கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2017

30 கதைகள் கிடைத்துள்ளன.

விழுக்காடு

 

 முன்குறிப்பு:- நான் ஆபிரிக்காவில் ஐ.நா.வுக்காக வேலை செய்தபோது நடந்த கதை இது. ஊரும், பேரும் சம்பவங்களம் முற்றிலும் உண்மையானவை. அதற்கு நான் கொஞ்சம் உப்பு-புளியிட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து மணம் கூட்டியிருக்கிறேன். வேறொன்றுமில்லை. தயவுசெய்து கதை முடிந்தபிறகே பின்குறிப்பைப் படிக்கவும். — அவருடைய பெர் ஹென்றிகே லோடா. இத்தாலியர். ஐ.நாவின் பிரதிநிதியாக மேற்கு ஆபிரிக்காவிலுள்ள சியராலியோனுக்கு வந்திருந்தார். நாற்பத்தெட்டு வயதுக்காரர். உயரம் ஐந்தரை அடியும், எடை நூற்றிமுப்பது கிலோவுமாக உருண்டையாக இருப்பார். கண் புருவங்கள் அடர்த்தியாகவும்,


எது தவறு?

 

 ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு என்றார் போஸ்ட் மேன் ராக்கி என்கிற ராக்கப்பனிடம் சாம்ராஜ் நகர் போஸ்ட்மாஸ்டர், சார் அந்த அட்ரஸ்ல இருக்கறவரு இரண்டு மூணு நாளைக்கு முன்னாடி இறந்துட்டாராம், அதான் என்ன பண்றதுன்னு வச்சுருக்கேன், தபால் எங்கிருந்து வந்திருக்கு? கோயமுத்தூர்ல் இருந்து சார், சரி அந்தகடிதாசிய நாளைக்கே திருப்பி அனுப்பிச்சுரு, சரி என்று கடிதத்தை எடுத்தவன் கடிதம் பிரிந்திருப்பதை பார்த்து


காந்தி இன்னாபா சொன்னாரு

 

 எனக்கும் தியாகுவுக்குமான நட்பு எங்களின் இரண்டாம் வகுப்பிலிருந்து ஆரம்பமானது. முதல் வகுப்பு வரை வேறு ஊரில் படித்த நான் இரண்டாவது படிக்கும் போது குடும்பத்தோடு திருவொற்றியூர் வந்து சேர்ந்தோம். ஸ்கூல் திறந்து சுமார் ஒரு மாசம் கழிச்சுதான் நான் சேர்ந்தேன்.புது பள்ளிக்கூடம். புது வாத்தியார். புது சூழல். முதல் நாள் பள்ளிக்கூடத்துக்கு போனபோது எனக்கு ஒரே அழுகையாக வந்தது. சிகப்பா, அழகா (நிஜமாதான்), சூட்டிகையா ஒரு பையன்,புதுசா வந்து சேந்ததும் சூர்யா டீச்சர்தான் என்னை கையைப் பிடிச்சிண்டு


அறியாத வயசில் செய்த புரியாத தவறுகள்!

 

 இன்னொவா கார் சுமங்கலி அபார்ட்மெண்ட் முன் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் தோற்றம் கண்ணியமாக இருந்தது. அரசு அதிகாரிகள் என்று பார்த்தவுடனேயே அந்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி புரிந்து கொண்டான். “ சார்!…நீங்க யாரைப் பார்க்க வேண்டும்?…” “ இன்கம் டேக்ஸ் ஆபிஸர் சத்திய நாராயணனை பார்க்க வேண்டும்!…” “ அவர் சி. 27 ல் இருக்கிறார். 3- வது மாடி. வலது புறம் நாலாவது வீடு…,சார் வீட்டில் தான் இருக்கிறார்..” அந்த நாலு பேர் கொண்ட கும்பல் 3-வது


பாடம்

 

 குமரேசன் தன் மனைவி கோமதியுடன் வீட்டில் தனித்து விடப்பட்டார். கடந்த ஒரு வாரமாக வீடு விசேஷக் களையுடன் அதகளப்பட்டது. பேத்தியின் காதணி விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர். மகன் வயிற்றுப் பேத்தியும் இன்று காலை ஊருக்குச் சென்றுவிட்டதால் அவள் இல்லாமல் வீடே வெறிச்சென்று காணப்பட்டது. அவர் தன் மனைவியிடம், “ஏ புள்ள காதணிக்கு வந்த அன்பளிப்பு கவர் எல்லாத்தையும் எடுத்துகிட்டு வா…யார் யார் எவ்வளவு குடுத்துருக்காங்க, மொத்தம் எவ்வளவு தேறுதுன்னு கவுன்ட் பண்ணி

Sirukathaigal

FREE
VIEW