கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2017

30 கதைகள் கிடைத்துள்ளன.

முட்டை கசக்கும்

 

 நமது நாட்டில் பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டு மிகவும் பாராட்டப்படக்கூடிய உறவுகளில் முதலில் இடம்பெறுபவள் தாய்தான் அப்புறம்தான் தந்தை. இது தான் பொதுவான உலக நியதியாகவும் இருக்கிறது. ஐரோப்பிய கலாச்சாரத்தில் வளர்த்த பிள்ளை பெரியவனானதும், வேலை தேடி எங்கேயாவது சென்றுவிடுவதால், அவன் தனியாகவே தங்கி, தனக்கென்று ஒரு குடும்பத்தை உண்டாக்கிக்கொள்கின்றான், அதில் பெற்றோருடைய பங்கு மிகவும் சொற்பமாக இருக்கும். தான் பெற்ற பிள்ளை எத்தனை தவறுகள் செய்தாலும், அவைகளை திரும்ப திரும்ப செய்தாலும், அனைத்தையும் மறந்து, கோபத்தை துறந்து,


மீண்டும் சில வெண்ணிற இரவுகள்

 

 இந்தக் கதை எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். “வெண்ணிற இரவுகள்” படிச்சிருந்தீங்கனா இன்னும் சுலபம். கிட்டத்தட்ட அதே கதை தான். சரி அதே கதையை ஏன் திரும்ப எழுதணும்னு கேக்க தோணுதுல்ல. அது அப்படித்தான். சித்தார்த்தன் ஏன் அந்த நேரத்துல வீட்டை விட்டு போனான்னு கேட்டா என்ன சொல்றது. அப்படித்தான். சில நியாயங்கள் சில நேரங்களில்…..சில கோபங்கள் சில நேரங்களில்…..சில கதைகள் சில நேரங்களில். நெடுந்தொலைவு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான் அவன். பெயர் சித்தார்த்தன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். பெயரா


பசுமைத் தாம்பூலம்

 

 தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை கனகப்பிரியா திருமண மண்டபம் நிரஞ்சன் – அர்ச்சனா வரவேற்பு நிகழ்ச்சியின் மூலம் தன்னை அத்தனை சிறப்பாய் அலங்கரித்துக் கொண்டிருந்தது. மண்டப முகப்பில் இருபுறமும் குலை தள்ளிய வாழை மரம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பெரிதாய் இருந்தது. அந்தச் சாலை முழுதும் மணமக்களை வாழ்த்தும் விதவிதமான வாழ்த்து கணப்புத் திரைகள் (பேனர்கள்). திரை நட்சத்திரங்களுக்கே சவால்விடும் வித்தியாசக் கோணங்களில்


எது துரோகம்?

 

 அந்த நட்சத்திர ஹோட்டலில் நடந்த இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி செமினார் ஃபிரேக்கின் போது ராமனைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் விதி வியப்பானது. 25 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சந்திக்கிறோம். இந்த 25 வருடங்கள் எங்கள் சந்திப்பின் இடைவெளி மட்டுமல்ல; உடையவே உடையாது என்று பார்த்தவர் எல்லாம் பாராட்டிய எங்கள் நட்பு முறிவின் சில்வர் ஜூபிலியும் கூட. முதலில் அவனைப் பார்த்ததும் என் கண்கள் விரிந்தன. ஒரு சின்ன ஸ்மைல் பண்ண நினைத்தேன். ஆனால் உடனேயே என்னை அடக்கிக்


உடும்பு

 

 எனக்கு ஒரு ஒன்றுவிட்ட அக்கா இருந்தாள். வெகு காலத்திற்கு முன்பு சொற்ப நாட்களே அவளுடன் நான் பழகநேர்ந்தாலும் என்னால் அவளை மறக்கமுடியாது. கொஞ்சக் காலம் சென்ற பிறகு அவர்கள் எங்கோ நாங்கள் எங்கோ என்று பிரிந்து விட்டோம். பிறகு அவள் என்ன ஆனாள் என்று எனக்கு தெரிய வழியே கிடைக்கவில்லை. சமீபத்தில் ஒருநாள் புறநானூறு படிக்கும்போது, ‘உடும்புரித்தன்ன வென்பெழு மருங்கிற் கடும்பின் கடும்பசி’ என்ற வரிகள் வந்ததும் அவள் ஞாபகம் எனக்கு பழையபடி வந்தது. மோந்ததும் வாடிவிடுமாம்

Sirukathaigal

FREE
VIEW