கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 19, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

வேலுவின் வேள்வி

 

 “கிளி… கிளி.. என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? கொஞ்ச நேரமாய் தொண்டை கிழிய கூப்பிடுகிறன். ஏன் அம்மா எண்டு நீ கேட்கிறாய் இல்லை” தாய் மரகதம் சற்று கோபத்தோடு மகள் மனோகரியை கூப்பிட்டாள். மனோகரியின் செல்லப் பெயர் “கிளி”. அப்படித்தான் அவளை வீட்டில் கூப்பிடுவார்கள். யாழ்ப்பாணத்தில் குஞ்சு, இராசாத்தி, பேபி, பபா. மணி என்ற செல்லப் பெயர் சொல்லி அழைப்பது பேச்சு வழக்கில் உள்ளது. அூணாயிருந்தால் ராசன், தம்பி, குஞ்சன், என்ற பெயர் சொல்லி அழைப்பார்கள். மனோகரிக்கு அந்தப


மகிமை!

 

 கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று நீதிமன்ற உத்திரவு வந்து, அதை காவல் துறை தீவிரமாக அமுல் படுத்தத் தொடங்கியதில் நந்த குமாருக்கு ரொம்ப சந்தோஷம்! வீட்டில் எல்லோருக்கும் டூவீலர் இருக்கிறது! காலையில் அக்கா சித்ரா ஆபிஸுக்குப் போக ஸ்கூட்டியை எடுக்கும் பொழுது, “கஷ்டப்பட்டு தலை வாரினேன்!…அத்தனையும் கலையப்போகிறது!” என்று முணு முணுத்துக் கொண்டே ஹெல்மெட்டை எடுத்து தலையில் வேண்டா வெறுப்பாக அணிவாள்! அண்ணன் வாசு ஹெல்மெட்டை எடுத்து மாட்டும் பொழுது, “இந்த சனியனை வேறு தினசரி


உபகாரம்

 

 காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு லாகவமாக பைக்கை ஓட்டினாலும் அந்த இடத்தை அடைய முக்கால் மணி நேரம் ஆகலாம். ஸ்வேதாவின் கணவன் மகேஷ், “”கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பும்மா” என்று அவசரப்படுத்திக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஸ்வேதா கண்ணாடி முன் நின்று நிதானமாக ஏதோ ஒரு கிரீமை முகத்தில் பூசிக் கொண்டிருந்தாள். “”இதோ பாரு ஸ்வே… நாம ஒன்னும் செல்ஃபி எடுத்துக்கப் போகலை. உனக்கு இப்போ


கல்லுக்குள் ஈரம்

 

 கல் என்றல்ல கருங்கல் மனிதன் என்று ஆரணியின் ஆழ் மனதில் உண்மை தெரிந்த பெரிய மனிதர்கள் பலராலும் விதையாகத் தூவப்பட்டு அது விருட்சமாக நிலை கொண்டு வளர்ந்த நிலையிலேயே யாழ்ப்பாண மண்ணில் புகை விட்டு எரிந்த சண்டை நெருப்பினால் இடம் பெயர்ந்து போகும் மக்கள் வெள்ளத்தில் தானும் ஒருத்தியாய் அள்ளுண்டு அவள் கொழும்பு மண்ணில் கரை ஒதுங்கி வாழத் தொடங்கி அந்தக் காலக் கணக்கு கிட்டத்தட்ட ஒரு யுகம் போலாகிறது அவள் வாழ்வு ஒரு பெரிய வேள்விக்


வெளிச்சம் ஜாக்கிரதை

 

 திடுக்கிட்டு எழுந்திருப்பது வழக்கமாகிவிட்டது. டார்ச் விளக்கை, கடிகாரம் பக்கம் திருப்பினேன். மணி இரண்டு. நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை ஏதும் தோன்றவில்லை. அதன் பிறகு ஓர் இரவு கடிகாரத்தைப் பார்த்தேன்… மணி இரண்டு. அடுத்த இரவு எழுந்தேன்… மணி இரண்டு. அடுத்த இரவு, அடுத்த இரவு… என வாரக்கணக்கில், மாதக்கணக்கில் போய்க்கொண்டிருந்தது. எது காரணமாக இருக்கும்? சீக்கிரம் சாப்பிட்டுப் படுத்தேன். அப்போதும், இரண்டு மணி. தாமதமாகச் சாப்பிட்டுத் தூங்கப் போனேன். அப்போதும்