கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 7, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

நேற்றைய மனிதர்கள்

 

 லண்டன் 2002 நேரம் இரவு நடுச்சாமத்துக்கு மேலாகிவிட்டது என்று படுக்கைக்குப் பக்கத்து மேசையில் வைத்திருக்கும் மணிக்கூடு சொல்கிறது. வேதநாயகம் தூக்கம் வராமற் தவித்துக்கொண்டிருந்தார்.அந்தப்பக்கம் இந்தப் பக்கம் என்று புரண்டுபடுத்தாலும் அவரின் மனதில் அலைபாயும் உணர்வுகளைத் தடுக்க அவரால் முடியவில்லை. மனதிலுள்ள பாரம் தொண்டையில் அடைபட்டு மூச்சுவிடக் கஷ்டமானதொரு உணர்வு. அவருக்கு வயது அறுபதாகிறது. வாழ்வின் மத்தியகாலத்தில் ஓரளவு மனத்திருப்தியுடன் வாழ்க்கையைக் கொண்டு நடத்தலாம் என்று கற்பனை செய்தவருக்கு,அவராற் தடுக்க முடியாத பல மாற்றங்கள் அவரைச் சுற்றி நடப்பதால்,ஏதோ


மாயத்தூண்டில்

 

 இரண்டு விடயங்கள்தான் இப்போது என்னைக் கடைந்துகொண்டிருக்கின்றன. ஆறுமாதமாக பணியில்லை. வேலையில் இல்லை என்பதை நான் சமாளித்தாலும் வெளியில் என்னைக் காண்பவர்களுக்கும் போனில் குடையும் மற்றவர்களுக்கும் இதுவே முதன்மையான பேசுபொருளாகவும் பிரச்சனையாகவும் இருக்கிறது. இப்போதான் ஆடத்தொடங்கியிருக்கும் முதற்பல்லை நாக்கால் நிமிண்டிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு “ உங்களுக்கு ஏம்பா வேலை ” என்றான் கடைக்குட்டி கந்தன். “ வேலைக்குப்போனாத்தானே மகன் காசுகிடைக்கும் ” “ அய்யோ அய்யோ, எதுக்கப்பா சும்மா மெனெக்கெட்டு வேலைக்கெல்லாம்போய்………. நேராய் பாங்குக்குப்போய் பேப்பரில கீறிட்டுக்குடுங்கோ………… காசுதருவாங்கள் ”


அக்கினிக் குண்டத்தில் ஓர் அழகு ரோஜா

 

 கோவிலில் இறை அருள் வேண்டி ஹோமம் செய்யும் பொருட்டு ஓம குண்டத்தில் தீ வளர்த்துத் தெய்வீகச் சடங்கு செய்வார்கள் இது அதுவல்லாத சதை உணர்வுகளால் வருகின்ற உலகியல் உறவு நடை முறைக் குடும்ப வாழ்க்கையின் புனிதங்களையே களங்கப்படுத்தும் ஒரு திரிபுபட்ட நிழற் கோல மனிதர்களின் உயிர் வதை செய்யும் அக்கினிக் குண்டத்தையே மையமாக வைத்து வருகின்ற கதை வெறும் பகிடிக் கதை பேசவல்ல இதன் தொனிப் பொருள் கதையின் ஆழத்துக்குச் சென்று உயிர் மறவாத உண்மையைக் கண்டறிய


இழப்பு

 

 மரத்தடி மேடையில் உட்கார்ந்திருந்த நாகு, எதிர்மரத்தில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருவியை வியப்புடன் மறுபடியும் பார்த்தான். அவன் அதை விரட்டுவது போல் செய்த சைகைகளால் பாதிக்கப்படாதது போல அது உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்று, அது அவனது சைகைகளை அலட்சியம் செய்து இருக்க வேண்டும். அல்லது அது ஆழ்ந்த சிந்தனையில் இருக்க வேண்டும். அது கண்களை அப்படி இப்படி சுழற்றிக் கொண்டிருந்ததிலிருந்து அதற்குத் தெரிகிற கண்கள்தான் இருக்க வேண்டும் என்று


குவளையின் மிச்சம்

 

 உலகம் என் போர்வையில் இருந்து விழிப்படையாமல் இருந்த காலை நேரத்தில், நண்பரிடம் இருந்து அலைபேசி ஒலிப்பு வந்தது. ‘வில்லியம்ஸ் போயிட்டான்டா…’ செய்தி, சுருக்கமாகவும் திகைப்பாகவும் இருந்தது. என் உயிருள்ள உடலுக்கும் வில்லியம்ஸின் சடலத்துக்கும் இடையே 40 நினைவுகளும், 40 கி.மீ தொலைவும் இருந்தன. தனது 54-வது வயதில் அத்தனை திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் காட்சியளித்த வில்லியம்ஸ், நேற்று இரவு இறந்துபோனார். வாழ்வின் தாட்சண்யமான அல்லது நிர்தாட்சண்யப் போக்குடன் அந்த ஊரில் இருந்ததில், அதன் பனியும், சில பணிகளும், சில