Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2016

69 கதைகள் கிடைத்துள்ளன.

பாண்டிபஜார் பீடா

 

  ”ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க… முதல் போணியாகட்டும்’ என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான். ”ஏன்… என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?” என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா. இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி வெங்கையாவிடம் கொடுத்தான் கோபாலகிருஷ்ணா. கடை கல்லாப்பெட்டியில் சில்லறை இல்லை. அவன் சட்டைப் பையில் இருந்து அரை ரூபாய் நாணயத்தை எடுத்து, வெங்கையாவிடம் கொடுக்க வந்தான். ‘உன்கிட்டேயே இருக்கட்டும். நாளைக்குப் போணி’


கிராக்கி

 

 ‘ஹூம்…வயசு அம்பத்தி நாலாச்சு….வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணுங்க ரெண்டு கல்யாணத்துக்கு நின்னுட்டிருக்குதுக… இந்தாளு என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்..எல்லாம் காலக் கொடுமைப்பா’ இது செக்ஷன் ஆபீசர் சீனிவாசன். ‘அட..வேற ஆளா கெடைக்கலை,…ஒரு ஜி.எம்….போயும் போயும் ஆபீஸைக் கூட்டிப் பெருக்கற ஒரு பொம்பளையோட….ச்சை…குமட்டுதுப்பா’ டெஸ்பாட்ச் கிளார்க வாந்தியெடுப்பது போல் அபிநயிக்க கேட்டுக கொண்டிருந்த ப்யூன் ரங்கசாமிக்கு வேதனையாயிருந்தது. ‘ச்சே…எல்லார்கிட்டேயும்…கறாரா…கண்டிப்பா இருக்கற இந்த ஜி.எம். அந்தப் பொம்பளைகிட்ட மட்டும் ஏன் குழைவா…தணிவா…சிரிச்சுச் சிரிச்சுப் பேசறார்?…அதுக்காக ஆபீஸே…அவரைக் கேவலமாப் பேசுதே…’ யோசித்தவர்


நிஸ நிஸ…

 

 நீலகண்ட பாகவதர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார். ஸ ஸ நி ஸா! ஸா நீ ஸா! கம்பீரமான குரல் வளம், நன்றாக ஸ்வரம் பாடும் திறமை எல்லாம் இருந்தும் அவர் பிரபலமாகாததற்குக் காரணம் தஞ்சாவூரை விட்டு அவர் வர மறுத்தது மட்டுமல்ல சங்கீதத்தைக் காசுக்கு விற்கக்கூடாது என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்ததும் தான். மகளுக்கு நிஸா என்று ஆசை ஆசையாப் பெயர் வைத்திருந்தார் பாகவதர். ஐந்து வயதில் முகத்தைச் சுளித்துக் கொண்டு எனக்கு ஏன்ப்பா


மிடில் கிளாஸ் பிரச்னைகளும் கார்ப்பொரேட் தீர்வுகளும்

 

 ஆடி பொறந்தாலே வீட்டிலே ஒரே குழப்பம். இந்தக் குழப்பம் இன்று நேற்று வந்ததில்லை. கடந்த 20 வருஷமாக குழப்பம் வரும், போகும். நிரந்தர தீர்வு இதுக்கு கிடையாது. ஏனென்றால் அது பற்றி அடுத்த ஆடியில் தான் பேச்சு வரும். என் தந்தையார் வருடாந்திர திதி தான் இந்தக் குழப்பத்திற்கு காரணம். நானும், என் மனைவியும் சென்னையில் இருக்கிறோம். எனக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் பெங்களூர். மற்றொருவர் மதுரை. என் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பே போன் பண்ணி


மவுஸ்

 

 காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது. செய்தி இதுதான். |காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.| எத்தகைய இருட்டடிப்பு இது!