கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 16, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!

 

 “நல்ல காலம் பொறக்குது … நல்ல காலம் பொறக்குது … இந்த வீட்டு எசமானுக்கு நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!”’ ‘ கட்டைக் குரலில் கத்திய குடுகுடுப்பைக்காரனால் தூக்கம் கலைந்து எழுந்த கண்ணனுக்கு கோவம் வந்தது. சண்டே கூட தூங்க விடவில்லை என்றால் எப்படி சுவாமி? கதவைத் திறந்து கொண்டு வந்த கண்ணனைக் கண்டதும் குடுகுடுப்பைக்காரன் இன்னும் அதிக உற்சாகத்துடன் “நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது”’ என்றான். “யோவ்! நிறுத்துய்யா உன் அமக்களத்த! காலைல


வாடகை வீடு!

 

 நான் சொந்த வீட்டில் வருடக்கணக்கில் இருந்தேன். அல்லல்பட்டு,கடன்பட்டு ஒரு வழியாக கட்டிய வீடு, கடன் பட்டதில் மனைவியின் பங்கும் கணிசமானது. வீட்டைப் பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் வீடு கட்டிய பின் நன்றாகவே தெரிந்தது. வீட்டின் வெளியே நீரின்றி அசுர வேகத்தில் வளரும் வேலிக் கருவேலம், எருக்கன் செடிகளை அகற்றுவதிலேயே சோர்ந்து போய் விடுவேன். அடுத்த ப்ராப்ளம் மழை பெய்தால் வீட்டினுள் எப்போது தண்ணீர் எட்டிப் பார்க்கும் என்பதுதான். ஒருநாள் மழையிலேயே தவளைகள் ” கெக்கபிக்கே’ என்று கச்சேரியை


சேராத இடம் சேர்ந்தால்

 

 `தினேசு! நீயும் ஒங்கப்பாமாதிரி ஆகிடாதேடா!’ அவன் பிறந்தபோது, கோயில் அர்ச்சகரிடம் போய், `ஷ்டைலா ஏதாவது சாமி பேரு வைங்க, சாமி!’ என்று பாட்டி கேட்டதற்கு, `இந்தக் காலத்திலே யாரு பகவான் பேரை வைக்கறா? நீங்க தினேஷ்னு வைங்கோம்மா. சூரியன்மாதிரி குழந்தை அமோகமா பிரகாசிப்பான்! நாகரீகமாவும் இருக்கும்!’ என்றாராம். அம்மா சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவாள். ஆனால், அவள் கூப்பிடும்போது என்னவோ ஸ்டைலாக இல்லை. வாயில் நுழையாத பெயரை ஏன் வைக்க வேண்டுமாம்! அம்மாவிடம் அவனுக்குப் பிடிக்காத பலவற்றில் இதுவும்


யாத்திரை

 

 அவர் அந்த வார்த்தையைச் சொன்னபோது வீட்டில் ஒருத்தரும் நம்பவில்லை. அவருடைய ஒரே பிள்ளையும், இரண்டு பெண்களும் சிரித்தனர். மனைவி சங்கரி மட்டும் அவர் பக்கம். “நீங்களாப்பா சொல்றீங்க இதை?.” “எஸ்! நான் தான் சொல்றேன். திருநள்ளாறுக்குப் போயிட்டு வரணும், அங்கே சனீஸ்வர பகவானுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரணும்.” “எதுக்கு?.” “சின்னவ ஜாதகத்தில தோஷமிருக்காம். அதனாலதான் திருமணம் கூடிவரல. திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு ஒரு அபிஷேகம் பண்ணிட்டால், கல்யாணத்தடை நீங்கிடுமாம். இது பரிகாரம்டா.” “இதை நீங்க நம்பறீங்க?.”—


மாயாண்டி

 

 வித்யாவுக்கு சமீப காலங்களாக மாயாண்டியை நினைத்து வயிற்றில் புளியைக் கரைத்தது. அவனை கடந்த ஒரு வருடமாகப் பார்த்திருந்தாலும் அவன் எப்படிப் பட்டவன், அவனது சுயரூபம் என்ன என்பது அவளுக்கு சுத்தமாகத் தெரியாது. ஒரு தடவை அவன் தன் பெற்றோர்களுடன் குல தெய்வமான மாரியாத்தா கோவிலுக்கு பொங்கல் படையல் செய்ய வந்திருந்தான். அப்போது வித்யாவும் தன் குடும்பத்தினருடன் அந்தக் கோவிலுக்கு சென்றிருந்தாள். அப்போது மாயாண்டி சாமி கும்பிடாமல் வித்யாவையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். வித்யா நாங்குநேரி பெண்கள் உயர்நிலைப்