Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 12, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

அலைகள் ஓய்வதில்லை !

 

 “வாங்க சார் ! “ என்ற பழக்கப்பட்ட குரல் தன்னை வரவேற்கவே நிமிர்ந்து பார்த்தான் கணேஷ்குமார். “ லதா நீயா.. நீ எங்கே …. ..?” “ என்னோட அக்கா வைதேகியைத்தான், பெண் பார்க்க நீங்க வந்திருக்கீங்க “ என மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்பதுபோல் லதா கூறினாள். ஒரே கம்பெனியில்தான் கணேஷ்குமாரும் லதாவும் வேலை பார்க்கிறார்கள். கணேஷ்குமார் உதவி மானேஜராகவும், லதா அங்கு டைபிஸ்ட்டாகவும் பணிபுரிகிறார்கள். இருவருமே கம்பெனியில் சொந்த வேலை இருப்பதாகவே ஒரே நாளில்


பாண்டிபஜார் பீடா

 

 ”ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க… முதல் போணியாகட்டும்’ என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான். ”ஏன்… என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?” என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா. இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி வெங்கையாவிடம் கொடுத்தான் கோபாலகிருஷ்ணா. கடை கல்லாப்பெட்டியில் சில்லறை இல்லை. அவன் சட்டைப் பையில் இருந்து அரை ரூபாய் நாணயத்தை எடுத்து, வெங்கையாவிடம் கொடுக்க வந்தான். ‘உன்கிட்டேயே இருக்கட்டும். நாளைக்குப் போணி’ எனச்


கிராக்கி

 

 ‘ஹூம்…வயசு அம்பத்தி நாலாச்சு….வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணுங்க ரெண்டு கல்யாணத்துக்கு நின்னுட்டிருக்குதுக… இந்தாளு என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்..எல்லாம் காலக் கொடுமைப்பா’ இது செக்ஷன் ஆபீசர் சீனிவாசன். ‘அட..வேற ஆளா கெடைக்கலை,…ஒரு ஜி.எம்….போயும் போயும் ஆபீஸைக் கூட்டிப் பெருக்கற ஒரு பொம்பளையோட….ச்சை…குமட்டுதுப்பா’ டெஸ்பாட்ச் கிளார்க வாந்தியெடுப்பது போல் அபிநயிக்க கேட்டுக கொண்டிருந்த ப்யூன் ரங்கசாமிக்கு வேதனையாயிருந்தது. ‘ச்சே…எல்லார்கிட்டேயும்…கறாரா…கண்டிப்பா இருக்கற இந்த ஜி.எம். அந்தப் பொம்பளைகிட்ட மட்டும் ஏன் குழைவா…தணிவா…சிரிச்சுச் சிரிச்சுப் பேசறார்?…அதுக்காக ஆபீஸே…அவரைக் கேவலமாப் பேசுதே…’ யோசித்தவர்


நிஸ நிஸ…

 

 நீலகண்ட பாகவதர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார். ஸ ஸ நி ஸா! ஸா நீ ஸா! கம்பீரமான குரல் வளம், நன்றாக ஸ்வரம் பாடும் திறமை எல்லாம் இருந்தும் அவர் பிரபலமாகாததற்குக் காரணம் தஞ்சாவூரை விட்டு அவர் வர மறுத்தது மட்டுமல்ல சங்கீதத்தைக் காசுக்கு விற்கக்கூடாது என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்ததும் தான். மகளுக்கு நிஸா என்று ஆசை ஆசையாப் பெயர் வைத்திருந்தார் பாகவதர். ஐந்து வயதில் முகத்தைச் சுளித்துக் கொண்டு எனக்கு ஏன்ப்பா


மிடில் கிளாஸ் பிரச்னைகளும் கார்ப்பொரேட் தீர்வுகளும்

 

 ஆடி பொறந்தாலே வீட்டிலே ஒரே குழப்பம். இந்தக் குழப்பம் இன்று நேற்று வந்ததில்லை. கடந்த 20 வருஷமாக குழப்பம் வரும், போகும். நிரந்தர தீர்வு இதுக்கு கிடையாது. ஏனென்றால் அது பற்றி அடுத்த ஆடியில் தான் பேச்சு வரும். என் தந்தையார் வருடாந்திர திதி தான் இந்தக் குழப்பத்திற்கு காரணம். நானும், என் மனைவியும் சென்னையில் இருக்கிறோம். எனக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் பெங்களூர். மற்றொருவர் மதுரை. என் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பே போன் பண்ணி


மவுஸ்

 

 காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது. செய்தி இதுதான். |காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.| எத்தகைய இருட்டடிப்பு இது!


