Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2017

88 கதைகள் கிடைத்துள்ளன.

ஆசைக்கு ஒரு ஆட்டுக்குட்டி

 

 யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென் மேற்கு வலிகாமம் பகுதியில் உள்ள அளவெட்டிக் கிராமத்தை. வழுக்கை ஆறு. தழுவிச் செல்கிறது. பல வாய்க்கால்கள் இணைப்பால் தோன்றியதால் அதற்கு வாய்க்கால் என்ற பெயர் மருவி வழுக்கை ஆறு என்று பெயர் வந்தது. ஒருவரும் அந்த ஆற்றில் வழுக்கி விழுந்ததாக கிராம வாசிகள் கேள்விப் பட்டதில்லை. பதினேழு மைல்கள் பயணம் செய்து அராலி அருகே ஏரியில் கலக்கும் ஆறு அது. ஒரு காலத்தில் பழமையில் ஊறிய கிராம . விவாசாயி குடும்பங்கள் அந்த


அதிரடி ஆட்டக்காரி அபிலாஷா

 

 கதையின் தலைப்பு குறித்த விஷயத்திற்கு முதலில் நீங்கள் சீனுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சீனு என்னும் சீனிவாசன், கோயம்புத்தூர் பக்கத்தில் உள்ள சூலூரில் ஒரு நான்கு மாதம் எங்களுடன் பணி புரிந்தவர். எங்கள் என்பதில் நானும் குமாரும் சேர்த்தி. பல்லடம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் மின் காற்றாலைகள் நிறுவும் ப்ராஜக்ட். காற்றாலைகள் நிறுவ முடிவு செய்த சென்னையைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு முழு பொறுப்பும் ப்ராஜக்ட் கன்சல்டன்ட் ஆக எங்களுக்கு கிடைக்க, முதலில் சூலூருக்கு வந்து


விருந்து

 

 துரைசாமிக்கு அவர் ஓய்வு பெறுவதையொட்டி பாராட்டு விழா நடத்துவது பற்றி அந்த அலுவலகத்தில் சுற்றறிக்கை வந்திருந்தது. முப்பத்தியெட்டு வருஷ நீண்ட சர்வீஸ். யாரைப் பிடித்து எவ்வளவு லஞ்சம் கொடுத்து சேர்ந்தாரோ அல்லது அந்தக் காலத்தில் வலிந்துக் கூப்பிட்டு கொடுத்தார்களோ. ஏறக்குறைய மொத்த சர்வீஸையும் இந்த அலுவலகத்திலேயே கழித்து விட்டார். இடையில் ஒரு நாலு வருஷம் தலைமை அலுவலகத்தில் இருந்திருக்கிறார். கேட்டால் முப்பத்தி நாலு வருசம் இதே ஆபீஸ்தான் இருந்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவாரு. அரசுப் பணியில்


மூன்றாம் பாலினம்

 

 சுதர்சன் எம்.டெக் படித்துவிட்டு, தொடர்ந்து யுபிஎஸ்சி எழுதி பாஸ் செய்தான். தற்போது அதற்கான போஸ்டிங் ஆர்டர் வரவேண்டும். இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். சின்ன வயசு. பகலில் வீட்டினுள் சும்மா அடைந்து கிடப்பது என்பது மிகக் கொடுமையான விஷயம். ஒரு பெண்ணின் அருகாமைக்காக மனசும் உடம்பும் ஏங்கியது. விரகதாபம் அவனை வதைத்தது. அவன் வீட்டிலிருந்து தாமிரபரணி ஆற்றுக்கு போகிற வழிக்கு இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று ஜனரஞ்சகமான பாதை. எப்போதும் மக்கள் சாரி சாரியாக குளிக்கப்


வாடகை

 

 பாரில் கசகசவென்று கூட்டம் முண்டியடித்தது. பரணி பிளாஸ்டிக் தம்ளரில் இருந்ததை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டான். கூட வந்திருந்த முருகேசன், “யோவ் சாமி.. அதுல தண்ணி ஊத்தலய்யா..” என்று பதறும்முன் திரவம் தொண்டைக்குழி தாண்டிவிட்டது. தலையை உலுப்பிக் கொண்டு, எரியும் தொண்டையை காறியவாறு நாக்கில் கசந்ததை காறி கீழே துப்பினான். “இந்தாய்யா.. கடலைய தின்னு..” என்று முருகேசன் நீட்டியதை வாங்கியபடி, வாய்க்குள் மிச்ச தண்ணீரைப் பீச்சி கொப்புளித்து விழுங்கிவிட்டு கையிலிருந்ததில் ஒரு கடலையை வாய்க்குள் போட்டு மென்றான்.