐந்து வயதில் கல்யாணம் ஆனது. இருபத்தியெட்டு வயதில் அவள் கணவர் ஸ்ரீராம் ஒரு விமான விபத்தில் இறந்துவிட்டார். அவருடன் வாழ்ந்த அந்த மூன்று வருடங்கள் மட்டுமே சியாமளாவின் உற்சாகமான நாட்கள். கணவர் இறந்த மூன்றாவது மாதத்தில் அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அதன்பிறகு அவளது வாழ்க்கை ஒரு போராட்டமாக அமைந்தது. நல்லவேளையாக கணவர்