Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 25, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

அமாவாசை இரவில்..!

 

 நான் நகரத்தின் நெரிசலை கடக்கும் போது வழக்கத்தை விட நேரமாகியிருந்தது. எல்லாம் என் மனைவியால் தான்! வீட்டிற்கு சென்றவுடன் தெளிவாக (சற்று காட்டமாகவும் தான்) சொல்லிவிட வேண்டும் இது எனக்கு சரிவராது என்று! பின்னே அவனவன் ஆபீஸ் முடிந்து அலுத்து சலித்து வந்தால் இவளது நாயை ஆஸ்பதிரிக்கு கூட்டிச்செல்ல வேண்டுமாம்! என் வீடு நகரத்தை விட்டு சற்று தள்ளி ஒரு பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இப்போது தான் வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதியில் இருந்தது. ஆறு மணிக்கு


Facebook ரெக்வெஸ்ட்

 

 “Prashanth added you as a friend in facebook, click to confirm”. பீப் என்ற சத்தத்துடன் தனது பிரவ்சரில் வந்த நோடிபிகேஷனை பார்த்த இந்துஜா வியந்தாள். அந்த லேனோவோ மானிடரின் வலது ஓரம் நேரத்தினை 3:00AM என்று காட்டியது. ‘இந்நேரத்துக்கு யார் ரெக்வெஸ்ட் அனுப்புராங்க..?? யார் இந்த பிரஷாந்த்?’ குழப்பத்தோடு அந்த பெயரின் மீது கிளிக் செய்தாள். ரிலையன்ஸ் நெட்கனெக்டின் அசுர வேகத்தில் அவன் பிரோபில் அடுத்த மூன்று நொடிகளில் முழுவதும் லோட் ஆனது.


காதலா….? சாதலா..?

 

 “என்னமா நீ?? என் மேலே நம்பிக்கை இல்லையா? எல்லா இடத்துக்கும் என் கூடவே வரணுமா? ” கடிந்து பேசிய சுகன்யாவை முறைத்தாள் அம்மா…. ” என்ன செய்ய சொல்றே? என் வயித்தில் நெருப்பை கட்டிண்டிருக்கேன்…. ஒரு பெத்த பெண்ணை கண்ணாணிக்கிற கேவலமான வேலையை பார்க்க வெச்சுட்டியே!! அவன் கூட சுத்தாதே , பேசாதேன்னு சொன்னா கேட்கறியா? இன்னும் நீயும் படிப்பை முடிக்கலே… அவனோ படிப்பை பாதியிலேயே விட்டுட்டு ஊரை சுத்தறான்! ஒரு உத்யோகம் இருக்கா? என்ன தகுதி


கைக்கு எட்டியது!

 

 வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும் போன வருடம் நாங்கள் ஒரு மாம்பழம் கூடக் கடையில் வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! முன்னொரு காலம் நாங்கள் லாயிட்ஸ் சாலையில் ஒரு வாடகை வீட்டில் மாடியில் குடியிருந்தோம். பக்கத்து வீட்டில் ஒரு பெரிய மாமரம். மாம்பழ சீசனில் அந்த மரத்தில் எண்ணி மாளாத பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கும். மரமே பொன்னால் வேய்ந்ததுபோல் மிளிரும்!


கல்யாணிப் பாட்டி

 

 டில்லியிலிருந்து சென்னை வந்த நாளா அம்மா நச்சரித்துக் கொண்டே இருந்தாள். “ டேய், ஒரு நட நம்ம கிராமத்துக்குப் போய் பாட்டியப் பார்த்துட்டு வாடா. தாத்தா போனதுக்கு அப்புறம் நீ இப்போ தான் வந்திருக்கே, போய் ஆறுதலா ரெண்டு வார்த்த சொல்லிட்டு வந்துடு”. சரி என்று காரை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து விழுப்புரம் சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் இருந்த எங்கள் பூர்வீக கிராமத்துக்கு கிளம்பினேன். இடைவிடாது ஒட்டியதின் பலனாக மதியம் பனிரெண்டு மணி சுமார்


தூளி

 

