கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 12, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

அல்ட்ராமேன் சைக்கிள்

 

  சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது. தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்டத் திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது. “தம்பி சைக்கிள் உடைஞ்சிருப்பா” என அம்மா கூறிவிட்டு அவனைச் சமாதானப்படுத்துவதில் மும்முரமாக ஆனார்.


கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்

 

 வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அதை காண்பவர்களுக்கு ஆடி மாத திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்த சேரியை பொறுத்த வரையில் தினமும் காலையில் அரங்கேறும் சாதாரண காட்சியே அது. அங்கு அதிகம் வசிப்பது தினக் கூலிகள். அருகில் அமைந்திருந்த பஞ்சு தொழிற்சாலையில்


ஒரு இண்டர்வியூவில்

 

 அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு வந்த ஏழெட்டுப் பெண்களும் அவர்களோடு என் மகள் லதாவும் வரிசையாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். நான் கண்ணாடித் தடுப்புக்கு வெளியில் ரிசப்ஷனில் காத்திருந்தேன். இது லதாவுக்கு ஏழாவது முயற்சி. இந்த வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று சிதம்பரம் நடராஜப் பெருமானை வேண்டிக் கொண்டேன். இங்கிருந்து பார்த்தாலே அவர்கள் அமர்ந்திருப்பதும் சற்றுத் தள்ளி பி.ஏ. டூ எம்.டி என்ற பலகை இருந்த மேஜையில் ஒரு கம்ப்யூட்டருக்கு முன் இளம் பெண் ஒருத்தி அமர்ந்து


சித்திரச் சாலை

 

 வெகு நாள் கழித்து அந்த தொலைபேசி எண்ணை என் விரல்கள் அழுத்தியது. எவ்வளவோ காலமாகியும் அந்த எண் மனதிலிருந்து உதிர்ந்து போய் விடவில்லை. இணைப்புக் கிடைக்கவில்லை.மீண்டும் முயற்சித்தேன். இம்முறை எதிர்முனை நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டிருந்தது., பதிலில்லை. நம்பிக்கை இழந்து ,முயற்சியைக் கைவிடத் தீர்மானித்த தருணத்தில் எதிர்முனை உயிர் பெற்றது. ”ஹலோ’ ‘என்ற அந்தக் குரலில் காலம் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணியதாகத் தெரியவில்லை. வேண்டுமென்றே குரலை லேசாக மாற்றிக் கொண்டு ” நல்லா இருக்கியா ”என்றேன்.


மாற்றுவழி…

 

 யாருக்கும் தொந்தரவில்லாமல்தான் அந்த சைக்கிள் மாடிப்படிக் கீழே பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறையில் கிடந்தது. வடிவத்தில் மட்டுமே அது சைக்கிளாக இருந்தது. நடப்பட்ட நாற்று முளைத்துக் கிடக்கும் வயலைப்போல துரு சைக்கிளைப் பற்றிக் கிடந்தது. “”யார் கிட்டயாச்சும் கொடுத்திருக்கலாம்… இல்ல எடைக்காவது போட்டிருக்கலாம்.. இடத்த அடச்சிக்கிட்டுக் கெடக்கு.. எதுக்கும் பிரயோசனமில்லாம..” “”அது அங்க கெடக்கறதுல்லே உனக்கு என்ன சிரமம்?” “”அந்த இடத்தை சுத்தம் பண்ணி வச்சி… ஒரு கதவு போட்டா போதும்.. யாராச்சும் குடிவருவாங்க.. நமக்கும்