Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 24, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

ரேங்க்

 

  “என்னடா பரீட்சை எழுதியிருக்கே? எல்லாத்திலேயும் ஒண்ணு, ரெண்டு மார்க் குறைவா வாங்கியிருக்கே?’ இரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷிடம் எரிந்து விழுந்தாள் வகுப்பு ஆசிரியை. “இல்லே… மிஸ்.. நல்லாத்தான் எழுதினேன்.’ “என்னத்த கிழிச்சே… நல்லா படிச்சாத்தானே…? ஃபர்ஸ்ட் ரேங்க் வரணும்னு சொல்லியிருக்கேன் இல்லே.. எப்பவும் செகண்ட் ரேங்கிலேயே இருக்கே…?’ தலையில் ஒரு குட்டு வைத்தாள். “ஸாரி மிஸ். அடுத்த தடவை ஃபர்ஸ்ட் ரேங்க் வந்திடறேன் மிஸ்…’ வீட்டிற்கு திரும்பிய தினேஷ், அம்மாவிடம், “என்னம்மா மிஸ் எப்ப பார்த்தாலும்,


குடுமி ஆட்டம்!

 

 ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவருக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன. பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப் பெண் ஆணைப் போலவே வளர்ந்தாள். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். மேலும், கலை, இலக்கியம், இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள். பெண்ணுக்கு தகுந்த மாப்பிள்ளை தேட முயற்சி எடுத்தார் பண்ணையார். வரக்கூடிய மாப்பிள்ளை தன் வீட்டோடு இருக்கக் கூடியவனாகப் பார்த்தார். பல மாதங்களாக பல ஊர்களில் பார்த்தும், எதுவும் பொருத்தமாக அமையவில்லை. எவருமே மாமனார் வீட்டில்


கடவுள் வந்தார்

 

 மூன்று நாட்களாக கடும் சுரம். நான்கு மணி நேரதிற்கு ஒரு முறை மாத்திரையால் கட்டுப் பட்டது இப்போது முன்னேறி ஏழு மணிக்கு ஒரு முறை கட்டுப் படத் தொடங்கி இருந்தது…. சென்னை வெய்யிலின் உக்கிரம் தணியும் மாலை வேளை. மணி 6:30. புழுக்கம் உச்சதில் இருந்தது. கொஞ்சம் வெளியே சென்றால் நான்றாக இருக்கும். செருப்பை மாட்டிக் கொண்டு ஒரு அடி எடுத்து வைத்ததும் தோன்றிய யோசனை ‘இந்த தளர்ந்த நிலையில் ஏன் வெளியே செல்ல வேண்டும், மேலே


வியாபாரம் என்பது அரசியல் மாதிரி!

 

 புரத சத்து மிகுந்த ‘ஹெல்த் பிளான்’ என்ற சத்துப் பவுடர் தயாரிக்கும் அந்தக் கம்பெனியின் முதலாளியும், அன்று அந்தக் கம்பெனி மானேஜர் ராம் பிரசாத்தும் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்திக் கொன்டிருந்தார். ‘ஹெல்த் பிளான்’ பவுடரை ‘பாக்கெட்’டில் அடைத்து , மெடிகல் ஷாப்கள் மூலம் அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். “ சார்!…நம்ம கம்பெனி தயாரிப்புகளை, தயாரித்த ஆறு மாதங்களுக்குள் உபயோகித்து விட வேண்டும்…இல்லாவிட்டா கெட்டு போயிடும்!…ஐந்து மாதங்களுக்கு முன்பு தயாரித்த பத்தாயிரம் பாக்கெட்கள் விற்பனை ஆகாமல்


இன உணர்வு

 

 இன்னும் சரியாகப் புலர்ந்திராத ஜனவரி மாத காலை. மணி நாலரை ஐந்துக்குள் இருக்கும். தினசரி காலை நடைப் பயிற்சி என்பது பொதுவாக மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில்தான். திரும்பத்திரும்ப ஒரே நேர்கோட்டில் கைத்தறியில் ஊடை நூலைப் போல இயந்திரத்தனமாய் குறுக்காக போய் வருவது படு சலிப்பான ஒன்று . வழக்கமாக மார்கழி மாதம் முதலே சிலர் குளிருக்கும், பனிக்கும் பயந்து நடைப் பயிற்சிக்கு தற்காலிகமாக விடுப்பு எடுத்து விடுவர். சிலர் கோவில்களில் தெய்வ சேவைக்கு