கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2017

30 கதைகள் கிடைத்துள்ளன.

ஹனுமன் பிரம்மச்சாரியா?

 

 “ஹனுமன் பிரம்மச்சாரிதானே! பிறகு ஏன் சுவர்ச்சலா தேவியை அவருடைய மனைவி என்று கூறுகிறார்கள்? இது ராமாயணத்தில் உள்ளதா? சூரியனின் பெண்ணான சுவர்ச்சலாவை அனுமன் திருமணம் புரிந்தாரல்லவா? குரு புத்திரியை திருமணம் செய்வது தகுமா? அனுமனுக்கு அநேக ரூபங்கள் உள்ளனவே, எதனால்?”. இது போன்ற பல சந்தேகங்கள் பக்தர்களுக்கு எழுகின்றன. ராமாயணத்தில் அனுமனின் மனைவி பெயர்கள் இல்லை. சுவர்ச்சலா பற்றிய கதையும் ராமாயணத்தில் கிடையாது. இராமாயண சம்பந்தமில்லாதது என்பதற்காக அதை தள்ளிவிடக் கூடாது. சுவர்ச்சலா தேவி என்பது உபாஸனை


நெருப்புடா! நெருங்குடா!

 

 “ஏய்! என்னடி இது?” என்று கையிலிருந்த சேலையைக் காண்பித்து கேட்டாள் அலமேலு. “என்ன அத்தே?” என்று தயங்கிக் கேட்ட ரம்யாவின் கன்னங்களில் பளாரென்று அறை விழுந்தது. “ஏண்டி என் காஸ்ட்லி சேலைய பார்த்து துவைன்னு அப்பவே சொன்னேனில்ல. இப்படி கறை பண்ணி வைச்சிருக்கே?” என்று அதட்டினாள் அலமேலு. “இல்ல அத்தே! நான் சரியாத்தான்” என்று முடிப்பதற்குள் அடுத்து அறை விழ துவண்டு விழுந்தாள் ரம்யா. “ஒழுங்கா துவைச்சு அயர்ன் பண்ணி வைக்கனும் என்ன?” என்று அழகாக துவைத்து


செவத்தகன்னி

 

 காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாய் கொட்டித் தீர்த்த வெயில் குறைந்து போய், தெற்கேயிருந்து மெல்லிய காற்று வேப்பம்பூக்களின் வாசனையோடு வீசியது. சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டிருந்தது. அதனை எடுத்துக்கொண்டும், ‘முக்கூட்டில்’ இருக்கும் கடைத்தெருவில் சலீம்பாய் கடையில் மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டும் வரவேண்டும் என கிளம்பியிருந்தாள். பக்கத்து தெருவிலிருக்கும் கடையில் ஒன்னுக்கு ரெண்டு கொடுத்து வாங்க வேண்டும். முக்கூட்டுக்கும், ஓர்ச்சேரிக்கும் மூன்று மைல் தூரம் இதனை கடந்து தான்


மகளிர் தினம்

 

 “டார்லிங், இன்னிக்கு ஒரு முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு. கம்பெனி செகரட்டரி, செக்சன் ஹெட், லாயர் அப்புறம் சில போர்ட் மெம்பர்கள் கவர்ன்மெண்ட் நாமினி இப்படி பெரிய கும்பலை கூட்டிக்கிட்டுப் போகணும் . நான் அதனால இன்னோவாவை எடுத்துக்கிறேன். நம்ம நீ நல்லிக்கு போக நம்ம மாருதி ஆல்டோ வை எடுத்துக்க பிளீஸ்” என்று மனைவியிடம் கெஞ்சினார் சங்கரன். நான் மட்டும் என்னங்க லேடிஸ் கிளப் மெம்பர்கள் ஆறு பேர் போறோம். எப்படிங்க ஆல்டோவில போக முடியும்.


சஞ்சலம்

 

 சரண்யா அடுத்த சனிக்கிழமை தன் கணவர், இரண்டு குழந்தைகளுடன் பெங்களூர் வருகிறாளாம். அவள் கணவரின் தம்பிக்கு மல்லேஸ்வரத்தில் ஞாயிறு அன்று கல்யாணமாம். இரண்டு நாட்கள் இருப்பாளாம். போன் பண்ணிச் சொன்னாள். அதை என் மனைவி ரோஹினியிடம் சொன்னபோது உற்சாகமில்லாமல் “அப்படியா” என்றாள். சரண்யா என் அத்தை மகள். கெட்டிக்காரி. ஸி.ஏ படித்துவிட்டு ஒரு அயல் நாட்டு வங்கியில் பணி புரிகிறாள். பார்க்க அழகாக இருப்பாள். அவளைத்தான் நான் கல்யாணம் புரிந்திருக்க வேண்டும். என் அப்பாவும், அத்தையும் என்னிடம்