 சவமாய்க் கிடந்த பவானியைச் சுற்றியமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர் உறவுப் பெண்கள். சற்றுத் தள்ளி நின்று வாயில் துண்டைத் திணித்துக் கொண்டு சன்னமாய் அழுது கொண்டிருந்த அவள் கணவன் குமாரசாமியிடம் ஊர்ப் பெரியவர் கிசுகிசுப்பாய்க் கேட்டார். ‘ஏண்டா…ரெண்டு பேருக்குள்ளார ஏதாச்சும் சண்டையா,..நீ எதையாச்சும் எக்குத் தப்பாய்த் திட்டப் போய்…அது காரணமாத்தான் தூக்கு மாட்டிட்டாளோ?’ ஓங்கியழுது இடவலமாய்த் தலையாட்டி ‘கண்ணாலம்…..ஆன நாளிலிருந்து ஒரு தடவ கூட அவளும்…..நானும் சண்டை போட்டது கிடையாதே…என்ன காரணமோ தெரியலையே…யாரு கண் பட்டதோ தெரியலையே…’


இதயம் இரும்போ!

 

 சீறிச் சுழன்றடித்தது பேய் மழை. பளீர், பளீர் என்று வானத்தில் கோடிழுக்கும் மின்னல்கள், அண்டமே அதிர்கிறாற் போல இடிச் சத்தம்! நள்ளிரவில், கொட்டும் மழையில், சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு விருட் விருட்டென்று ஓட்டமும் நடையுமாக ஓர் இளம்பெண் செல்வதென்றால்..? எவ்வளவு பெரிய பைத்தியக்காரி நான்? “போடீ போ! என்னிக்குமே திரும்பி வராதே! இந்த வீட்டில் அடியெடுத்து வைக்காதே! என்னைப் பொறுத்தவரை என் வயித்துல பொண்ணே பிறக்கலைன்னு நினைச்சுக்கறேன்…போ!” என்று ஆங்காரமாய்க் கூச்சலிட்டு, ஒரு வருடத்துக்கு முன்


ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்

 

 பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்… எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, ‘குளிருதே… குளிருதே… உடம்பெல்லாம் உதறுதே…’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் (அப்போதுதான் அரவிந்த் மறுநாள், ‘நெஞ்செல்லாம் சிதறுதே… நீ வேணும்னு கதறுதே…’ என்ற பாடலை எனக்கு டெடிகேட் செய்வான்). நீங்கள் நினைப்பது சரிதான். நான் படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன். ஓர் ஆண், வேலை


அந்நியர்கள்

 

 லண்டன் 1995. சந்திரசேகரம் தனது வீட்டுக் கதவை இழுத்துப் பூட்டினான். வழக்கமாக அவனை வாசல் வரை வழியனுப்பவரும் அவன் மனைவியோ,’பை பை ப்பா’ என்று கைகாட்டி விடைகொடுக்கும் சின்ன மகன் மோகனோ இன்று மௌனமாகவிருந்தார்கள் அவன் தெருவில் இறங்கினான்.நவம்பர்மாதக் குளிர் காற்று காதில் உறைத்தது.காற்று பயங்கரமாகவிருந்தது. இலையுதிர்காலத் தாண்டவத்தில் மரத்திலிருந்த உதிர்ந்த இலைகள் தெருவை நிறைத்திருந்தது.பழுத்த இலைகள் பாதையில் பாய்விரித்துக்கிடக்க.இரவு பெய்தமழை அவற்றில் படிந்ததால்,இவன் கால் வைக்கும்போது சதக் சதக் என்ற சப்தத்தையுண்டாக்கியது. அவன் மனமும் இப்படித்தானிருக்கிறது.ஆத்திரம்


ரெளத்திரம் பழகாதே

 

 சுகுமாருக்கு அடிக்கடி கோபம் வரும். அந்தக் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தி மற்றவர்களை ரணமாக்கி விடுவார். அதீதமான கோபத்தினால் அவர் இழந்தது ஏராளம். நல்ல சந்தர்ப்பங்களை, நல்ல மனிதர்களை இழந்து அவர் அடைந்த நஷ்டங்கள் அதிகம். ஆனால் சுகுமார் நேர்மையானவர். நேர்கோட்டில் வாழ்ந்து வருபவர். அவரையும், அவர் கோபத்தையும் புரிந்துகொண்ட ஒரே நபர் அவர் மனைவியின் தம்பி சுந்தர். அடிக்கடி ஏற்படும் கோபத்திலிருந்து சுகுமாரை மீட்க அவரை அழைத்துக்கொண்டு பெங்களூரிலுள்ள ஒரு பிரபல ஆசிரம சுவாமிஜியைப் பார்த்துவர சுகுமாரும்