கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2017

49 கதைகள் கிடைத்துள்ளன.

மாற்றம் செய்வோம்

 

 2040இல் தமிழ்நாடு (இது கனவல்ல நிஜம்) வல்லரசு இந்தியாவில், வானளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், அனைத்து வகையான ஆடம்பர பொருள்களும் நிறைந்து காணப்படும் வீடுகள், எங்கும் எதிலும் டிஜிட்டல் மயமாக காட்சியளிக்கிறது தமிழகம். இலவச வைஃபை வசதி, அதிவேக மெட்ரோ ரயில் வசதி போன்ற அனைத்தும் அமையப் பெற்றிருக்கிறது. தொழில்வளர்ச்சியில் முன்னோடி மாநிலம் என்ற மற்றுமொரு சிறப்பும் கூட தமிழகத்திற்கு. ஆனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்பது மட்டும் கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே


இரவில் வந்தவன்

 

 நள்ளிரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் இருக்கும், “சோ” வென மழை பெய்து கொண்டிருந்த்து,அவ்வப்பொழுது மின்னலும் சிமிட்டிவிட்டு சென்றது, அதன் பின் இடி இடித்தது, தெருவையே ஆண்டு கொண்டிருக்கும் தெரு நாய்கள் மழைக்கு பயந்து வாலைச்சுருட்டிக்கொண்டு அங்கங்கு மூலையில் படுத்துக்கிடந்தன. ஸ்ரக்..சரக் என காலணி சத்தம் ஒலிக்க ஒரு உருவம் அந்த சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தது, அது எந்த மழையையும்,இடியையும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இரு புறங்களில் உள்ள கட்டிடங்களை மாறி மாறி பார்த்துக்கொண்டே வந்தது, அதனுடைய செயல் ஏதோ


விண்கல்

 

 பௌதிகத் துறை பேராசிரியர் ராஜன் அஸ்டிரோ பிசிக்சில் (Astro Physics) எனப்படும் வான்யியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விண்கல் தோற்றமும் அதனால் பூமியின் பாதிப்பு பற்றி அவர் ஆராச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். வானியற் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை விஞ்ஞானி என்ற சஞ்சிகைக்கு எழுதிவருபவர். வாண் சாஸ்திர வல்லுனர்கள் பலரின் வரலாறு பற்றி அறிந்து வைத்திருந்தார். அவ்வல்லுனர்களில் அவரை முக்கியமாக கவர்ந்தவர்கள் அல்பேர்ட் அயின்ஸ்டைனும், ஸ்டீபன் ஹோகின்சுமேயாகும். உலகம் போற்றும் அல்பேர்ட் அயின்ஸ்டைனின் நினைவாகத் தன்


தங்க மீன்கள்

 

 எனக்கு வயது இருபது. எனக்குள் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற துடிப்பும் ஆசையும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டிரண்டு வருடங்கள் படித்து, இப்பதான் +2 முடித்தேன். ஆனால் ரிசல்ட் இன்னமும் வரவில்லை. பரீட்சை எழுதின எனக்குத் தெரியாத ரிசல்டா? சின்ன வயதிலிருந்தே கோலிவுட் என்னுடைய மனதில் ஒரு மாயாபஜார் போல் அழகுடன் பதிந்து கிடந்தது. அதற்கு முக்கியமான காரணம் தனுஷ் நடிக்கும் காதல் தூவப்பட்ட படங்கள்தான். ‘துள்ளுவதோ இளமை’ சினிமாவிலிருந்து, நேற்று நான்


எலுமிச்சை

 

 [கதைகளுக்கு முன்னுரை எழுதுவது எனக்குப் பிடிக்காது. அதென்ன கட்டியம் கூறுவதுபோல என்று கிண்டல் செய்வேன். கதையென்றால் சொல்ல வந்த விஷயத்தை கதையிலேயே சொல்லிவிட வேண்டியதுதானே! இது என்ன முன்னுரை? அறிவுரை? ஆனால் இந்த முன்னுரை எழுதுவதில் ஒரு காரியமிருக்கிறது கு.அழகிரிசாமி எழுதிய ‘குமாரபுரம் ஸ்டேஷன்’ என்ற கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். அதில் ஒரு பாத்திரம் மூலமாக ‘நாங்கள் ஒன்றை மனதில் நினைத்து செய்யும் செயல் எப்படி எங்களை அறியாமல் இன்னொரு காரியத்துக்கு உதவுகிறது’ என்று சொல்லியிருக்கிறது. நான்