கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 4, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

விவசாயி நினைத்தால் அரசனும் அடிமையாகுவான்

 

  ஏழ பசுமையான கிராமங்கனை கொண்டு ஒர் அரசன் அவர்களை ஓர் அடிமைகளைப் போல் பாவித்து ஆட்சி நடத்தி வந்தான் அதில் பிச்சாண்டி எனும் விவசாயி இருந்தான். இந்த விவசாயி எப்பேர்ப்பட்ட தரிசாகக் கிடைக்கும் நிலங்களையெல்லாம் அழகிய பசுமையான வயல்வெளியாக மாற்றிடும் வல்லமைக் கொண்டவன் இந்த விவசாயி. கிராம மக்களை தன்மையாகவே அனுசரிப்பான், அன்பாக பழகும் மனோபாவம் கொண்டவன். ஊர் மக்கள் இவனை நிலத்தில் இராஜா என்று அழைப்பார்கள். தனது மனைவி மற்றும் மகள் இவர்கள் மூவருமாக


உயிர்

 

 சென்னை-வருசநாடு 163இ விரைவு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கத்தொடங்கினர். என் மனசு இன்னமும் தவியாய் தவித்தது! என் அம்மாவுக்கு என்னமும் ஆகியிருக்கக்கூடாது. அம்மா…என்னுடன் சென்னையிலேயே நிம்மதியாக இருந் திருக்கலாம். என்னெ படிக்க வச்சு ….கல்யாணம் செய்து வச்சு… ஒரு தனியார் கம்பெனியில் டர்னர் வேலை கிடைத்ததால், அம்மா ஆசைப்பட்டது போல் எனக்கு நல்ல வாழ்க்கையும் அமைந்திருந்தது. என் மனைவிக்கும், அம்மாவுக்கும் அடிக்கடி ஏற்பட்ட மாமியார் மருமகள் சண்டையில்,ஒரு முறை நான் குறுக்கிட வேண்டிய தாகிவிட்டது. “ என்னங்கம்மா


பாவனைகள்

 

 பேருந்து விட்டு இறங்கியதுமே காதை வந்தடைந்த மேள சத்தம் நெஞ்சுக் கூட்டுக்குள் இடம் பெயர்ந்து துடிக்க ஆரம்பித்தது. பேருந்து தடத்தினை கடந்து, தண்ணீரும், தாமரையும் இல்லாது பெயரளவில் மட்டுமேயாக இருந்த தாமரை குளத்தைத் தாண்டி, அடுத்திருந்த தெருவில் நுழையும்போதே குறுகுறுத்தது உள்ளங்கால்கள். உள்ளே செல்லச் செல்ல என் கால்கள் நடக்கிறதா இல்லை நடனமாடுகிறதா என்பதை கவனமாகப் பல முறை சோதித்து பார்த்தும் சந்தேகம் தீரவில்லை. மேளத்தின் சத்தம் நிமிடந்தோறும் அதிகரித்துக் கொண்டே சென்று என்னைச் சட்டென்று கை


சுத்தமான மனசு !

 

 ராஜேந்திரனுக்குப் பதட்டமாக இருந்தது. முதல் இன்டர்வியூ என்றால் யாருக்குத்தான் பதட்டம் இருக்காது. காலையில் வழமையை விட நேரத்துக்கே எழும்பி ட்ரெட் மில்லை ஓடவிட்டு அதில் எறி நின்றுகொண்டு ஓடத்தொடங்கினான். ட்ரெட் மில்லில் ஓடிக்கொன்டிருந்தாலும் அவன் மனது எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தது. கையில் தேநீர்க்கோப்பையுடன் வந்தாள் மனைவி பிரியதர்சனி . “என்னங்க இதுக்குப்போய் எவ்வளவு டென்சனா இருக்கீங்க,இரவு பூரா தூங்கவும் இல்ல ,இப்போ என்னாவென்றா நாலுமணிக்கே வந்து ட்ரெட் மில்லில ஓடிக்கொண்டு இருக்கீங்க?” “என்ன பிரியா இப்படிக்கேட்கிறாய்? முதல் இன்டர்வியூ


நடிகன்

 

 இரண்டு வலித் தாக்குதல்களுக்கு நடுவே சற்று சிந்திக்க முடிந்தது. தெளிவாக இல்லை. எனினும் ஓரளவு. தாக்குதல்களின்போது சிந்திக்கவே முடியவில்லை. ‘நாய்’ என்ற சொல் மட்டும் உள்ளே வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வலி தாங்காது, தலையும் கால்களும் மட்டும் படுக்கையில் குத்தி, முதுகு வில் போன்று வளைந்து, கூரையைப் பார்க்க விறைத்து, கட்டை போன்று நிற்கிற மனிதன் என்ன யோசிக்க முடியும்… வலியையும் மரணத்தையும் தவிர? அந்த நேரங்களில் வார்டு முழுக்கப் படுத்துக்கிடந்தவர்கள் அவனை அச்சத்துடன் பார்ப்பதை உணர முடிந்தது.