கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2017

30 கதைகள் கிடைத்துள்ளன.

நாளை போவேன்

 

 வானம் எதையோ சுமந்து வேர்த்திருந்தது. இயந்திரகதியில் சீராக தூறல்கள். இலை உதிர்த்த மரங்கள் தூறல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு ஜீரணிக்கமுடியாமற் தவித்துக்கொண்டிருந்தன. காலை பிரார்த்தனைக்கு தேவாலயம் செல்லும் வயதான வெள்ளையர்கள் கண்களில் நீர்முட்டியக் குளிரை கைக்குட்டைகளால் ஒற்றிக்கொண்டு, நடக்கிறபோது அடிக்கடி ஏனோ ஆமையைப்போல தலையைத் திருப்புவதும் இழுத்துக்கொள்வதாகவுமிருந்தனர். அவர்களை எந்த முயல்களும் முந்த முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. வாலிழந்த பறவையொன்று விர்ரென்று இறங்கி மேலெழும்பி பின்னர் மேற்கே சென்று மேகத்தில் புதையுண்டது. இங்கே அனைத்துமே முன்னதாகத் திட்டமிட்டு செயல்படுவதாக


ஏனிந்த முடிவு?

 

 தொலைபேசியைக் கையில் எடுத்தவுடனேயே அம்மா கூறினாள், முகமன்கூட இல்லாமல்: “திவா போயிட்டான்”. அக்குரலிலிருந்த தீர்மானம், இனி அவன் எங்கேயும் போகமுடியாது என்று ஒலிப்பதுபோலிருந்தது. “அண்ணன் குடும்பத்தோட சண்டையோ, பூசலோ, இந்தச் சமயத்தில விட்டுக்குடுக்கலாமா? நான் போய் பார்த்தேன். உடம்பெல்லாம் நீலம் பாரிச்சு..!” அதற்குமேல் கேட்க முடியவில்லை சுதாவால். இயற்கையான சாவு நேர்ந்தால் உடலில் உடனே நிறமாற்றம் உண்டாகுமா? `இது தற்கொலைதான்!’ என்று அவளது அந்தராத்மா கூவியது. ஏனெனில், இது திவாகரின் முதல் தற்கொலை முயற்சி அல்லவே! அம்மா


போராளி…

 

 ராகவ் மணி எட்டாச்சு கெய்சர் போட்டு இருக்கேன் சீக்கிரம் குளிச்சுட்டு வா., டிபன் ரெடி., காயத்திரீ அழைத்தாள். கொஞ்சம் இரும்மா ஆபிஸ் வேலையை முடிச்சுட்டு வரேன் என்று சொல்லிக்கொண்டே ராகவ் முன்னால் இருந்த லேப்டாப்பில் ஆபீஸ் பைலை மினிமைஸ் செய்துவிட்டு பேஸ் புக் பக்கத்தை திறந்தான் ஏகப்பட்ட மெஸேஜ் இணைப்புகள். வெள்ளோட்டமாக பார்த்துவிட்டு அவனது ஸ்டேடஸ் பக்கத்தில் “இருக்கு ஆனால் இல்லை ” என்று போஸ்ட் செய்துவிட்டு லாப்டாப்பை மூடி கையில் மொபைலுடன் பாத்ரூம் நோக்கி சென்றான்.


மாடசாமி மைனி

 

 அண்ணா நகரில் இலவச தையல் மெஷின் வழங்கும் விழா நடந்த நான்காவது நாள் நண்பன் கூறினான் என்ற பெயரில், அத்தனை அறிமுகம் இல்லாத அந்த டூ வீலர் சீட் கவர் தைக்கும் கடைக்காரனை அழைத்துக் கொண்டு டூவி புரம் சென்றேன். இருவரும் ஒரே வண்டியில் அமர்ந்து சென்று கொண்டிருந்த போது வண்டியை ஓட்டிக் கொண்டே “ அது வேற தையல் மெஷின், சீட் கவர் தைக்கிறது வேற தையல் மெஷின், தெரியும்ல “ என்றான் அவன். “


ஷட்டகன்

 

 சரவணன் இனி அடுத்த பல மாதங்களுக்கு மாமியார் வீட்டில் தங்கிவிட முடிவு செய்தான். அவன் மனைவி கல்யாணிக்கு இது ஏழாவது மாதம். இரண்டாவது பிரசவம். அவளுக்கு பிரசவம் ஆனதும் அவளுடன் சில மாதங்கள் இருந்து குழந்தையை கொஞ்சலாம் என்று நினைத்தான். சரவணன் ஒரு பெரிய ஏமாற்றுப் பேர்வழி. எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர் ஒருத்தருக்கு நல்ல குடும்பத்தில் மணமகள் தேவை என்று தன்னைப்பற்றி மாட்ரிமோனியல் விளம்பரம் கொடுத்ததான். நிறைய பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். தெரிந்த இரண்டு நாடக நடிகர்களை