கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

129 கதைகள் கிடைத்துள்ளன.

நடுவுல கொஞ்சம் செமஸ்டர காணோம்…

 

 “என்னாச்சு?” தரணியும் மஞ்சுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர். இந்த கேள்வியை ஷர்மி கேட்பது இது எட்டாவது முறை. இன்று பைனல் ரிவிவ். இன்ஜினியரிங் எட்டாவது செமஸ்டரில் இருந்த ஒரே பேப்பர், ப்ராஜக்ட் வொர்க் மட்டும் தான். கம்பியூட்டரில் படம் பார்ப்பது, பாட்டு கேட்பது, கூகிளை திறந்து ஈமெயில் செக் செய்வது, indiaglitz.comல் கிசு கிசு படிப்பது தவிர வேறு ஒன்றும் மஞ்சுவிற்கோ தரணிக்கோ தெரியாது. அதனால் தான் ஜாவா புலியான ஷர்மியை கூட்டு சேர்த்துகொண்டு ப்ராஜெக்ட்


திருட்டுப் பட்டம்!

 

 சைதாப்பேட்டை டாட்*ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சோகமான, சுமையான நிகழ்ச்சி நடந்தது. பழைய தோழமையைப் புதுப்பித்துக்கொள்ள அது ஒரு தூண்டுதலாக அமைந்தது. நிகழ்ச்சி நடந்த மறுவாரம் ஒரு நாள் மாலை கைலாசத்துடன் தொலைபேசினேன். அவனைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். மிகுந்த ஆச்சரியமும்


பத்து வருடங்களில்

 

 இலங்கை.1994. சென்னை மீனாம்பாக்கத்திலிருந்து இரவு ஏழு மணிக்குப் புறப்பட்ட,ஐம்பது நிமிடத்தில் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தைத் தொட்டு நின்றது. எத்தனையோ கஷ்டப்பட்டு லண்டனிலிருந்து புறப்பட்டு,இந்தியா வந்து,அடையாறிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும்போது, ‘தான் உண்மையாவே தனது வீட்டுக்குப் போகிறேனா’? ஏன்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். செல்வகுமார் 1984ம் ஆண்டுதை மாதம் இலங்கை சிங்கள அரசின் கொடுமை தாங்காங்காமல் இலங்தையை விட்ட ஓடியவன்.இன்று பத்து வருட இடை வெளியிலபின் தனது ஊருக்குப் போகிறான். விமானம் இலங்கையின் தரையில்


கச்சிதமாக ஒரு கொலை

 

 ராஜதுரை தீவிரமாக யோசித்தான். சீக்கிரம் சந்தானத்தை கொலை செய்துவிட வேண்டும், ஆனால் அதற்கு நன்றாக திட்டமிடல் வேண்டும். மிகுந்த எச்சரிக்கை வேண்டும். மாட்டிக்கொண்டு ஜெயில், கோர்ட், கேஸ் என்று லோல்பட்டு கேவலப்படக் கூடாது. இது புது அனுபவம், முதல் கொலை. சந்தானத்தை கொலை செய்துவிட்டால் சுளையாக ஒன்பது கோடிகள் கிடைக்கும். சத்தமில்லாமல் ஒதுங்கி விடலாம். இந்தப் பணம் எப்படி வந்தது என்பது பற்றி ராஜதுரைக்கும், சந்தானத்திற்கும் மட்டுமே தெரியும். எனவே போலீஸ் ராஜதுரையை மோப்பம் பிடிக்க முடியாது.