கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2017

88 கதைகள் கிடைத்துள்ளன.

தேய்ந்த நிலாக்களின் காலம்

 

 காலத்தை விட சிறந்த மருந்தும் இல்லை, வாழ்வை விட சிறந்த ஆசானும் இல்லை என்பார் எனது நண்பர்.. நான் சென்னையை விட சிறந்த ஆசானும் இல்லை என்பேன். வாழ வேண்டும் என நீங்கள் விரும்பிவிட்டால் சென்னை உங்களை தன் இரு கை நிறைய வாரி எடுத்துக் கொண்டுவிடும். கசப்பும், இனிப்பும், துவர்ப்பும், புளிப்புமாக அது உங்களுக்குப் புகட்டும் வாழ்க்கைப் பாடங்களை நீங்கள் வேறெங்கும் கற்றுக் கொள்ள இயலாது. புன்னகை சற்றும் இல்லாத – தடித்த கையையுடைய வாத்தியாரைப்


வேகாளம்

 

 ‘’ என்னா விசியம்டா பச்சிராசா ?” வெளித்திண்ணையிலிருந்து எழுந்து வந்த அய்யா, நிலைப்படியில் நின்றமானைக்கு முகத்தைமட்டும் வீட்டுக்குள் நீட்டினார். ’நேக்கால் ஒடிந்துபோன மாட்டுவண்டிபோல கைகள் இரண்டையும் பின்கழுத்தில் சேர்த்துக்கட்டி சாய்ந்து கிடந்தான் பட்சிராசா. அவனுக்கு முன்னால் சோத்துக் கும்பாவோடு வானதி.. பதிலுக்காகக் காத்திருந்தார் அய்யா. பட்சிராசாவுக்கு அய்யாவின்பால் எப்போதும் அலட்சியம்தான். பகலிலாவது அவர் ஏதாவது புத்தி சொன்னால் கேட்பான். அதுவே ராத்திரிப் பொழுதாகிவிட்டால் அவர் இருக்கும் பக்கம் திரும்பியே பார்க்கமாட்டான். ஏனென்றால் இரவில் அய்யா தொண்டை நனைக்காமல்


தாம்பத்தியம் = சண்டை + பொய்

 

 அதிவேகமாக உள்ளே நுழைந்த மகளைப் பார்த்தாள் வேதா. வழக்கம்போல், ஆத்திரமும், தன்னிரக்கமுமாகத்தான் இருந்தாள் பத்மினி. யாருடன்தான் ஒத்துப்போக முடிந்தது இவளால்! `ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொண்டால் அதிக செலவாகாமல் தப்பிக்கலாம். வேலையும் மிச்சம்!’ என்று எப்போதோ எண்ணியது தவறோ என்ற சிந்தனை உதித்தது. “வேலை முடிஞ்சு நேரா வர்றியா?” அனுசரணையாகக் கேட்பதுபோல் கேட்டாள். “என்ன சாப்பிடறே?” “ஒரு சொட்டு விஷம்!” “அதெல்லாம் இந்த வீட்டிலே கிடையாது. தோசை வேணுமா? மாவு இருக்கு. ஆனா, புளிக்கும்”. “விஷமே சாப்பிடறேன்னு சொல்றேன்.


தொழிலாளி வீட்டு தீபாவளி.!

 

 அன்று செவ்வாய்க்கிழமை மாலை நாலுமணி இருக்கும்! ரங்கன், அவசரமாய் டவுனுக்கு புறப்பட சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு, தன் பழைய ஓட்டு வில்லை வீட்டில் வெளித் திண்ணையில் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட கண்ணாடியை பார்த்து தலையை சீவினான். “ஏங்க, ரேசன் கடையில அரிசி போடராங்கலாம், வாங்கிட்டு அப்படியே இந்த கோதுமையை கொஞ்சம் அரைச்சுட்டு வந்தரலாமே.!” “நாளைக்கு தீபாவளி பசங்களுக்கு அரிசி ஊரவெச்சு ஆட்டி இட்லி தோசை இல்லைனா பூரிகீது சுட்டுக்கொடுக்கலாம்.!” என்று.. திண்ணைமேல் அமர்ந்து ஊசியில் துணிப்பூ கோர்த்துக்கொண்டு


ஓலைச்சுவடி

 

 தாத்தா சந்திரசேகர் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார் ஊரிலிருந்து வரும் பேத்தியை எதிர்பார்த்து விழிமேல் விழிவைத்து கண் இமை மூடாது காத்திருந்தார். நேரம் நகர்ந்தன பேத்தியை காணாத தாத்தா முகம் சுழித்தார் அங்கு வந்த அவரின் மருமகள் உமா “என்ன மாமா ஏதோ ரொம்ப யோசனையில் இருக்கிறாப்பல இருக்கு என்றாள்” அம்மா மைதிலி இன்னுமா வரல என்றார் தொலைபேசியில் கேட்டையா அவ எங்க வந்திட்டு இருக்காள் என்று அவ சென்னை வந்திட்டாளம் இன்னும் ஓரு மணி நேரத்தில அப்பாவும் பொண்ணும்