கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

129 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்றுக்குள் ஒன்று

 

 காரை ரிவர்ஸ் எடுக்கும் போதுதான் கண்ணாடியில் மனோகரைப் பார்த்தேன். எவ்வளவு நாள் ஆச்சு! இல்லை வருடங்கள் ஆச்சு. காலேஜ் கடைசி நாளன்று பார்த்ததுதான். காரை நிறுத்தி, கதவைத் திறந்து இறங்கி “மனோகர்” என்று கூப்பிட்டேன். தனது வண்டிக் கதவைத் திறக்க இருந்தவன் திரும்பினான். திரும்பியவன் கண்களில் ஒரு பளிச். “டேய் ஆதி? யூ @#@#@ moron! எங்கடா இருந்த இவ்வளவு நாளா?” இது தான் எங்கள் நட்பு. ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் கண்டபடி திட்டிக் கொள்ளும்


ராமர்தான் வேண்டும்

 

 வால்மிகியின் மறு அவதாரமாக துளசிதாசர் கருதப்படுகிறார். பவிஷ்யோத்தர புராணத்தில் பரமசிவன், “வால்மீகி முனிவர் ஹனுமனிடம் வரம் பெற்று கலியுகத்தில் பிறந்து எளிய பேச்சு நடையில் ராமாயணத்தைப் புனைவார்” என பார்வதியிடம் கூறினார். வால்மீகி ராமாயணத்தை போலவே துளசி ராமாயணமான ‘ராம சரித மானஸும்’ பக்தியுடன் பக்தர்களின் வீடுகளில் நித்திய பாராய​ணமாக வாசிக்கப்படுகிறது. ‘சௌபாயி ‘ எனப்படும் நான்கு பதங்கள் உள்ள இரண்டிரண்டு வரிப் பாடல்களாக மனத்தைக் கவரும் வகையில் ராமசரித மானஸ் இயற்றப்பட்டுள்ளது. சித்ரகூடத்தில் வாழ்ந்த மக்களின்


பஸ் பயணம்

 

 அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வட சேரி பஸ் நிலையத்தை அடைந்தபொழுது காலை 5.00 மணிக்கு திரு நெல்வேலிக்குக் புறப்படும் END TO END பஸ் தயாராக நின்று கொண்டிருந்தது.உள்ளே ஏறி நோட்டம் விட்டதில் ஒரு மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவிலே ஒரு இருக்கை காலியாக இருந்ததைக் கண்ட நான் அவசரமாக அதை நோக்கி நகர்ந்தேன், ஓரத்தில் அமர்ந்திருந்தவர் நடுவிற்கு நகர்ந்து எனக்கு ஓரத்தைத் தந்தார். பஸ்


விரிசல்

 

 அவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தது. இருவரும் நல்ல வசதியான குடும்பம். முதல் ஒருமாதம் உறவினர்கள் ஒருவர்மாற்றி ஒருவர் அவர்களுடன் இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களாகத்தான் இருவரும் தனித்து விடப்பட்டனர். பெங்களூர் இந்திராநகரில் ஒரு அபார்ட்மென்ட்டில் தனிக்குடித்தனம். அவன் பெயர் பாலாஜி. அவள் அபி. இருவரும் மெத்தப் படித்திருந்தனர். அவன் எம்.ஈ. ஒரு மானுபாச்சரிங் கம்பெனியில் புரொடெக்ஷன் மானேஜர். இவள் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்ஸ் பட்டதாரி. மனித வள மேம்பாட்டுத் துறையில் கெட்டிக்காரியாம். தற்போது


கூலிக்காரன்

 

 சிந்தாதரிப்பேட்டை புண்ணிய தலத்தில் ஓடும் கூவம் ஆற்றின் கரையில் குடியிருந்த ஏழை ஜனங்களில் பலர் போன வருட பெரு மழையில் பாதிக்கப்பட்டதும், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டனர் இல்லையா. அப்போது துரைப்பாக்கத்திற்கு அரசாங்கத்தின் கருணை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட துரும்பில் ஒன்று நம் முருகேசன். பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் . காவிரிப் பாசனம் இருந்த காலத்தில் விவசாயக் கூலியாக நாலஞ்சு தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்பம். இவன் காலத்தில் தண்ணித் தகறாறு, மீத்தேன் வாயு என்ற