கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2016

59 கதைகள் கிடைத்துள்ளன.

பங்குக் கிணறு

 

 வக்கீல் வரதராஜா, கிருஷ்ணபிள்ளையின்; குடும்ப வக்கீல். அதோடு மட்டுமல்ல கிருஷ்ணபிள்ளையின் தந்தை இராமநாதபிள்ளையின் சொத்துக்களையும் கவனித்து வந்தவர். இராமநாதபிள்ளையின் மறைவுக்கு பின்னர் மகன் கிருஷ்ணபிள்ளையின் குடும்பவக்கீலாக இயங்கினார். ஆதனால் அவரின் சொத்து, குடும்ப விபரம் முழுவதும் அவருக்குத் தெரியும். வக்கீல் வரதராஜாவின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் கிருஷ்ணபிள்ளையின் மூத்த மகள் இராஜலஷ்மி. அவளது கேஸ் சம்பந்தப்பட்ட பைலை புரட்டியபடி சிந்தனையில் இருந்தார் வக்கீல். மூளைக்கு உரம் கொடுக்க அவருடைய கிளார்க் மேசையில் கொண்டுவந்து வைத்த சுக்கு போட்ட


தவறுகள் திருத்தப்படும்

 

 சில நாட்களாய் கவனித்துக்கொண்டிருக்கிறேன், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கும்போதே பேப்பரை பிடுங்கிச்செல்லும் மகன் பாலு நான் பேப்பர் படிப்பதை சட்டை செய்யாமல் அவன் பாட்டுக்கு அம்மா கொடுத்த காப்பியை வாங்கி குடித்துவிட்டு, சென்று விடுகிறான். எனக்கு சங்கடமாக இருந்த்து, எப்பொழுதும் என்னிடம் வம்புக்கு இழுத்து சண்டை போடும் பாலு இப்பொழுதெல்லாம் முகத்தில் சோகக்களையோடு இருப்பது மனதை என்னவோ செய்கிறது.அவன் அம்மா இதை எல்லாம் கவனிக்கிறாளா தெரியவில்லை, நானாவது அவளிடம் சொல்லலாமா என்று நினைத்துப்பார்த்து வேண்டாம் அவள்


திருந்திட்டேன்!

 

 ”நானா… நான் அண்டரண்ட பஷி. உங்கள் பாட்டி கதை சொல்ல கேட்டிருப்பாயே. நான் பவுணர்மி அன்றுதான் பிறப்பேன். அதுவும் யாராவது பார்த்து எடுத்தால்தான் நான் முட்டையிலிருந்து வெளிவருவேன். உன் அதிர்ஷ்டம் நீ என்னைப் பார்த்தாய். அப்பாடா எத்தனை வருஷமாக காத்துக் கிடந்தேன் தெரியுமா? என்னை ஒருவரும் கண்டுபிடிக்கவே இல்லை!” ”அதிர்ஷ்டமா? ஐயோ… இனிமே நீ அந்த மாதிரி சீட்டி அடிக்காமல் இரேன்!” மறுநாள் அவர்கள் எழுந்திருக்கும்போது அதுவும் எழுந்தது. அதற்குத்தான் உடலை இஷ்டப்படி குறுக்கிக் கொள்ள முடியுமே.


(காதலின்) ‘ஏக்கம்’

 

 கொழும்பு – இலங்கைத் தலைநகர் 1971 சூரியன் மறையும் மனோரம்யமான அந்த மாலை நேர அழகை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தக் காட்சியின் அழகையோ அல்லது அவள் உடலைத் தழுவி ஓடும் தென்றலையோ,அல்லது கோல எழில் தவழும் கொழும்பு- கால்பேஸ் கடற்கரையின் அழகிய காட்சிகளையோ புனிதாவின் மனம் ரசிக்கவில்லை. அவள் வழிகள் வெறும் சூனியத்தை நோக்கிக் கொண்டிருந்தாலும்,மனம் மட்டும், இலங்கையின் வடக்கு நுனியான ஆனையிறவைத் தாண்டிப் போய் யாழ்ப்பாணத்தின் ஒரு செம்மண் கிராமத்தில் உலவிக்கொண்டிருந்தது. ‘அறிவு கெட்ட ஜென்மங்கள்,


விடலைப் பருவம்

 

 “சார் போஸ்ட்” மூர்த்தி அந்த வெள்ளை நிற கவரை வாங்கி அட்ரஸ் பார்த்தான். அக்கா வனஜாவின் பெயர் இருந்தது. அனுப்புனர் முகவரியில் முரளி அத்திம்பேர் பெயர் இருந்தது. அத்திம்பேர்தான் தினமும் அக்காவிடம் மொபைலில் பேசுகிறாரே, இப்ப எதற்கு இந்தக் கடிதம் என்று நினைத்தான். அதற்குள் அக்கா ஓடி வந்து கடிதத்தை வாங்கிக் கொண்டாள். பரபரப்புடன் பெட்ரூம் சென்று கடிதத்தை பிரித்துப் படித்து முடித்தவுடன், தன் சூட்கேஸுக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாள். மூர்த்திக்கு அக்காவின் இந்தச் செயல் புதிராக