கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 10, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

சேர்ஜிக்கள் ஸ்ரைக்!

 

 10 ஐப்பசிமாதம் 2017. “சரியாக இரவு ஒன்பது மணிக்கு இந்திய இராணுவத்தின் ஐந்து ஹெலிஹொப்டர்களில் இருந்து எழுபத்தியைந்து விஷேட கொமான்டோக்கள் பாகிஸ்தானில் இருக்கும் வாஹா என்ற‌ காட்டுப்பகுத்திக்குள் இறங்கினர். தண்ணீர் கட்டியாகிவிடுமளவுக்கு குளிரிலும் காடுகளினூடாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இரண்டு தீவிரவாதிகளில் முகாம்களை சுற்றிவளைத்தது இராணுவம்.ஒரு அணி உள்ளே சென்று தாக்குதல் நடத்த இன்னொரு அணி வெளியில் தப்பிவரும் தீவிரவாதிகளைச் சுட்டுவீழ்த்தினர். சரியாக மூன்று மணிநேரத்தில் தாக்குதலை முடித்துவிட்டு வெற்றிகரமாக நமது இராணுவம் நம் எல்லைக்குள் வந்துவிட்டது.எமது


அதிகாலை அழகு

 

 மலர்விழியின் உடல் அந்த அதிகாலையின் குளிர்ந்த காற்றில் லேசாக நடுங்க அதுவும் இன்பமாகவே இருந்தது. பால்கனியின் விளிம்பிற்கு சென்று பார்வையைக் கீழே செலுத்த நேர்த்தியான தோட்டம். உனக்கு முன்பே குளித்துவிட்டோம் என்று சொல்வது போல நேற்று இரவு தூரிய மழையில் மலர்களிலும் இலைகளிலும் நீர்த்துளிகள். இவ்வளவு தான் என்றில்லாமல் வர்ணஜாலமாய் பூத்திருந்தன – டேலியாக்களும், ரோஜாக்களும், சம்பங்கியும், சாமந்தியும்.. இன்னும் இன்னும் அவைகளின் பெயர் நினைவில் வரவில்லை அவளுக்கு. அதிலும் அந்த பன்னீர் ரோஜாச்செடியில் இலைகளே தெரியாமல்


பிரசவம்

 

 “குமார் சாப், ஆப் கீ பீவி..” காக்கி உடை அணிந்த சிப்பந்தி கையில் தொலைபேசியை வைத்து கொண்டு உச்ச பச்ச ஸ்தாயில் கத்தினான். இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் ஒரு முடுக்கில் அமைந்திருந்த அந்த தபால் நிறுவனத்தில் புதியதாய் வேளைக்கு சேர்ந்திருந்த குமார் நிமிர்ந்து பார்த்தான். ‘ஏதும் பிரச்சனை’னா போன் பண்ணு ரேணு’ என்று அலுவலக எண்ணை இன்று காலை தான் குடுத்துவிட்டு வந்தான், அதுவும் அரை குறை மனதோடு. ‘வந்து நான்கு மணி நேரம் கூட


உன் சமையலறையில் …!

 

 “சமையல் இன்று என்ன செய்வது ?? …அனிதா மண்டையைப் போட்டு கசக்கிக்கொண்டாள்.. ஆஹ் !! காபி .. அனிதாவும் அவள் கணவன் வருண் இருவரும் சாப்பிட்டனர்…. “இந்தப் பசங்களை எழுப்பறதுக்குள்ளே? அப்பாடா… டைம் ஆறது…! ” .நொந்துக்கொண்டே…. குளிக்க சென்றாள் அனிதா….. திரும்பி வந்தால் இன்னும் இவ்ரகள் எழுந்திருக்க வில்லை… “போச்சுடா…! நீங்க கொஞ்சம் எழுப்பக்கூடாதா? ” அனிதா கேள்விக்கு ” இன்னும் பேப்பர் படிச்சு முடிச்சபாடில்லை…. … ” வருண் பதில் அளித்தான்… கோபத்துடன் சென்று


அன்னக்கிளி ஏன் எஸ்தர் ஆனாள்?

 

 ஒரு வாரம் கழித்து ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் கவனத்தைக் கவர்ந்தது அங்கும் இங்குமாக இரைந்து கிடந்த காகிதக் குப்பைகளும் நிரம்பி வழிந்த குப்பைக் கூடைகளும்தான். “அன்னக்கிளி வரலியா?” என்று ப்யூன் ராமசாமியிடம் கேட்டதற்கு “ ரெண்டு நாளா வரல சார். இன்னிக்கி வரும்னு நெனைக்கறேன்” என்று பதில் சொன்னான். நான்? அது இந்தக் கதைக்கு தேவையென்று தோன்றவில்லை. இந்தக் கதைக்குத் தேவையானவர்கள் அன்னக்கிளி, நாகராசு மற்றும் ஞானசேகரன். இவர்கள் எல்லாம் யார் என்று உங்களுக்கு சொல்லுவதற்கு முன்