கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

129 கதைகள் கிடைத்துள்ளன.

ஈ.எஸ்.பீ (e.s.p)

 

 “பயமா இருக்கு டாக்டர்” என்று சொன்ன என்னைப் பார்த்தார் (சைக்கியாட்ரிஸ்ட்) டாக்டர் ஆதிமூலம். “என்னய்யா பயம்? இதெல்லாம் ஒரு passing phase. ரொம்ப சின்ன விஷயத்தப் பெருசு பண்ணாதே! கொஞ்ச நாள்ல சரியாயிடும். இந்த மருந்து தரேன். anti stress மருந்து. கொஞ்சம் தூக்கம் வரும். அதுனாலே நைட்ல சாப்பிட்டா, வெளில போகறத தவிர்க்கறது நல்லது” என்று சொன்னார். என்னடா திடுதிப்புன்னு டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போயிட்டேன் என்று நினைக்காதீர்கள். ஒரு இரண்டு மாதகாலம் முன்னர் ஆரம்பித்த


ஒற்றை யானை

 

 தலை கிறுகிறுக்க அருகில் இருந்த பிளாஸ்டிக் கதிரையை பிடித்தாள். கதிரையில் ஒட்டியிருந்த செலோடேப்பில் ஈரக்கை பட்டு வழுக்கியது. கதிரை சாய்ந்துவிட நெற்றி போய் சுவரில் மோதிக்கொண்டது. வலித்த நெற்றியைத் தடவியபோது விரலில் இரத்தம் பிசுபிசுத்தது. சுவரோடு சாய்ந்து கொண்டாள். கால்கள் வலுவற்று தரையில் நிலைகொள்ள மறுத்தன. அப்படியே இருந்துவிட்டால் சுகமாயிருக்கும் போலிருந்தது. அது ரணமாகவிருந்தாலும் வேறு வழியில்லை….. சிறிது நேரம் அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். உதவிக்கு ஆளில்லாத வீட்டில் எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பாள் எனத்தெரியாது. ‘முழிப்பு


பரம்பரையின் மகத்துவம்

 

 கலாசாரம், தர்மம், விஞ்ஞானம் ​ …​ இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால் வரும் வம்சாவளிக்கு அதிக பலத்துடன் கூடியதாகிறது. எனவே தான் ஒவ்வொரு பரம்பரையினரும் தம் பின் வரும் பரம்பரைகளுக்காகத் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஒரு வயதானவர் ஒரு மாஞ்செடியை நடுகையில் வழிப்போக்கர் ஒருவர் பார்த்து சிரித்து, “தாத்தா! இந்தச் செடி வளர்ந்து மரமாகும் வரை நீ உயிருடன் இருப்பாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த


காண்டீபன்

 

 காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக ஆண்டுவந்த பல்லவ மன்னன் அபராஜித வர்மன் (கிபி 870-890), ஒரு ரகசிய ஓலையை அந்நாட்டு ஒற்றனும் சிறந்த குதிரை வீரனுமாகிய இருபத்துநான்கு வயது காண்டீபனிடம் கொடுத்து, அதை பூம்புகாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுவரும் சோழ மன்னன் ஆதித்த சோழனிடம் (கிபி 871-907) ரகசியமாக கொடுத்து வரச்சொன்னான். ரகசிய ஓலை என்பதால் அதை இரவில் ஒரு கருப்பு குதிரையில் கொண்டு சொல்வது வசதியானது என்று அக்காலத்தில் கருதப்பட்டது. காண்டீபன் புரவியில் ஆரோகணித்தபோது இரவு


அவனின் நாணயமே அவனுக்கு எதிரி

 

 காலையில் பேப்பரை விரித்த எனக்கு ஒரு செய்தியை பார்த்தவுடன் வியப்பாய் இருந்தது. போலீஸ் அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார், என்று அவரின் படத்தை போட்டிருந்தார்கள். அவரை பார்த்தவுடன் எனக்கு அன்று நடந்த நிகழ்ச்சி நினவுக்கு வநதது. பள்ளி முடிந்தவுடன் நண்பன் “கை பேசியில்” அழைத்தான். நம்ம ஸ்கூல் அறிவியல் மாஸ்டர் மனைவிக்கு ஆண் குழந்தை இப்பொழுதுதான் பிறந்தது,என்று நியூஸ் வந்திருக்கிறது. நீ வந்தால், நாம் இருவரும் பார்த்துவிட்டு வந்து விடலாம். நான் ஹாஸ்பிடல் வாசலில்