நடுவுல ஒரு பீரோவைக் காணோம்!

 

 அந்த அலுவலகத்தின் ரிக்கார்டு பிரிவில், உளுத்து, பழுப்பேறிய கோப்புகள் வைக்கப்பட்ட மர ஷெல்ஃபு வரிசையை ஒட்டி நின்றிருந்த ஐந்து இரும்பு பீரோக்களில், நடுவில் இருந்த ஒரு பீரோ மட்டும் வல்லிசாய் காணாமல் போயிருந்தது… ஒரு மாத லீவு முடிந்து ஹெட்கிளார்க் அன்று காலை பணிக்குத் திரும்பியிருந்தார். இடைவேளை உணவுக்குப் பிறகு வழக்கம் போல் ரிக்கார்டு அறையில் மறைவாக ஒரு குட்டித் தூக்கம் போடப் போனபோது, அங்கு ஏதோ ஒன்று குறைவது புலப்பட்டாலும் என்னவென்று அவருக்கு அப்போது தெரியவில்லை.


ஒரு நிமிடப் பயணம்!

 

 அது சர்க்கரை நோயாளிகளுக்கான மிகப்பெரிய மருத்துவ மனை. சாப்பிடும் முன் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டியிருந்ததால் காலை ஏழு மணிக்கே நான் அங்கு போக வேண்டியிருந்தது! மருத்துவமனை இருப்பது 5- வது மாடி. நான் ‘லிப்ட்’டுக்காக காத்திருந்தேன். என் அருகில் வந்து ஒரு பெரியவர் நின்றார். அவரின் புகைப் படத்தை நான் பத்திரிகைகளில் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தொழிலதிபர். சிறந்த ஆன்மிகவாதி. அவருக்கு கோவையில் இருநூறு கோடிகளுக்கு மேல் சொத்து இருக்கும். கதர் ஜிப்பா அணிந்திருந்தார்.


சூனியம்

 

 வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய பலா மரம், தாராளமான முறையிற் காய்த்துக் கிடக்கிறது. பெரிதும் சிறிதுமான நிறையக்காய்கள் பலாமரத்தில் ஒட்டிக் கிடக்கின்றன. பெரிய காய்களுக்குப் பக்கத்தில் சிறிய காய்கள் ஒட்டிக்கொண்டவிதம்,தாய்க்குப் பக்கத்தில் தவழும் குழந்தைகளை ஞாபகப் படுத்துகின்றன.பலா மரத்தின் கிளையில் ஒரு குருவிக்கூடு தொங்குகிறது. தாய்க்குருவி, எங்கேயெல்லாமோ தேடிக்கொண்டுவந்த புழு பூச்சிகளைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவதைப்பார்க்க அந்தக்குருவியின் தாய்ப்பாசம் மனத்தை நெகிழவைக்கிறது.தாய்க்குருவி கொடுக்கும் உணவைப் பங்குபோடும் குஞ்சுகளின் கீச்சுக் கீச்சு என்ற சப்தம் மகேஸ்வரியின் நித்திரையைக் குழப்புகிறது.


ஒரு நீதிக் கதை

 

 திங்கட்கிழமை. அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு தொடர் ஆடிட் இருப்பதால் அந்த வங்கி சுறுசுறுப்பாக காணப்பட்டது. தலைமை அலுவலகத்திலிருந்து ஆடிட்டர் ரங்கராஜன் வந்திருந்தார். ரொம்ப கெட்டிக்காரர். எந்தத் தவறைபும் கண்டு பிடித்து விடுவார். அவர் ஆடிட் வருகிறார் என்றால் வங்கி மனேஜர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆடிட் துவங்கியதும் வங்கியின் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்த ரங்கராஜன், மணிகண்டன் என்கிற ஒருவர் மட்டும் தினமும் தவறாது ஆயிரம் ரூபாயை, கடந்த இரண்டு வருடங்களாக, தன்னுடையை அக்கவுண்டில் போட்டுக்