கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 6, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆடி அமாவாசை

 

  ராமுவுக்கு பசி தாங்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாளாக கொலைப் பட்டினி. செல்போனுக்கும் ரீசார்ஜ் பண்ணவில்லை. அதனால் உள்வரும் அழைப்புகள் மட்டும்தான். வெளிச் செல்லும் அழைப்புகள் பேச முடியாது. இப்படி ஒரு நாளை கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. அவன் தொழிலில் செல்போன் அத்தனை முக்கியம். அலுப்பும் சலிப்புமாக வந்தது. மனைவி வேறு துர்கா மாத விலக்கு. அப்படி இல்லாவிட்டால் அவளாவது எதாவது திவசம் திங்கள் என்று சமைக்கப் போய் விடுவாள். அதுவும் இல்லை. காலேஜில் படிக்கிற


பிரிவு

 

 விமான நிலையத்தின் வாகணத்தரிப்பிடத்தின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருக்கிறேன்,வாகணத்துள் எனது மகள்,மருமகன்,பேரப்பிள்ளைகள் இருக்கின்றார்கள்.இன்னும் ஒரு மணித்தியாலத்தால் அவர்கள் விமானத்திற்குள் இருந்தேயாகவேண்டும்,வருடத்தின் இருமுறை நடைபெறும் தற்காலிக பிரிவுதான் இருந்தும் மனம் ஏற்றுக்கொள்வதாக இல்லை, வியர்வை என்று பொய்சொல்லிக்கொண்டு கைக்குட்டையை நனைத்துகொள்கின்றேன், ஊரில் இருந்து அதிகாலை புறப்படும்போதே அழக்கூடாது என்று எனது மூத்தபேரனிடம் சொல்லியிருந்தாலும் சிலவேளைகளில் நானே சிறுபிள்ளையாகிவிடுவேனோ என்பதுபோல் ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொள்கிறேன், அவன்… பேரன் ஓமானில் ஆண்டு இரண்டில் படித்துக்கொண்டிருக்கிறான்,அடுத்தது இரு பேத்திகள் “எனது ஊர் ஓமான் தான்


கருப்பசாமியின் தீர்ப்பு

 

 ஆனானப்பட்ட முனிவர்களேத் தடுமாறியிருக்கும் போது மருளாடியின் யோக்யதை என்ன? முத்தாச்சியின் இளமை முத்துக்கருப்பனைப் பித்தாக்கி வைத்திருந்தது. தனக்கு வயது அறுபதை நெருங்குகிறது என்பதோ முத்தாச்சி வெறும் இருவது வயதுப் பெண் என்பதோ மறந்து போகும் அளவுக்குப் பித்து. முத்தாச்சிக்கு இந்த விஷயம் தெரியும். அவளுக்கு ஆண்களை மிக நன்றாகவே தெரியும். ஊர்க்கோவிலுக்குப் பூக்கட்டிவிடப்பட்ட பொன்னம்மாளின் மகளாச்சே! இது கூட தெரியவில்லை என்றால் அப்புறம் என்ன? தன் வீட்டு வாசலில் பார்த்த செருப்புகள் பகலில் ஊருக்குள்ளே பெரிய மனுஷர்கள்


கல்லூரிச்சாலை

 

 “வர்ற ஒண்ணாம் தேதிலேர்ந்து ஹெல்மெட் போடுறதை கட்டாயமாக்கி யிருக்கறதால இனிமே நம்ம முகத்தை பிகருங்களோ… பிகருங்க முகத்தை நாமளோ பார்க்க முடியாது. என்னடா பண்றது?”என்று நாட்டின் மிக முக்கிய பிரச்சனையைப் பற்றி கவலைப்பட்டான் அந்த கல்லூரி மாணவன். “சென்னை மாதிரி பெரிய நகரங்கள்ல வெயில் பட்டு தோல் கருத்துடக்கூடாதுன்னு உடம்புல எந்த பாகமும் வெளில தெரியாத மாதிரி பொண்ணுங்க கவர் பண்ணிட்டு போறது மாதிரி நம்ம ஊர்லயும் ஒரு சில டிக்கட்டுங்க இப்படி கிளம்பியிருக்குதுங்கடா… நாலஞ்சு நாளா


தனி மரம்

 

 “”பத்ரோஸ் சார் காலையில இவ்வளவு வேகமா எங்கப் போறீங்க…. கூட்டுக்கார போலீச காணோம்….” என்ற செல்லப்பனின் கேள்விக்கு, “”அவன் வீட்டுக்குத்தான் போறேன்….” எனக் கூறிக் கொண்டு வேகவேகமாக நடந்தார் பத்ரோஸ். மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து சென்ற மண் சாலையில் இறங்கி சிறிது நேர நடைக்குப் பின் பெரிய கேட் போட்ட அந்த வீட்டை அடைந்து கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார். வீட்டின் முன்பகுதியில் இருந்து கார் செட்டில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாத நிலையில் ஒரு மாருதி கார் நின்று