கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 3, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை

 

 முகவுரை “காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை” என்னும் இக் கதை Lord Lytton (லார்ட் லிட்டன்) ஆங்கிலத்தில் எழுதிய “Death and Sisyphus” (காலனும் சிசுபசும்) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. மிக்க இனிமை வாய்ந்த இக்கதையை நந்தம் தமிழுலகோர் படித்து இன்புற வேண்டும் என்னும் ஆசைமீக்கூரத், தமிழர் சுவைக்கு ஏற்ற வேறுபாடுகளைப் புகுத்தி யமைத்து இந்நூல் எழுதப்பட்டது. இக் கதையை நாடக ரூபமாக அமைத்தால் பெரிதுஞ் சுவைதரும் என்பதற்கு ஐய மில்லை. இக் கதையால்


அந்திமாலையின் இருமுகங்கள்

 

 எழுதியவர்: மதி நந்தி ஹௌரா ஸ்டேஷனின் பிரும்மாண்டமான தகரக் கொட்ட கையின் கீழே நின்றுகொண்டு இரு சகோதரிகளும் நாற்புறமும்திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நடமாடும் ஒவ்வொரவரின் முகத்தையும் உற்றுப் பார்த்தார்கள். யாரும் அவர்களைப்பொருட்படுத்தவில்லை, எல்லாருக்கும் அவரவர் வேலையிருந்தது. அவர்கள் விசாலமான கொட்டகைக்குக் கீழே மக்களின் நடமாட்டத்துக்கும் இரைச்சலுக்கும் நடுவே விக்கித்துப்போய்நின்றார்கள். ஸ்டேஷன் முழுவதுக்கும் கேட்கும்படியாக ஏதோ ஒரு குரல் கேட்டது. சகோதரிகள் ஒருவரையொருவர்பார்த்துக் கொண்டார்கள். பிறகு அந்தக் குரல் கேட்டது. சட்டென்று ஓய்ந்துவிட்டது. சிறியவள் விரலால் சுட்டிக்காட்டினாள்.


நெனப்பு

 

 தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை ஏழெட்டு மணிநேர பயணக் களைப்பிற்குப் பின் ஓட்டலைத் தேடிப் பிடித்து உள்ளே நுழைந்தவுடன் படுக்கையில் விழுந்தால் போதும் என்றிருந்தது. அலுப்பைத் தரும் நெடுநேர பேருந்துப் பயணம். உடலையே குலுக்கிப் போட்டது போல மோசமான சாலைகள். ஊமை வெயில். ஜன்னல் வழியாக அறையும் காற்று. உட்கார்ந்து வந்ததே ஓடிவந்ததைப் போன்ற களைப்பைத் தந்திருந்தது. உள்ளே வந்தவுடனேயே அனைவரும் கழிப்பறைக்கே


கண்ணாடி

 

 ஜாதகம் பார்க்கப் போன இடத்தில்தான் அவளை முதன்முதலில் பார்த்தேன். அவளும் ஜாதகம் பார்க்க வந்திருக்கிறாள் என்று நினைத்தேன். “அம்மா கல்யாணி! சித்த அந்தப் பொஸ்தகத்த எடுத்துக் குடும்மா” என்று ஜோஸ்யர் சீதாராமன் சொல்லவும் “இதோ வர்றேம்பா” என்று அவள் பதில் சொன்னாள். ‘ஜோஸ்யரின் பெண்ணா? வாவ்… காதலுக்குத்தான் கண்ணில்லை என்று நினைத்தேன். கடவுளுக்கும் இல்லை போலிருக்கு. இவள் மாதிரி ஒரு அழகி பிறக்க வேண்டிய வீடா இது? அநியாயம்’ என்று மனது சொன்னது. கல்யாணி! ராகத்தைப் போலவே


காலம் உனக்கொரு பாட்டெழுதும்

 

 வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல். இன்றையப் போத்தின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான விடியலாக இன்றிச் சற்றே குளிரூட்டியபடி, ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டுகிற குளிர். இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை விரித்துக் காட்டியபடி, எங்கு பார்த்தாலும் புகையிலைத் தோட்டங்கள் தெரிந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர் பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய் எரிந்துபோகிற புகை கதம்பமாய் மணத்தது. அருளுக்குத்தான் முதலில்