Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2017

88 கதைகள் கிடைத்துள்ளன.

முக்கோணம்

 

 மொட்டைமாடி சுவரின் விளிம்பில் சாய்ந்து நின்று குளிரும் காற்றை மல்லிகையின் வாசத்தோடு நாசிக்குள் இழுத்தபோது, தேவகிக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அப்பாவின் இறப்புக்கு பிறகு, இந்த வீடும், தோட்டமும், பேரூர் கோவிலும் மட்டுமே அம்மாவின் உலகம். தோட்டத்து மல்லிகையோடும் நந்தியாவட்டை பூக்களோடும் அம்மாவுக்கான உறவு தனிதான். பெரிதாய் அலட்டிக்காமல் அதிகமாய் அவற்றோடு பேசிக்கொள்ளாமல் தண்ணீர் விடுவதும் பூக்களைப் பறிப்பதும் கோர்ப்பதுவுமாய் இருப்பாள். சிறு வயதிலிருந்தே தன்னோடும் அவள் அதிகமாய் பேசியதில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. தன் திருமணத்திற்கு


நீளும் பாலையிலும் நிஜமாகும் வேதங்கள்

 

 மனம் முழுக்க உதிரம் கொட்டும் ரணகள வடுக்களுடன் தான் ஒன்றரை வருட கால இடைவெளிக்குப் பின் ரகுவைச் சுகம் விசாரித்துப் போகவல்ல அவனிடம் கையேந்திக் காசு பெற ஜானகியின் திடீர் வருகை அந்த வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு புறம்போக்குத் தீட்டு நிகழ்வாகவே மனதை அரித்தது. அவர்களில் ஒருவனாக மட்டுமே தன்னைக் கருதி வாழ்ந்த மனோகரனோடு மனம் பிளவுபட்டு, வாழ நேர்ந்த அவளின் சந்தோஷம் விட்டுப் போன இருப்பு நிலையை, இன்னும் கருவறுத்துக் கூறு போடும் நிகழ்வாகவே அதுவும்


பள்ளிக்கூடம்

 

 எனக்கு தற்போது வயது அறுபது. நான் பள்ளியில் படிக்கின்ற காலங்களில் எனக்குப் படிக்கவே பிடிக்காது. படிப்பு என்றாலே எனக்கு எட்டிக்காய். பள்ளியில் வாத்தியார் சொல்லிக் கொடுத்ததை படித்து அதை ஞாபகம் வைத்துக்கொண்டு, வீட்டிலும் அவைகளைப் படித்து வாரத் தேர்வுகளும், மாதத் தேர்வுகளும், குவார்ட்டர்லி, ஆபியர்லி, பைனல் எக்ஸாம் எல்லாம் எழுதி, ஒவ்வொரு வருடமும் பாஸ் பண்ணி…..யப்பா எனக்கு தாவு தீர்ந்துவிடும். படிக்கிற வயதில் பள்ளிக்கூடம் போவதற்கு பிடித்திருக்குமோ இல்லையோ; படித்து முடிந்து இப்ப இவ்வளவு நிறைய வருடங்கள்