கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2016

59 கதைகள் கிடைத்துள்ளன.

உனக்கு 34 வயதாகிறது

 

 “உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே“ என்று அப்பா அவளிடம் கேட்டபோது சுகந்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். சற்று ஆத்திரத்துடன் தலையைத் திருப்பி அப்பாவை பார்த்து முறைத்தபடியே அதுக்கு என்ன என்று கேட்டாள். அப்பா பேப்பர் படிப்பது போலத் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அது ஒரு தந்திரம், சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயல். அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதால் அப்பாவோடு சண்டை போட அவளுக்கு விருப்பமில்லை, ஒய்வு நாளாக இருந்தால் நிச்சயம் இது சண்டையில் தான் போய் முடிந்திருக்கும். அப்பா எப்போதுமே


நரகாசுரன்

 

 பட்டாசுப்பாண்டியின் பட்டாசுக்கடை களையிழந்துப்போயிருக்கிறது.கடையைப்பார்க்க தீபாவளி கடையாகத்தெரியவில்லை.கடை துடைச்சிக்கிடக்கிறது. “ அண்ணே…. இந்த வெடி எவ்வளவுண்ணே…” “ இது என்ன வெடிண்ணே…” “ அண்ணன்ணே……எனக்குக் கொடுத்திருங்கண்ணே…..”பலா பழத்தில மொய்க்கும் ஈக்களைப்போல கடையில்கூட்டம் மொய்யோ மொய்னு மொய்க்கும்.கூட்டம்,நெரிசல்,கைநீட்ட, எக்கிப்பார்க்க, தள்ளுமுள்ளு, சச்சரவென…கடை எப்படியெல்லாமோ இருக்கும்…. கடையில்எதிர்ப்பார்த்தக்கூட்டமில்லை.ஒன்றிரண்டுப்பேர்கடையச்சுற்றி நின்றுக்கொண்டு பட்டாசுகளை எடுத்துப்பார்க்கிறதும், விலையைக்கேட்கிறதும், ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிறதும், உதட்டைப் பிதுக்கிறதுமாக இருக்கிறார்கள். கடையில் இருக்கிற ஒரு பெரிய்….ய மேசையில பட்டாசுகள்குவிந்துக்கிடக்கிறது.ஆய்ந்துக்கட்டிய பைத்தங்காய் பிஞ்சுகளைப்போல சரவெடி.குவித்த பல்லாரியைப்போல வெங்காய வெடி.கோபுரம் சாய்ந்த புஸ்வானமென……விதவிதமான பட்டாசுகள்.கந்தகத்தையும்


மிருகக் காட்சி சாலை

 

 அது பெருநகரத்தின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை. எப்பொதும் வண்ணவண்ணச் சீருடைகள் அணிந்த ஏதாவது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவர்கள் கூட்டமும் அவர்களை “ஏய், வரிசையாய் போ”, என்ற வாத்திமார்கள் பிள்ளைகளை அதட்டும் சப்தமும் அடிக்கடி கேட்டபடி இருக்கும். அன்று அந்த மிருகக் காட்சி சாலையில் எக்கச்சக்க கூட்டம். கூட்டத்தை விலக்க ஹார்ன் அடித்தபடி மூடிய அந்த மாமிச வேன் வந்து நின்றது. கதவு திறக்கும் முன்பே ஓடியும் பறந்தும் வந்தன தெரு நாய்களும், காகங்களும்.


முள்ளை முள்ளால்

 

 திவ்யாவுக்கு எரிச்சலாக இருந்தது. புதிதாக வந்திருந்த ஜி.எம். சுதாகர் அவளை விழுங்கி விடுவதைப்போல் அடிக்கடி உற்றுப் பார்ப்பதும், இரட்டை அர்த்தம் தொனிக்க செக்ஸியாகப் பேசி அதிகமாக வழிவதும் வர வர அதிகமானது. அவளுக்கு சுதாகரை சமாளிப்பது சிரமமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. திவ்யா அந்த கம்பெனியின் சென்னை கிளையில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்கிறாள். நல்ல அழகு. பெண்களுக்கு அழகுதானே பல சமயங்களில் சத்ரு? ஐந்தரை அடி உயரத்தில், பாப் கட்டிங் செய்த தலை முடியுடன், வளப்பமாக