Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2017

88 கதைகள் கிடைத்துள்ளன.

உ.ச.போ எண் 04 (துரோகி! அவனைக்கொல்லாமல் விடப்போவதில்லை)

 

 சரவணன்! என் காதலை முளையிலேயே கிள்ளியெறிந்த சதிகாரன். என் சாதனாவை என்னிடமிருந்து தந்திரமாய்த் தட்டிப் பறித்த துரோகி! அவனைக்கொல்லாமல் விடப்போவதில்லை. யார் இந்த சரவணன் என்கிறீர்களா? வேறு யார்? என் உத்தம நண்பன்தான். நண்பன் என்கிறாய், துரோகி என்கிறாய்! உண்மையில் அவன் யார் என்று குழப்பம் வருமே! எனக்கும் வந்தது. எப்போது தெரியுமா? என் காதலுக்குத் தூது சென்று அவளுக்கென்று என் மனதில் தேக்கிவைத்திருந்த அத்தனைக் காதல் உணர்வுகளையும் கவிதைகளாய் வடித்து நான் எழுதிய காதற்கவிதைகளைத் தான்


நேர்மையின் நிறம் சிகப்பு….!

 

 மத்திய அரசு தணிக்கை அதிகாரி ராஜசேகரன் அறையிலிருந்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். கண்ணுக்குக் குளிர்ச்சியாய் வெளியே பச்சைப்பசேல் காடு. அப்படியே வீட்டைச் சுற்றி அச்சு அசலாய் ராணுவ வீரர்;கள் போல் ஏ.கே. 47, பைனாக்குலருடன் தீவிரவாதிகள் காவல். இங்கு வந்து இன்றோடு ஒரு மாதம் நான்கு நாட்கள் சிறை ! நினைக்க வியப்புமட்டுமில்லை. துக்கமும் தொண்டையடைத்தது. அதேசமயம்….. “சாப் !” அறைக்கு வெளியே குரல் கேட்டது. திரும்பினார். ராணுவ முறையில் வணக்கம் வைத்தப்படி ஒரு தீவிரவாதி.


7வது தளத்தில் ஒரு சின்ன கதை

 

 அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 7வது தளத்தில் அன்றைக்கான விடியல் காதலாய் பூத்தது. அவள் என்றால் அது அவனும் அவளும்…. அவன் என்றால் அது அவளும் அவனும்… ஒரு கை ஜன்னல் திறக்க ஒரு அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தது. நெற்றிகள் இரண்டும் மெல்ல முட்ட கலைந்த ஓவியத்தின் இரு பகுதிகள் போல இருவரும்…ஒருவரையொருவர் பார்த்தார்கள். காதலை எந்த மொழியில் கூறினாலும் காதலே… அதுவும் காதோரம் கிசுகிசுக்கும் உன்னை நான் காதலிக்கிறேன் என்பது பழைய மொழி என்றாலும் ஆதி


மஞ்சரி

 

 அவள் பெயர் மஞ்சரி. வயது இருபத்தைந்து. மிகவும் தைரியசாலி. முகத்துக்கு நேரே எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் யாராக இருந்தாலும் பேசிவிடுவாள். சென்னையின் மாம்பலத்தில் ஒரு ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். அவளுடைய அப்பாவுக்கு மஞ்சரிதான் ஒரே செல்லமகள். ஆனால் அவளுடைய அருமை அப்பா இன்று காலை மாரடைப்பில் இறந்துவிட்டதாக பத்து நிமிடங்கள் முன்புதான் மொபைலில் அம்மா சொன்னாள். மஞ்சரிக்கு மனசும் உடம்பும் படபடத்தது. உடனே அவள் காதலனும் அத்தை மகனுமாகிய விக்னேஷுக்கு விஷயத்தை சொன்னாள். அவன்


கலையும் பிம்பங்கள்

 

 பிந்தியா மிகவும் அழகு என்று சொல்லி விட முடியாது. ஆனால் சந்திப்பவரின் மனதில் பதிந்து போகிற முகம் அவளுடையது. நல்ல நிறமில்லை; ஆனால் நவீன நடை உடை பாவனைகள் வாயிலாக நினைவை நிறைத்துவிடக் கூடியவள். அவளுடைய பகட்டில் கொஞ்சமும் செயற்கைத்தன்மையைக் காண முடியாது. பஞ்சாபி கலந்து பேசும் இந்தியை நாள் முழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஸ்ட்ராபெர்ரி கேக்கை வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள். நான் கேட்ட கேள்விக்கு அவளின் பதிலை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். காபியின் நுரையின் மேல் க்ரீமினால்