கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

129 கதைகள் கிடைத்துள்ளன.

விஷ் யு எ ஹாப்பி நியு இயர்!

 

 டிசம்பர் 31, கி.பி. 2100 ‘உலகமே’ புது நூற்றாண்டின் பிறந்தநாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதாவது கடந்த வெள்ளங்களில் சிக்கி இறக்காத சிலரும், வெயிலின் தாக்கத்திற்கு எதிர்ப்பு சக்தி கொண்ட சிலரும், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படாத சிலரும். நான் வேலை செய்யும் அலுவலகத்தின் மூலம், ‘எவேகோ’ நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு சிறப்புக் கொண்டாட்டத்திற்கான ஓர் அனுமதிச்சீட்டுக் கிடைத்ததால் நானும் இரவை நோக்கி ஆர்வமாகக் காத்திருந்தேன். ஆறு மணியடித்தது… என் டபுள் ரோட்டார் ஹோவர்காப்டரில் ‘எவேகோ’வை நோக்கிப்பறந்தேன். டிராபிக்


மனைவியைத் தழுவும்போது…

 

 எப்படியோ லாரிக்காரரைக் கெஞ்சி சாக்கு மூட்டையின் மீது இடம் பிடித்து உட்கார்ந்தான். அவனைப் போல இன்னும் இரண்டு பேர் அந்த லாரியில் ஏறியிருந்தார்கள். “பொளுது விளறதுக் குள்ளாற காங்கயம் போயிறலாமா, ஏனுங்க?” பக்கத்திலிருந்த வரைக் கேட்டான். “ஆருது, அம்புட்டு நாளி எதுக்கு? உச்சிக்கே சேந்துடலாங்க!” இவன் தலையைச் சொறிந்து கொண்டான். வழியில் கொங்கு ஆண்டவர் மலைக்கோயில் மணியோசை காற்றில் மிதந்து வந்தது. “இன்னிக்கு வெள்ளி. அதான் பூசை நடக்கு. நமக்குக் கூட ஒரு நேர்த்திக் கடன் இருக்கு.


முதுநிலை மழலையர் இறுதித் தேர்வு

 

 சரியாக பிற்பகல் 3:40-க்கு பள்ளிப் பேருந்தில் அடுக்கு மாடி வளாக வாசலில் வந்திறங்கும் ஐந்து வயதுப் பேத்தியை நான் வாயிலில் சென்று வரவேற்கச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் ஒரு சின்னப் பிரளயமே நடக்கும். “நான் என்ன குட்டிப் பாப்பாவா…. என் ஃப்ரண்டு தனியாத்தானே இறங்கிப் போகிறான்… நீ மட்டும் ஏன் என்னை வந்து கூட்டிண்டு போகிறாய்…..?” “இல்லடா உன்னை வண்டிலேந்து ஜாக்கிரதையா இறக்கணும் இல்ல…. அதான்…” “அதெல்லாம் வேண்டாம், வாட்சுமேன் அங்கிள் இறக்கி விடுவார்… நான்


கானல் உலகு!

 

 வைத்தியர் மூர்த்தியின் மனதில் ஏற்கனவே புகைந்துகொண்டிருந்தது, பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக்கேட்டு பற்றி எரியத் தொடங்கியது. கொஞ்சநாளாகவே மனைவியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களைப்பார்த்து அவருக்குச் சந்தேகமாக இருந்தாலும் ,இன்று பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக் கேட்டபின்பு அவருக்கு அந்தச் சந்தேகம் சந்தேகம் சரியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. “அவளுக்கு என்ன குறை வைத்தேன்? லவ் பண்ணின காலத்தில இருந்து அவளுக்குப்பிடிச்சதெல்லாம் செய்தேனே? அப்பா அம்மாவுடன் சண்டைபோட்டு அவளைத் திருமணம்செய்தேனே?….சீ சீ நான் இப்படியெல்லாம் செய்து என்ன பிரயோசனம்,எனக்கே


சைவம்

 

 ஒரு வார மழையில் ஆணையாங்குளம் சற்று நிரம்பியிருந்தது.அரசு மருத்துவமணையின் கழிவுகளும், மனித நரகலும், குளத்தை கடப்பவரை முகம் சுழிக்க வைத்தது. மாடு குளிப்பாட்டுமிடம் சற்று சுத்தமாய் இருந்தது. கரையில் மோதும் மெல்லிய அலையில் மீன் குஞ்சுகள் ஓரம் வருவதும் உள்ளே போவதுமாய் ஆடிக்கொண்டிருந்தது. முகுந்தனுக்கு வகுப்பில் மனமில்லை, மாலையில் மீன் குஞ்சுகளுடன் விளையாட வேண்டும். மாலை, எறிந்த பையும், உறிஞ்சிய காபியுமாய் புத்தி குளத்திற்கு ஓடியது. கரையின் ஓரத்தில் சிறிய குழி தோண்டி, நீரை நிரப்பிவிட்டு காலால்