கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 13, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

நடைபாதை வாழ்வு

 

 அது நகரத்தின் மிகப் பிரதானமான சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடம். பார்க்கவே நல்ல பணக்காரக் களையுடன் புதிதாக வண்ணம் அடிக்கப்பட்டு விளங்கியது. வாசலில் சிவப்பு வண்ண கூண்டுக்குள் வட இந்திய வாயிற்காவலர், பச்சை நிறச் சீருடையில் ஜாவ், ஜாவ் என்றபடி பிளாட்பாரத்தில் நிற்பவர்களைக் கூட அதிகாரமாகத் துரத்திக்கொண்டிருந்தார். அடிக்கடி பல வகையான கார்களில் அலங்காரமாக நடுவயது பணக்கார பெண்மணிகள் வந்த வண்ணம் இருந்தனர். எதிரே பிளாட்பாரத்தில் பக்கத்து மதில் சுவற்றில் ஒரு புறமும், சாலையில் மறுபுறமும் ஆக


சிக்கந்தர் அப்பச்சி

 

 சிக்கந்தர் அப்பச்சி வீட்டு முற்றத்தில் இருக்கும் வெள்ளைப் புறாக்கள், என்னைச் சூழ்ந்து நிற்கின்றன. அப்பச்சியும் அப்பச்சியின் அம்மாவும், புறாக்களுக்கு அரிசிமணிகளைத் தூவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி புறாக்கள் பறப்பதும், தரை இறங்கி எங்களின் கால்கள் இடையே நடப்பதுமாக இருந்தன. குட்டியான நீலக்கண்கள் கொண்ட புறா ஒன்று, என் கால்களைக் கொத்தியது. வலி தாங்க முடியாமல் நான் கத்துகிறேன். பயத்தில் கண்விழித்துப் பார்த்தேன்… கனவு. பேருந்து, செங்கல்பட்டைக் கடந்துவிட்டது. எனக்கு அருகில் தூங்கிக்கொண்டு இருந்தவரைப் பார்த்தேன். அவர் தன் கையில்


ஒரே ஒரு தடவை

 

 அம்மா”ஏதோ வேலையாக இருந்த சீதா திரும்பினாள். கிடார் வகுப்பிலிருந்து சரவணன் வீடு திரும்பி இருந்தான். “”காபி கொண்டு வரட்டுமா?” “”வேண்டாம்மா. இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னு கேளு” “”யாரையாவது லவ் பண்றியா?” “”போம்மா நீ. ஒரு அம்மா தன் பையன் கிட்டே கேக்கற கேள்வியா இது? அதுக்கும் மேலே” “”அதுக்கும் மேலே மேலே எனக்கு உத்தரம் தான் தெரியுது.” ”சரி நானே சொல்றேன். எங்க மாஸ்டர் இருக்கார் இல்லை”” “”உம்” “”ரகுவரன் ஸார்” “”உம்”


டிரைவர் மாப்பிள்ளை

 

 யாழ்ப்பாணம் காரைநகர் வீதி வழமையான காலைப்பொழுதைத் தொடங்கியிருந்தது.பெரும்பாலான முக்கிய வீதிகள் திருத்தப்பட்டு சொகுசான வீதியாக மாற்றப்பட்டிருந்தபோதும் காரைநகரையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் வீதி மட்டும் குண்டும் குழியுமாகவே இருக்கிறது. யார் தவறோ தெரியவில்லை? “அரசனை நம்பி புரிசனையும் கைவிட்டது போல்”, வலி வடக்கு விடுவிப்பு, தமிழ்க்கைதிகள் விடுவிப்பு என பலதை நம்பி இந்த காப்பெற் போடுபவர்களைக் கைவிட்டு விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. அதிகரித்த வாகனப் பாவனையைத் தாங்கமுடியாது மானிப்பாய் வீதி நாளாந்தம் திணறித் திமிருகின்றது. ஆனால் அதில்


திருப்புமுனை

 

 வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்துக் கதவைத் தாழிட்டான். வீடு என்று கூற முடியாது, ஓர் அறை மட்டுமே. அதுவும் சுத்தம் செய்யப்படாமல் குப்பையாகக் காட்சியளித்தது. தோளில் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த பையைக் கழட்டி கட்டிலில் வைத்தான். அருகிலிருந்த பாட்டிலில் கடைசிச் சொட்டு தீரும் வரை தண்ணீரைக் குடித்து முடித்தான். வெளியே அடித்த வெயிலில் கருகிய உடல் அந்த நீரால் குளிர்ந்தது. பர்ஸை எடுத்துப் பார்த்தான். ரூபாய் நோட்டுகளை விடப் பயணச் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. ஒரு