கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

129 கதைகள் கிடைத்துள்ளன.

தாய் மனசு….தங்க மனசு

 

 கொதிக்கும் எண்ணையில் வெடிக்கும் கடுகாய் பொரிந்து கொண்டிருந்தாள் பத்மா. ‘அப்பவும் நெனச்சேன்….இப்படி ஏதாச்சும் இருக்கும்னு…இதுக்கு முன்னாடியெல்லாம் நான் சண்டை போட்டுக்கிட்டு…கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டா…ரெண்டு மூணு நாள்ல ஓடோடி வந்து என்னையச் சமாதானப்படுத்தி…திருப்பிக் கூட்டிக்கிட்டுப் போன மனுஷன்…இந்தத் தடவை பதினஞ்சு நாளாகியும் வராதப்பவே நான் சந்தேகப்பட்டேன்…’ ‘அடி சும்மா பொரியாதடி…ஏன் இந்தத் தடவ நீ போயி சமாதானப்படுத்தறது…அது மட்டும் செய்ய மாட்டே…அப்படித்தானெ?’ பத்மாவின் தாயார் லட்சுமி மருமகனுக்காய் பரிந்து பேசினாள். ‘நீ சும்மா இரும்மா…உனக்கு ஒண்ணும் தெரியாது…எல்லாம்


விட்ட குறை

 

 “யோவ், பெரிசு! ஊட்ல சொல்லினு வண்ட்டியா?” லாரி டிரைவரின் கட்டைக்குரலோ, விடாமல் ஒலித்த ஹார்ன் ஒலியோ கணேசனின் காதில் விழவில்லை. பத்து வயதிலிருந்தே எந்த வசவோ, சத்தமோ கேட்காதது அவரது அதிர்ஷ்டம்தான். `போனதுதான் போனாளே! போறச்சே இந்த செவிட்டு முண்டத்தையும் அழைச்சுண்டு போயிருக்கப்படாதோ? இதை என் தலையில கட்டிட்டு..!’ அப்போதெல்லாம் மாமா திட்டுகிறார் என்று மட்டும் புரியும். பயந்தவராக, இன்னும் அதிகமாக உழைப்பார் அந்தக் குடும்பத்துக்காக. அந்த ரயில் விபத்தில் தானும் போயிருக்கலாம், தன்னை மட்டும் இப்படி


ஆட்டுப்பால் புட்டு

 

 இது எல்லாம் நடந்தது சிலோனில்தான். ‘ஸ்ரீலங்கா’ எனப் பெயர் மாற்றம் செய்யும் முன்னர். அப்போது எல்லாம் ‘தபால் தந்தி சேவை’ என்றுதான் சொல்வார்கள்; அலுவலகம், அஞ்சல் துறை, திணைக்களம் போன்ற பெரிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தினம் ‘யாழ்தேவி’, கொழும்பில் இருந்து சரியாக காலை 5:45 மணிக்குப் புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு ஓடியது; பின்னர் அதே நாள் திரும்பியது. தபால், தந்தி சேவையில் அதிகாரியாக வேலைசெய்த சிவப்பிரகாசம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்தேவியைப் பிடித்துப் புறப்பட்டு, மதிய


பிறழ் வாழ்க்கை மனைவிகள்

 

 காலை எட்டுமணி. சாரதா அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அந்த இறப்புச் செய்தி கிடைத்தது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதைவிட அந்த இறப்பிற்கு தான் போகவேண்டுமா என்கிற குழப்பம்தான் அவளிடம் அதிகம் ஏற்பட்டது. குழப்பத்துடன் கணவன் சுரேந்தரிடம் சென்று, “என்னங்க ராஜேந்திரன் இன்று காலை ஏழுமணிக்கு அவர் வீட்ல இறந்துட்டாரு. எனக்கு இப்பதான் போன் வந்தது” என்றாள். “பாவம், குடிச்சு குடிச்சு லிவர் சிரோசிஸ்ல செத்தே போய்ட்டார்…அளவோட குடிச்சு கட்டுப்பாடா இருக்கத் தெரியல. அவர்


ஆடி அமாவாசை

 

 ராமுவுக்கு பசி தாங்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாளாக கொலைப் பட்டினி. செல்போனுக்கும் ரீசார்ஜ் பண்ணவில்லை. அதனால் உள்வரும் அழைப்புகள் மட்டும்தான். வெளிச் செல்லும் அழைப்புகள் பேச முடியாது. இப்படி ஒரு நாளை கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. அவன் தொழிலில் செல்போன் அத்தனை முக்கியம். அலுப்பும் சலிப்புமாக வந்தது. மனைவி வேறு துர்கா மாத விலக்கு. அப்படி இல்லாவிட்டால் அவளாவது எதாவது திவசம் திங்கள் என்று சமைக்கப் போய் விடுவாள். அதுவும் இல்லை. காலேஜில் படிக்கிற மகனுக்கு