கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 16, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

இதயத் தீ

 

 Until my ghastly tale is told My heart within burns –Samuel Taylor Colleridge சோகக் கதை யெந்தன் சொல்லி முடிக்கு முன் ஓயாதென் இதயத்துள் கனிந்திடும் தீ –சேமுவெல் டெய்லர் காலெரிட்ஜ் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழு ஆகஸ்ட் பதினைந்து இந்தியர்கள் மறக்க முடியாத தினம். இந்தியா சுதந்திரம் பெற்ற தினம். நானும் ஒரு இந்தியக் குடி மகளாயிற்றே? என்னால் மட்டும் எப்படி மறக்க முடியும் அந்த நாளை? மேலும் அன்று தானே


பிறழ்வு

 

 ‘சாப்பிட்டாயா..’ ‘ம்ம்..’ ‘இன்னைக்கு ஏன் இந்த கோபம்..’ என்னும் கேள்விக்கு விக்கி விக்கி அழத்தொடங்கினாள். ‘உன் பலகீனமே அழுகைதான் சௌந்தர்யா.. நிறுத்திவிட்டு பதில் சொல்லு, கோபம் ஏன் வந்தது..’ ‘அவங்க எல்லோருக்கும் நான் ஒரு ஜடப்பொருள் ஆயிட்டேன். இவ்வளவு நாளும் நான் செய்ததெல்லாம் மறந்துப்போச்சு. முன்னாடியெல்லாம் இந்த மனுஷன் பிள்ளைங்களைப் பத்தி, அவங்க அம்மா அப்பாவைப் பத்தி, அவரு தம்பி, தங்கச்சியை பத்தியெல்லாம் கவலைப்பட்டிருப்பாரா? நான்தானே எல்லாமே இழுத்துப்போட்டு செய்தேன். அம்பத்தஞ்சு வயசுக்கு மேலதான் நான் சரியில்லாம


நந்திக்குப் பின் சிவன்

 

 தெய்வ வழிபாடு செய்கிறோம்.விரதங்களை மேற்கொள்கிறோம். தீர்த்த யாத்திரைகள் செல்கிறோம். நல்லதுதான். செய்ய வேண்டிய கடமையே. தெய்வம் இருப்பதை எந்நேரமும் நம் நினைவில் வைத்திருக்க உதவும் சாதனைகளே இவை. ஆனால் தெய்வத்திற்குப் பிடித்தமான செயலை நாம் மறந்து விடக் கூடாது. அதுவே தர்மத்தை கடைப்பிடிப்பது. அவரவர் தர்மத்தை அவரவர் தவறாமல் கடைப்பிடிப்பது. இதை விட்டு விட்டு எத்தனை பூஜைகள் செய்தாலும் தெய்வம் மகிழ்வதில்லை என்று அத்தனை நூல்களும் எடுத்துரைக்கின்றன. இந்த அடிப்படை நியதியை விட்டு விட்டுச் செய்யும் அத்தனை


பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு

 

 கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில் சிக்கி இறந்து போய் விட்டான். சம்பூர்ணத்திற்கு வயிற்றில் ஒரு குழந்தை. கையில் ஒரு குழந்தை. என் பக்தை கதறி அழுகிறாள் சுவாமி…” “ நான் என்ன செய்ய வேண்டும் தேவி.. அவனை உயிர்ப்பித்து


எப்பொழுது…?

 

 இருபத்திநான்கு மணிநேரங்கள் மட்டுமே கொண்டதல்ல ஒரு நாள். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப சில நொடிகள் கூடவும் குறையவும் செய்யும். துளி துளியாக சேர்க்கும் அமிர்தம் போல் அந்த நொடிகளே நான்கு வருடத்தில் ஒரு நாளாக நிறைகிறது. அந்த நாளும் வழக்கமாக அருந்தும் காபியைப் போலவே நம் அன்றாட அட்டவணையால் நிறைந்து மறைந்துவிடுகிறது. ஆகவே, ஒரு நாளிற்குள் அன்றாட அட்டவணைக்குள் வராது ரகசியமாக மறைந்திருக்கும் அந்த சில நொடிகளை தேடிப் பாதுகாக்கும் தீவிரத்தில் இருக்கிறேன். காலையில் ஆறிலிருந்து ஒன்பது