Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2016

69 கதைகள் கிடைத்துள்ளன.

உங்களைக் கொல்லாமா ப்ளீஸ்?

 

 Daddy had a massive attack and passed away today at 4.30 am. We are at our Kodaikanal Bungalow. Madhivadhani Kulasekaran. இந்த டெக்ஸ்ட் மெசேஜ் வந்ததும் பாரதி சந்திரனுக்கு முதலில் தோன்றியது அவன் குலசேகரனுக்கு இழைத்த துரோகம்! இந்த சந்தர்பத்தில் போகவில்லை என்றால் வீண் பேச்சுக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்தவன் அரை மணி நேரத்தில் காரை எடுத்துக்கொண்டு கோடை நோக்கிப் புறப்பட்டான். பஜேரோ கார். நல்ல பிக்கப் ஸ்பீட்.


மாய இருப்பில் ஒரு மணி விளக்கு

 

 பதவி வெறி பிடித்த சுயநல அரசியல்வாதிகளின் பிரவேசத்தால் கரை உடைத்துப் பாயும் சாக்கடை வெள்ளத்தில் மூழ்கி அழியப் போவது தமிழின் புனிதம் மட்டுமல்ல மொத்த தமிழினமுமே கருகி அழிந்து போகும் என்ற தார்மீக சிந்தனையின் உச்சக் கட்ட விளைவாகவே ஞானம் சித்தப்பா அரசியலில் களம் இறங்கி முன்னின்று காரிய சாதனை புரியும் அந்தச் சத்திய வேள்விக்குத் துணையாக மங்கையின் அப்புவும் கொடி தூக்கிப் போராடி வந்தாலும் அதையும் புரட்டிப் போடுகிற அளவுக்கு திறந்து கிடக்கிற அவரின் வாழ்க்கைப்


புதையல்!

 

 திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று. ஒரு நாள்— வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான். வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே


வாழப்பழகிவிட்டாள்…

 

 ஏனம்மா என்னை இலண்டன் அனுப்பினீங்க சொல்லுங்கம்மா!எனக்கு இங்க பிடிக்கல்ல அம்மா நான் உங்களுடனும் அம்மம்மாவுடனும் தாத்தாவுடனும் அப்பம்மாவுடனும் நல்லா ஜாலியா இருந்தேன்.இங்க ஒரே போர் அம்மா.எனக்கு பிடிக்கல்ல அம்மா என்னை கூட்டிட்டு போங்கம்மா பிளீஸ் ….எனகண்களில் நீர் முட்ட ஸ்கைப்பில் விம்மினாள் ஆராதனா. தாயுள்ளம் தவியாய் தவித்தது.இந்த மூன்று வயதுக்குழந்தைக்கு எதை எப்படிச் சொல்வேன்.இறுக்கத்துக்குப் பழக்கப்படுத்திவரும் மனதுடன் இங்க பாரு ஆரா… நீ மாமாவுடனும் அத்தையுடனும் இருந்து நல்லா படி நான் கெதியில வேலையெல்லாம் முடிச்சுட்டு எல்லாரையும்


வீடெனும் பெருங்கனவு

 

 ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் -குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஆனால் நேரம் கடந்தும் தனபாலன் அங்கு வந்து சேரவில்லை. ஜெயசீலியும் செல்வகுமாரும் சில வருஷங்கள் அபுதாபியில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார்கள். மறுபடியும் அபுதாபிக்குத் திரும்பிப் போக வேண்டாமென்றும் அங்கு சேமித்த பணத்தில் சென்னையின் ஏதாவதொரு புறநகரில் வீடு கட்டி செட்டில்