Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2017

88 கதைகள் கிடைத்துள்ளன.

உடுக்கை விரல்

 

 தூரத்தில் பழநிமலைப் படிக்கட்டுகளும் உச்சிக்கோபுரமும் மின்சார விளக்கு ஒளியில் ஷொலிப்பது, படம் விரித்து நுனிவாலில் எழுந்து நிற்கும் நாகப்பாம்புபோல எனக்குத் தெரிந்தது. வடக்கு முகமாகப் பாய்ந்து வரும் சண்முக நதியின் நற்றாற்று மணல்திட்டில், நான் தென்கிழக்குத் திசை நோக்கி சம்மணமிட்டு அமர்ந்து இருந்தேன். ”முருகா… அறுபடை நாதா… நான் ஆடுற கடைசிக் கூத்து இது. இருவத்தி ஆறு நாளு நடத்துற கூத்தை, இன்னிக்கு ஒரு ராத்திரியிலேயே உன்னைச் சாட்சியா வெச்சு ஆடப்போறேன். நான் உண்மையான கூத்துக்காரனா இருந்தா,


பெருமிதம்

 

 அண்ணாச்சியின் அட்டகாசம் ஆரம்பித்து விட்டது. காது செவிடாகும்படி இரண்டு கூம்பு ஒலிபெருக்கியைத் தரையில் எதிரெதிர்த் திசையைப் பார்த்த வண்ணம் வைத்து ரிக்கார்டைப் போட்டு விட்டான். முதல் பாட்டு எம்.ஜி.ஆர். பாட்டு. `நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன்..நல்ல அழகியென்பேன்! நான் கேட்டதிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல கவிதை என்பேன்.. நல்ல கவிதையென்பேன்..’ அண்ணாச்சி, வாடகைக்கு சைக்கிள் விடும் கடை வைத்திருந்தான். கூடவே, திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற வைபவங்களுக்கு ஒலி, ஒளி அமைத்துத் தரும் சைடு


வரன்(ம்)

 

 அப்பாவிடம் எப்படி இதைக் கேட்பது என்று புவனாவுக்குத் தெரியவில்லை. இன்றைக்குள் கேட்டு முடிவு சொல் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ரமேஷ் போனில் சொல்லியிருந்தான். ரமேஷ் புவனாவின் கணவன். திருமணம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இருவருமே மெத்தப் படித்த என்ஜினீயர்கள். ரமேஷ் வேலை செய்வது கிண்டியில் ஒரு பன்னாட்டு எஞ்சினீரிங் கம்பெனியின் அலுவலகம் ஒன்றில். புவனா தேனாம்பேட்டை அருகில் ஒரு சாப்ட்வேர் அலுவலகத்தில். அவர்கள் தங்கியிருந்த தாம்பரம் பகுதியில் இருந்து, அழகாக மின்சார ரயிலில் கிண்டிக்கு


உபதேசம்

 

 மாடி போர்ஷனில் கணவன்-மனைவி சண்டை இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமாகக் கேட்டது. தினமும் நடப்பதுதான். கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பது, வாய்க்கு வந்தபடி பேசுவது. பொறுக்க முடியாமல் மாடிக்குப் போனார் ஹவுஸ் ஓனர் மாணிக்கம். ‘‘இங்க பாருங்க சிவா சார்… நீங்க பண்றது சரியில்லை. இப்படி தினமும் குடிச்சுட்டு கலாட்டா செய்தால் நாங்க எப்படி நிம்மதியா கீழே இருக்க முடியும்? குழந்தைங்க படிக்க வேண்டாமா…’’ ஒரு முறை சிவாவின் மனைவியைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்… ‘‘அழுதுக்கிட்டு இருக்காங்க


ஊரு ஒப்பு

 

 சாயங்காலம் அப்பாவுடன் கோயிலுக்குக் கிளம்பும் போது, கோயில் திடலில் இன்னிக்கு ஊர் கூட்டம் இருக்குடா என்றார். “ஏம்பா! மரத்தடி பஞ்சாயத்து மேடை, நசுங்கிப் போன சொம்புல தண்ணி, நாட்டாமையின் எவடியவ கத்தல், வெத்தலைய போட்டு புளிச்..புளிச்னு எச்ச துப்பறது, அடாவடி தீர்ப்பு, இதுங்களை இன்னும் நீங்க விடவே இல்லையா?.”–அப்பா சரிக்கு சரி நக்கலடிப்பார். ”ஜோக்கா இது?. சரி நான் சிரிச்சுட்டேன்.” நான் பி.டெக். முடிச்சப்புறம், பூனாவில் டி.சி.எஸ்.ல ஜாய்ன் பண்ணி பதினோரு வருஷங்கள் ஆகிவிட்டன.. ப்ளஸ் பி.டெக்.