Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 24, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

சாகப் பிடிக்காதவர்கள்

 

 என்ன இருந்தாலும் தாம்பரம்னா தாம்பரம்தான். அந்த அதிகாலைப் பனியும் சில்லு காத்தும் ஸிட்டில கிடைக்குமா சொல்லுங்க? அதுவும் போன மாசம் முழுக்க மதுரை திருச்சின்னு ஆபீஸ் விஷயம் டூர்ல இருந்த எனக்கு இந்தக் குளிர் ரொம்பவுமே இதமா இருந்துது. நேத்து ராத்திரி தான் தாம்பரம் வந்தேன். ஒரு சின்ன வாக் போலாம்னு வெளியே வந்திருந்தேன். மனைவி நச்சரிப்புப் தாங்காம எடுத்த வந்த மப்ளர் கழுத்தைச் சுற்றி ஸ்டைலாகக் கிடந்தது. அந்தக் குளிருக்கு ஒரு தம் போட்டா இன்னும்


பிறந்த நாள்

 

 வீடு முழுவதும் அலங்காரத் தோரணங்கள். வண்ண வண்ண பலூன்கள். கலர் விளக்குகள் கண் சிமிட்ட.. “ஹேப்பி பர்த் டே டு நேத்ரா’ என்கிற ஆங்கில தர்மாகோல் வாசகங்கள் பளிச்சிட… “ஓ இன்று நேத்ராவின் பிறந்த நாள்’. கற்பகத்தின் மகள் நேத்ரா. பன்னிரண்டாம் ஆண்டு பிறந்த நாள். குறிஞ்சி மலர் பூத்தது போல் பூத்த மலர் நேத்ரா. கண் மலர் கற்பகத்தின் கண்ணம்மா மலர். அந்த ஹாலின் நடுமையத்தில் தலைக்கு மேலே கலர் காகிதங்கள். மின் விசிறி காற்றுக்கு


கண் கெட்டப் பிறகு…

 

 “அங் மோ கியோ நூலகத்தில் அவளைச் சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை”. அன்றலர்ந்த ரோஜா மலர் போல எப்போதுமே புத்துணர்ச்சியுடன் இருக்கும் நந்தினியின் வதனம் வாடிப்போய்க் காணப்பட்டது. அது அவள்தானா என்று கூடவே ஓர் ஐயமும் தோன்ற அவளது அருகில் சென்று, “நந்தினி” என்று மெதுவாக அழைத்தேன். திரும்பிய அவளும் ஆச்சர்யப்பட்டுப் போனாள். நீண்டகாலமாகப் பிரிந்திருந்த தோழியர் இருவரும் இரவல் பெற்ற புத்தகங்களுடன் வெளியில் வந்தோம். நந்தினியின் தோற்றத்திற்கான மாற்றத்தை அவளுடன் உரையாடியதிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஏழு


கழுதைக்கும் கற்பூர வாசனைதெரியும்

 

 எலே, இந்தக் கழுதய ஏமாத்தனும்னு நினைக்கிறானா? பிச்சுப்புடுவேன் பிச்சு!, நீ போய் அவன இழுத்தாம்லே, பணத்தை வாங்கிட்டு இந்தா அந்தா’னுட்டு இழுத்துகிட்டு திரியறான், பேசுன பேச்சு பிரகாரம் நடக்காத பய, அவனையெல்லாம் இழுத்து வெச்சு..கடினமான வார்த்தைகளை வீசினார்.அண்ணாச்சியின் வசவுகள் எனக்கு புதிதல்ல! நான் அவரிடம் கணக்குபுள்ளையாக வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது,இந்த ஐந்து வருடங்களில் அவருடைய குணநலன்கள் எனக்கு அத்துப்படி, தொழிலில் கறார், ஓப்பந்த தொழில்களின் நெழிவு சுழிவுகளை, விரல் நுனியில் வைத்திருப்பார், யார் யாரை


முதியோர் இல்லம்

 

 சிவகுமார் அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அவனுக்கு திருமணமாகியும் அவர்களிடம் அதே மரியாதையுடன், வாஞ்சையுடன் இருந்தான். தாம்பரத்தில் ப்ளாஸ்டிக் காம்போனேன்ட் ஆன்சிலரி யூனிட் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தான். அதன் மூலம் பணத்தில் கொழித்தான். ஆனால் அவன் மனைவி மேகலாவுக்கு தன் வீட்டில் மாமனார், மாமியார் இருப்பது மிகப் பெரிய எரிச்சலாக இருந்தது. அதேசமயம் அவளின் இரண்டு மகன்களும் குழந்தைகளாக இருந்தபோது, நன்கு கவனித்துக் கொள்ளப்பட, வளர்க்கப்பட அவர்களின் உதவியும் தேவையாக இருந்தது. அதனால் குழந்தைகள் பெரியவர்களாக வளரும்வரை